#படித்ததில்_பிடித்தது

*#கோவில்_காளை*

மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாகஅலங்காநல்லூர்,
பாலமேடு மற்றும்
அவனியாபுரம்
பகுதிகளில்
*சாமி மாடு*
என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்துஓடவிடுவார்கள்.
அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு.
விபரம் அறிந்தவர்களுக்குத்
தெரியும் அந்த மாடு *மாவீரன் அழகாத்தேவன்* நினைவாகவே
அவிழ்த்துவிடப்படுகிறது என்பது.

யார் இந்த அழகாத்தேவன்?

மதுரை மாவட்டத்தில்
சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர்
கருத்தமாயன். நிலபுலன்களோடு
வாழ்ந்த செல்வந்தர்.
அவரது கடைக்குட்டி
அழகாத்தேவன் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி.அழகாத்தேவனுக்கு கால்கட்டு(கல்யாணம்) போட்டுவிட்டால் பையன்
ஒழுங்காக இருப்பான் என்று
பெரியவர்கள் கூறியதைக் கேட்ட
கருத்தமாயன் பெண் பார்க்கும்
படலத்தைத் தொடங்கினார்.
நாகமலைக்கு அருகேயுள்ள
கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும் கருத்தமலையின்
மகள் ஒய்யம்மாள்குறித்து அறிந்து, தன் செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்த மாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார்
கருத்தமலைக்கோ ஏகமகிழ்ச்சி.
தனது மகளைப் பெண்பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள்தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்தபின்னர் கருத்தமாயன், தனது மகன்அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளைக்கேட்கிறார்.
கருத்தமலையோதனதுமகளிடம்ஒருவார்த்தைகேட்கவேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார்

அவளுக்குப் அழகாத்தேவனைப்
பிடித்துப்போனாலும், நிபந்தனை
ஒன்றை விதிக்கிறாள்.
தான் வளர்த்துவரும் ஏழு காளைகளை அழகாத்தேவன்அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக்
கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால்தனது வீட்டில் பண்ணை அடிமையாக
வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை
விதிக்கிறாள்.
இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக்கொள்கிறான். காளையை
அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள்
தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு
இணைந்து கடும் பயிற்சி
மேற்கொள்கிறான் அழகாத்தேவன்.
அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப்பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் சனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன்,
வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான்
அனைத்துக் காளைகளையும் மிகத்திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு
மல்லுக்கட்டுகிறான்கடுமையான
போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது.
குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும்
வாக்குக் கொடுத்த காரணத்திற்காக கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம்
தெரிவிக்கிறார்.
சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில்பெயர் பெற்ற தங்களதுகாளைகளை அடக்கிவிட்டானே என்ற பொறாமையின்
காரணமாக ஒய்யம்மாளின்
சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப்
பிடிக்கவில்லை.
ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து, அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணை சரிக்கட்டி, அவனது
உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்து விடுகிறார்கள்!!
இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத்
தெரியவரும்போது,தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு
உடன்கட்டை ஏறி தனது உயிரை
மாய்த்துக்கொள்கிறாள்

அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு
அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில்
கோயில் கட்டி வணங்கி வருகின்றனர்.
கருவறையில் காளையோடு
அழகாத்தேவன் நிற்க... அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு
வளைவில் நண்பன் தோட்டி
மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர்
நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள்
இன்றும் தழும்பாய் சுமந்து
கொண்டிருக்கின்றன... சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்.தோட்டி மாயாண்டி காவல் நிற்க...
அழகாத்தேவன்
கருவறையில் காளையோடு
அருள்பாலித்து கொண்டிருக்கிறான்

இந்த 400 ஆண்டு கால வரலாற்று கதை மதுரை வாசிகள் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.🙏🙏🙏🙏🙏

#படித்ததில்_பிடித்தது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Jan 18
*அருள்மிகு சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில், தோவாளை, கன்னியாகுமரி*

*திருவிழா*

இக்கோயிலில் கந்த சஷ்டி விழாவும், சூரன் திருவிழா, ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை மலர் முழுக்கு விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

1 Image
*தல சிறப்பு*

மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிவது சிறப்பு.

2
*பொது தகவல்*

இந்த ஊரில் மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிகின்றனர். 108 படிகள் ஏறிச்சென்றால் குமரன் கோயிலை அடையலாம்.

3
Read 15 tweets
Jan 17
*பேராசை பெரு நஷ்டம்*🌹

திருவெண்ணெய்நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என
நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய
பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று. Image
ஒரு நாள் —
வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு
சென்றான்.
வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை
கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது.
வண்டியை விட்டுஇறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக்
கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.
Read 20 tweets
Jan 17
#படித்ததில்_பிடித்தது

"இங்க் பென் இருக்கா?"

ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"

"இங்க் இல்லை சார், பேனா மட்டும்தான்"
வேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன்.

அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது,

வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது.
மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று ஹிக்கின்பாதம்ஸ் போனேன்.

அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.

இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன்.

( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ?
12/= ரூபாய்.)
Read 26 tweets
Jan 17
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் அமைந்துள்ள ஆல்கொண்டமால் கோவில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கும் அதிசய திருத்தலம் ஆகும்.
தல வரலாறு :

பரமபத நாதனாகிய பரந்தாமன் துவாபரயுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன்- யசோதை தம்பதியிடம் மகனாக வளர்ந்து வந்தார்.
அவர் கறவை கணங்களை மேய்த்து வந்த காரணத்தால், வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கண் நீங்காத செல்வத்தை அளித்தன. கண்ணபிரானின் திருக்கண் பார்வையால் ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடியின்றி வாழ்ந்தனர்.
Read 17 tweets
Jan 17
*மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எட்டு நிலைகளைக் குறிக்கும் கணபதி மூர்த்திகள்*

மனிதன் வாழ்க்கையின் எட்டு நிலைகளைக் குறிக்கும் எட்டு கணபதி மூர்த்திகளின் சக்திகளை ஒரு சேரப் பெற்ற ஸ்ரீவரத கணபதி மூர்த்தி வழிபாடு எந்நிலையிலும் மாறாத லட்சுமி கடாட்ச சக்திகளை கைக்கொள்ள அருள்புரியும்.

1
ஸ்ரீவரத கணபதி ...

ஒருமுறை சிவனும் பார்வதியும் கயிலையின் சித்திர மண்டபத்தில் இருக்கும் மந்திரங்கள் மீது அருள்பார்வை செலுத்தினர். அப்போது, மந்திர உயிர்நிலை ஒளி வட்டம் இட்டது. அந்த வட்டத்தில் இருந்து தண்டம் ஒன்று நீண்டது. தண்டம் ஒலியாக தழைத்தது.

2
அந்த ஒளி&ஒலியிலிருந்து உதித்தது ஒரு திருவடிவம். அந்த வடிவமே ஸ்ரீவரத கணபதி.

தவ சீலர்கள் தங்கள் எண்ணம் ஈடேற வணங்க வேண்டிய மூர்த்தி. குறிப்பாக 4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி.

3
Read 23 tweets
Jan 16
அம்பாளின் சாகம்பரி அலங்காரம் !

ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார்.

அங்கிருந்த சாஸ்திரியிடம், “பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள்.
இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.
“இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த சாஸ்திரி, அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!” என்றார் பணிவுடன்.

பெரியவர் அவரிடம்,“அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா,” என்று சொல்லி விட்டார்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(