#மயிலாப்பூர்#திருவள்ளுவர் கோயில் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.
ஏகாம்பரேஸ்வரர்–காமாட்சி கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், மயிலாப்பூரில்
ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் கருதப்பெறுவதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. பொ.ஊ. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில் 1970-களில் விரிவாகப் புனரமைக்கப்பட்டது.
வள்ளுவரின் பிறப்பிடமாக பாரம்பரியமாக நம்பப்படும் இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும். சிலர் இதை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர். தமிழ் மொழி ஆர்வலர்களின் சந்திப்புக்கான இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது.
இக்கோவில் மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத் துறை பராமரிக்கிறது.
வள்ளுவர் காலத்திற்கு முன்பு மயிலாப்பூரில் தற்போதைய ஏகாம்பரேஸ்வரர்–வள்ளுவர் கோயில் வளாகத்தில் ஒரு கிராமப்புற சிவன் கோயில் இருந்ததாக நம்பப்படுகிறது.
வள்ளுவர் இந்த சிவன் கோயிலின் வளாகத்தில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் பிறந்ததாகவும் அங்கு அவர் ஒரு குழந்தையற்ற தம்பதியரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் என்றும் பாரம்பரியமாக கருதப்பட்டு வருகிறது.
மயிலாப்பூரில் வள்ளுவரின் சீடரும் வணிகருமான ஏலேலசிங்கன்
வள்ளுவரின் மரணத்திற்குப் பிறகு வள்ளுவரின் உடலைத் தங்கத் தாழியொன்றிலிட்டு நினைவாலயம் ஒன்றை நிறுவ எண்ணி அதை வள்ளுவரிடம் தெரிவித்ததாகவும்
வள்ளுவர் அதை மறுத்து வனவிலங்குகளுக்கு உணவளிக்கும் வண்ணம் தனது சடலத்தை ஊருக்கு வெளியிலுள்ள காட்டுப்பகுதியில் வீசிவிடுமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அவ்வண்ணமே செய்த ஏலேலசிங்கன் வள்ளுவரது சடலத்தை உண்ட காகங்களும் ஏனைய விலங்குகளும் "பொன் போல் மிளிர்ந்ததைக்" கண்டாரென்றும் வள்ளுவர் நினைவாக அக்கோயில் வளாகத்தில் ஒரு சன்னதியை எழுப்பினார் என்றும் கூறப்படுகிறது.
பொ.ஊ. 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அக்கோயில் இடிபாடுகளில் தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இக்கோயில் வள்ளுவருக்குக் கட்டப்பட்ட மிகப் பழமையான கோயிலாகும்.
ஆங்கிலேய அரசாட்சியில் சென்னை மாகாணத்தின் அரசு ஊழியராக இருந்த எல்லீசனார் என்றழைக்கப்படும் பிரான்சிஸ் வைட் எல்லிஸ் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராயப்பேட்டையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் எழுப்பிய கல்வெட்டில் மயிலாப்பூர் வள்ளுவர் கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஏகாம்பரேஸ்வரர் கோவில் வள்ளுவரின் பிறப்பிடமாக பொதுமக்களாலும் வரலாற்றாசிரியர்களாலும் பரவலாகக் கருதப்படுகிறது.
சிலர் இக்கோவிலை வள்ளுவரின் நினைவிடமாகவும் கருதுகின்றனர்.
வள்ளுவர் வைகாசி அனுஷத்தில்பிறந்து மாசி உத்திரத்தில்
ஜீவமுக்தி அடைந்ததாகக் கருதப்படுகிறது.
1989-ம் ஆண்டு திருமயிலையின் திருக்கோயில்கள் என்ற தலைப்பில் எஸ். ராஜேந்திரன் எழுதிய நூலில், தற்போதைய கோயில் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.
மயிலாப்பூரில் உள்ள பல்வேறு சிவாலயங்களின் வரலாற்றைக் கூறும் திருமயிலை தலபுராணம் என்ற தனது நூலில் நாதமுனி முதலியார் இக்கோயிலின் வரலாற்றை 54 தமிழ்ப் பாடல்களில் முன்னரே ஆவணப்படுத்தியிருப்பதையும் ராஜேந்திரனின் நூல் குறிப்பிடுகிறது.
நாதமுனி முதலியாரது நூலின் திருத்தப்பட்ட பதிப்பு 1929-ல் என். சிங்காரவேலன் முதலியாரால் வெளியிடப்பட்டது.
தி டெம்பிள் டைரக்டரி ஆஃப் மெட்ராஸ் சிட்டி என்ற நூலானது வள்ளுவர் கோவில்
பெனாரஸ் அரசரால் கட்டப்பட்டது என்று கூறுகிறது.
எனினும் அது இக்கோயில் கட்டப்பட்ட சரியான காலத்தைக் குறிப்பிடவில்லை.
சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தின் சமயவியல் பேராசிரியரான ஜோஅன் பன்ஸோ வாக்ஹார்ன் இந்தக் கூற்றை தனது படைப்பில் மேற்கோள் காட்டுகிறார்.
மேலும் 1990-ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கை வள்ளுவர் கோயில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறுகிறது. நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் செட்டியார்
சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து 1935-ல் இக்கோயிலைப் புனரமைக்கும் பணிகள் சிலவற்றைச் செய்ததாகவும்
அவர் குறிப்பிடுகிறார்.
பழைய கோவிலின் தலவிருட்சத்தின் எச்சங்கள் 1973 முதல் நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதே ஆண்டு வள்ளுவரின் பாதகமலங்களுடன் வள்ளுவரின் தந்தை பகவனின் சிலை, குழந்தை வள்ளுவரை ஏந்திய பாணியில் தாய் ஆதியின் சிலை,
தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் வள்ளுவரின் சிலை ஆகிய மூன்று சிலைகளும் அந்த நினைவுப் பீடத்தில் நிறுவப்பட்டன.
20-ம் நூற்றாண்டு தமிழக அரசால் புனரமைக்கப்பட்ட பிறகு, இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைத் தவிர பண்டைய கோவிலின் வேறெந்தத் தடயங்களும் காணக்கிடைக்காமல் போய்விட்டன.
சன்னதியில் உள்ள வள்ளுவர் சிலையும் கோயிலில் பாதுகாக்கப்பட்டுவந்த பல பனையோலைச் சுவடிகளுடன் புனரமைப்பிற்குப் பின்னர் அரசால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோவிலில் உள்ள வெண்கல சிலைகள் 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
1973-ஆம் ஆண்டின் குடமுழுக்குக்குப் பிறகு 1985-ஆம் ஆண்டிலும் அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மிக சமீபத்தில் 2020-ஆம் ஆண்டு இக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வள்ளுவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் வைகாசி அனுஷத்தில் (மே மாதம்) கொண்டாடும் மரபு 1935 மே மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் பச்சையப்பன் கல்லூரி அரங்கத்தில் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய கருத்தரங்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வள்ளுவர் ஆண்டும் வள்ளுவர் தின விழாக்களும் அப்போதுதான் முதன்முறையாக அறிவிக்கப்பட்டன.
இம்மாநாட்டின் முதல் நாள் கூட்டம் முடிந்ததும் அங்கு திரண்டிருந்தோர் வள்ளுவர் கோவிலுக்கு ஊர்வலமாகத் திரண்டு வந்து வெகுஜன வழிபாடு செய்தனர்.
தற்போது மாநில அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் அதற்கு முன் சிவஞான முதலியார் என்பவரின் ஆளுகைக்குள் இருந்து வந்தது.
சப்த ஸ்தான சிவாலயங்கள் என்றழைக்கப்படும்
காரணீஸ்வரர் கோயில், தீர்தபாலீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில்,
விரூபாஷீஸ்வரர் கோயில், வாலீஸ்வரர் கோயில், மல்லீஸ்வரர் கோயில், கபாலீஸ்வரர் கோயில் ஆகிய ஏழு சிவாலயங்களைக் கொண்ட மயிலாப்பூரில் எட்டாவது சிவாலயமாக ஏகாம்பரேசுவரர்–வள்ளுவர் கோயில் சிறப்பு பெற்றுள்ளது.
சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய
வானியல் சாஸ்திரம்
சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
சகல உயிர்களுக்கும் தாயான அம்பாள் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’யாக அருள்பாலிக்கிறாள்.
1
கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி.
2
கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தையும் விலக்கி குழந்தை வரத்தை அருளுகிறாள். மேலும், கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும்.
ஒரு சமயம், அபூர்வமான மந்திரம் ஒன்றை ஆஞ்சநேயருக்கு உபதேசித்த ஸ்ரீராமர், 'ஆஞ்சநேயா... இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்; எல்லாருக்கும் சொல்லி விடாதே... பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால், இதை மனதிற்குள் உருவேற்று; வெளியிடாதே...' என்று கூறினார்.
மறுநாள், ஏதோ பறை ஒலிக்கும் சத்தம் கேட்டு, உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ஸ்ரீராமர், திடுக்கிட்டார். காரணம், அங்கே, ஸ்ரீராமர், ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை, பறை அறிவித்து, வீதிவீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
கோபமடைந்த ராமர், ஆஞ்சநேயரை வரவழைத்து, 'என்ன காரியம் செய்கிறாய்... பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை, பறை அறிவித்து சொல்கிறாயே...' என்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையை தலைநகராகக் கொண்டு அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது.
ஒரு பொங்கல் திருநாள் அன்று அமைச்சர்கள், படைவீரர்கள் புடைசூழ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தான் அபிஷேகப் பாண்டியன். கோவிலுக்கு மன்னர் வருவதைக் கண்ட பக்தர்கள் அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கினர்; ஒருவரைத் தவிர. அதைக் கண்டு மன்னனுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.
அதற்குள் பணியாள் ஒருவன், ‘மன்னா! இவர் ஒரு சித்தர். சித்து வேலைகள் பலவற்றை நிகழ்த்தி இருக்கிறாராம்’ என்றான்.
தன்னை அலட்சியப்படுத்தியவர் ஒரு சித்தர் என்று அறிந்ததும், அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தான் மன்னன்.
சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் காலை உதயவேளையில் கோபுரவாயில் மண்டபங்களைக் கடந்து கருவறையில் நிறைந்து சிவலிங்க மூர்த்தியை ஜோதி மயமாக்கும் திருத்தலங்களும் உண்டு. பொங்கல் நன்னாளில் இத்தலங்களையும் அருகிலுள்ளோர் தரிசிக்கலாம்.
1
இந்த தலங்களும் பாஸ்கர க்ஷேத்திரங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்களில் சூரியனின் ஒளி ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களில் கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. சிலர் இது கட்டிடக்கலை நுணுக்க அமைப்பால் அமைந்த விந்தை என்பர்.
2
என்றாலும் பக்திமான்கள் சூரியன் தன் ஒளிமாறாமல் சிவபெருமானை வழிபாடு செய்யும் நிலை என்றே எண்ணுவர். பெரும்பாலும் காலைவேளைகளில் மட்டுமே இவ்வாறு ஒளிக்கதிர்கள் இறைவன் மீது படியும் வகையில் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.