ரிஸ்வான் என்கிற 23 வயது இளைஞர் உணவு டெலிவரி செய்ய சென்ற போது உணவை ஆர்டர் செய்தவரின் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று அவரை தாக்க முயற்சிக்கிறது,அதில் அவர் எதிர்பாராத விதமாக மூன்றாம் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்படுகிறது.பலத்த காயத்துடன் மருத்துவமனையில்…
…அனுமதிக்கப்பட்ட ரிஸ்வான் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துவிட்டார்.
வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களை பற்றிய விவாதங்கள் ஒருபுறம் சமூக வலைதளங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.மற்றொரு புறம் Swiggy நிறுவனம் இந்த நபருக்கு humanity ground இல் எதாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஏன் Swiggy நிறுவனம் humanity ground இல் அந்த delivery executive க்கு எதாவது இழப்பீடு வழங்க வேண்டும்.Swiggy நிறுவனத்திற்கு அந்த obligation இருக்கிறதா இல்லையா?
கடந்த 11 ஆம் தேதி இந்த விபத்து சம்பவம் நடந்திருக்கிறது,நேற்று விபத்திற்குள்ளான நபர் இறந்திருக்கிறார்.இந்த நொடிவரை Swiggy நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் இந்த இறப்பை பற்றி எதையுமே பதிவு செய்யவில்லை.இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த 23 வயது இளைஞரின் உயிரை காவு…
…வாங்கியது வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல் வரை சென்று உணவை தரவேண்டும் என்கிற doorstep delivery policy தான்.அதை enforce செய்தது Swiggy நிறுவனம்.தன்னுடைய delivery partner என்ன உடை அணிய வேண்டும்,என்ன தொப்பி அணிய வேண்டும், எவ்வளவு நேரத்தில் உணவை பிக் செய்ய வேண்டும், எவ்வளவு…
…நேரத்தில் உணவை டெலிவரி செய்ய வேண்டும்,கஸ்டமரிடம் எப்படி பேச வேண்டும் என அத்தனை அசைவுகளையும் Swiggy நிறுவனம் ஒரு கங்காணியை போல கட்டுப்படுத்துகிறது.ஆனால் விபத்து ஏற்படும் பட்சத்தில் அவர் ஒரு delivery executive சுயவிருப்பத்தின் பேரில் இந்த தொழிலில் ஈடுபடுபவர் என கூறி ஒரு…
வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு முழுக்க முழுக்க employer தான் பொறுப்பு என employees compensation act சொல்கிறது.இந்த சட்டத்தின் அடிப்படையில் ரிஸ்வான் குடும்பத்தினருக்கு Swiggy 25 லட்சம் வரை இழப்பீடு கொடுக்க வேண்டும்.
ஆனால் Swiggy இதுவரை வாய்திறக்கவில்லை.எதாவது கேள்விகள் எழும் பட்சத்தில் ரிஸ்வான் ஒரு gig worker, Swiggy யின் ஊழியர் கிடையாது என்று சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று அந்த நிறுவனத்திற்கு நன்றாக தெரியும்.
TTF Vasan போலவே எங்கள் ஊரில் ஒரு நண்பர் DJF VLOGS என்கிற ஒரு You tube channel வைத்திருக்கிறார்.வெறும் 39 மணிநேரத்தில் கோவையிலிருந்து லடாக் சென்ற TTF வை போல, திருத்துறைப்பூண்டியிலிருந்து-லடாக்கை மூன்று நாளில் அடைவதுதான் திட்டம்.வீட்டில் தஞ்சாவூர் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு
லடாக் கிளம்புகிறார்.
கையில் பண இருப்பு வெறும் 3000 ரூபாய்தான்,Sponsorகளை நம்பி லடாக் வரை பயணம் செய்ய வேண்டும்,நான் செய்வது சரியா தவறா,கழுத்தை நெறிக்கும் கடன்,லடாக் சென்று வந்தால் எதாவது மாறுமா என்று பார்க்கலாம் என்றுதான் அவருடைய வீடியோ தொடங்குகிறது.
அவருடைய You tube கணக்கில் சுமார் 127k subscribers. Shorts மூலம் இந்த அளவு ரீச் அடைந்திருக்கிறார்.
பயணம் ஆரம்பித்து மூன்று நாள்,நான்கு நாள்,ஐந்து நாள்,பத்து நாள் ஆகியும் லடாக்கை அடைய முடியவில்லை.கிட்டத்தட்ட காஷ்மீர் வரை சென்று லடாக் செல்லாமல் வண்டியை ஒரு ட்ரெயினில் ஏற்றிவிட்டு
தங்களது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக பாஜக எடுத்திருக்கிற தற்போதைய weapon இந்த freebies.
கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் write off செய்யப்பட்ட கார்ப்பரேட் கடன் தொகை கிட்டத்தட்ட 9 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்.
Write off என்றதுமே சங்கிகள்
write off is different...Waiver is different என்று சங்கை கடிக்க வந்துவிடுவார்கள்.அதற்கும் சிறிய விளக்கம்.
தள்ளுபடி என்பது அரசாங்கம் ஒரு கடனை 100 சதம் தள்ளுபடி செய்வது எடுத்துக்காட்டு கல்வி கடன்கள்.மொத்தமாக தள்ளுபடி செய்தாலும் அதனால் ஏற்படும் இழப்பு மிகச்சிறியது.
Write off என்பது ஒரு legal process மூலமாக ஒரு கார்ப்பரேட் கடனை 90 சதவீதம் தள்ளுபடி செய்வது..அதாவது 30000 கோடி கடனில் வெறும் 3500 கோடியை மட்டும் வசூலிப்பது..write off நிறுவனமாக்கப்பட்ட கொள்ளைமுறை.
கடந்த 5 ஆண்டுகளில் இவ்வளவு மக்கள் பணத்தை கார்ப்பரேட்டிடம் வாரிக்கொடுத்திருக்கும்
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியிருக்கிற காடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
வீரப்பனுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேவாரம் தலைமையிலான அதிரடிப்படை சத்தியமங்கல காடுகளில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுடைய ஒடுக்குமுறையை செலுத்தினர்.காடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்த பழங்குடியின மக்களின் காடுகளுடனான உறவு இந்த அதிரடிப்படையால் முறிக்கப்பட்டது.
உணவு சேகரிக்க செல்லும் பழங்குடியின சிறுவர்கள் வீரப்பனுக்கு துப்பு சொல்ல செல்கிறார்கள் என்று சொல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.கர்ப்பம் தறிக்கிற ஒவ்வொரு பெண்ணும்,இந்த கர்ப்பத்திற்கு காரணம் வீரப்பன்தானே?எப்போ வந்தான்,ஏன் எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று கேள்விகளை…
வெள்ளையர்கள் 'நீக்ரோ' என்ற சொல்லை முழுமையாக கூட சொல்வதில்லை 'நிக்கர்'என்று சொல்லி மலினப்படுத்துவார்கள்.நிறவெறி கொண்ட வெள்ளையர்கள் மட்டுந்தான் இப்படி வெறுப்பில் இச்சொல்லை ஆள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.
கொஞ்சம் காலத்துக்கு முன்னர் நான் பணியாற்றிய கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக இருந்த ஒருவர் அமெரிக்கா செல்ல இருந்தார்.மெத்த படித்த இந்தியர்களின் குறிக்கோள் அமெரிக்காவில் பணிபுரிவதும் குடியேறுவதும்தானே.அந்தச் சமயத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்தபொழுது,'உங்க அமெரிக்க பயணம் எப்போ?
என்று கேட்டேன்.'எல்லாம் தயார்தான்....ஆனால் அந்த எம்பஸியில் ஒரு பிளடி நிக்கர் என்னென்னவோ கேட்டுண்டு இருக்கான் என்றார்.நீக்ரோ-நிக்கர் என்ற சொற்களை நான் பலமுறை கேட்டவன்தான்.
மத நிறுவனங்கள் நடத்தும் நாடகங்களில் சாத்தானுக்கு கருப்பு நிற உடைகளுக்கு பதிலாக 'சிகப்பு' நிற உடைகள் அணிவிக்கப்பட்டது...
அந்த சிகப்பு நிறம் வளர்ச்சி எதிரானது....
அந்த சிகப்பு நிறம் அறிவியலுக்கு எதிரானது....
அந்த சிகப்பு நிறம் பெண் விடுதலைக்கு எதிரானது....
அந்த சிகப்பு நிறம்..
ஜனநாயகத்துக்கு எதிரானது...என்கிற பிரச்சாரங்கள் ரஷ்ய புரட்சியை எதிர்த்து உலகமெங்கும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன.
பொய் பிரச்சாரங்களுக்கு பதிலடியாக,உலகின் முதல் செயற்கைக்கோளை(sputnik) கம்யூனிஸ்ட் ரஷ்யா விண்ணில் செலுத்தியது.
விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன்,முதல் பெண்மணி,முதல் விலங்கு கம்யூனிஸ்ட் ரஷ்யாவை சார்ந்தது.கல்வி,மருத்துவம்,சுகாதாரம் அனைத்திலும் கம்யூனிஸ்ட் ரஷ்யா முன்மாதிரியாக திகழ்ந்தது .