நாட்டில் எவ்வளவோ பிரச்சனை உள்ளது, இதை பற்றி ஏன் பேச வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பதிவை கடந்து செல்லலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கூட சிறிதளவு பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.
(1)
அந்த வகையில் #BiggBossTamil வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல இந்த சமூகத்தின் ஒரு முன்மாதிரி (Prototype) என்று தான் என் புரிதல். இது ரியாலிட்டி ஷோ என சொல்லிக் கொண்டாலும் இதை ஒரு Social experiment எனவே பல உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
(2)
காஸ்மோஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் பிஹேவியரல் சயின்சஸ் (CIMBS) இயக்குனர் "சுனில் மிட்டல்" பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது "வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் மூடிய இடத்தில் வாழும் மக்களை வைத்து நடத்தப்படும் ஒரு சுவாரஸ்யமான Social experiment" என்று கூறுகிறார்.
(3)
சாதாரண பொதுமக்கள் கூட அந்த நிகழ்ச்சியிலிருந்து சில கற்பிதங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கென ரசிகர் பட்டாளம் உள்ளது, அந்த ரசிகர்கள் அவர்களை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை போல நடந்துகொள்ளவும் செய்கிறார்கள் என சொல்கிறார்,
(4)
Dr. அனிதா கௌதம் (Director Clinical Operation and Consultant Psychiatrist, Gautam Hospital and Research Center)
சமூக வலைதளங்களில் பார்த்தால் இவர்கள் சொல்வது ஏறக்குறைய உண்மை என்பதை புரிந்துகொள்ள முடியும்.
(5)
கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் #BiggBossTamil நிகழ்ச்சியின் கடைசி சில நாட்கள் இது. இந்நிலையில் இந்த சீசனில் அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்குமிடையில் தான் கடினமான போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. சமூகவலைதளங்களை பார்த்தாலும் நமக்கு அது புரியும்.
(6)
இருவரும் இரு துருவங்கள் என்றே எனக்கு தோன்றுகிறது, தான் வெற்றிபெற யாரை வேண்டுமானாலும் தரக்குறைவாக பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி எதிராளியை காயப்படுத்தலாம், பெண்களை சற்றும் மதிக்காமல் இழிவாக பேசலாம்,
(7)
கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் தனிமனித தாக்குதல் செய்யலாம் என முதல் நாளில் இருந்தே இவற்றை சற்றும் தளராமல் செய்து வருகிறார் அசீம், அதற்கு நேர் எதிராக எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் கண்ணியத்துடனும் சக போட்டியாளர்களை மரியாதையுடனும், எந்த இடத்திலும் தான் கொண்ட கொள்கைக்கு
(8)
உண்மையாகவும் நடந்துகொள்கிறார் விக்ரமன்.
நம் வீட்டிலோ நம் நண்பர்களோ யாராவது ஒருவர் அசீம் போன்று நடந்து கொண்டால் நம்மால் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியுமா என கேட்டால் 100% முடியாது என தான் சொல்வோம். ஆனால் எப்படி இவரை சமூகவலைதளங்களில் ஆதரிக்கிறார்கள் என ஆச்சரியமாக உள்ளது.
(9)
சிலர் காசுக்காக வேலை செய்கிறார்கள் என சொல்லலாம், ஆனாலும் சிலர் உண்மையாகவே அசீமை ஆதரிக்கிறார்கள், அவர்கள் மனநிலையை நினைத்தால் சற்று கவலையாக உள்ளது. அசீம் செய்வது சரி என வாதிட அவர்கள் சொல்லும் காரணம், அவர் இப்படி நடந்து கொள்வது இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக்குகிறது என்பது தான்
(10)
ஒன்றை சுவாரசியமாக மாற்ற இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதலே அடிப்படையில் தவறு. சிலர் இந்த செயல்களை கெத்து என சொல்கிறார்கள், அவர்களுக்கு நான் சொல்வது இது கெத்து அல்ல Abusive Behaviour. மற்றொறு வாதமும் உள்ளது அவர் கோவத்தில் செய்கிறார் என்பது,
(11)
ஒருவர் கொலை செய்துவிட்டு நான் கோவத்தில் செய்தேன் என சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டோமல்லவா, பிறகு எப்படி தன் இழி செயல்களுக்கு கோவத்தை காரணம் காட்டினால் மட்டும் ஏற்றுக் கொள்ள முடியும்!? எல்லா இழி செயல்களையும் செய்துவிட்டு கோபத்தின் பின்னால் ஒளிந்துகொள்கிறார் அசீம் அவ்வளவு தான்.
(12)
வேறு சிலர் அசீமை ஆதரிக்க சொல்லும் காரணம், அவரை அனைவரும் வெறுக்கின்றனர், அசீமை கார்னர் செய்கின்றனர் என்று.
அசீமை அனைவரும் எதிர்க்க காரணம் அவர் மற்றவர்களை நடத்தும் விதமும் அவரின் Narcissistic Behaviour - உம் தான்.
ஒருவர் தொடர்ந்து வெறுப்பை உமிழும் போதும்,
(13)
Abusive ஆக நடந்துகொள்ளும் போதும் அவரை எதிர்க்காமல் வேறு என்ன செய்ய வேண்டும்!?
அசீமை எதிர்க்க காரணம் அவர் மீதுள்ள தனிமனித வெறுப்பு அல்ல, அவரின் Narcissistic Behaviour க்கு எதிராக எழும்பும் மனநிலை அவ்வளவு தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் அசீம் ஆதரவாளர்களே.
(14)
விக்ரமனை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணம் அவர் அரசியல்வாதி, அவர் இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேசுகிறார் என்பது தான். எனக்கு என்ன புரியவில்லையென்றால் சக போட்டியாளரை தரக்குறைவாக பேசுவதை ஏற்றுக்கொள்வார்களாம் அரசியல் பேசினால் எதிர்பார்க்களாம்.
(15)
விக்ரமன் இந்த நிகழ்ச்சியில் நடந்துகொள்வதும் பேசுவதும் குறித்து முன்பே ஒரு இழை எழுதியுள்ளேன் அதையும் இங்கு இணைக்கிறேன், முடிந்தால் படித்துப் பாருங்கள்.
சமூகத்தில் இத்தனை காலம் நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகள் சரியல்ல அவற்றை சரிசெய்ய வேண்டும் என பேசினால், சமூக இடர்களை கேள்வியெழுப்பினால் அது நடிப்பு என சொல்வது ஒரு வித ignorant மனநிலை. பொதுபுத்தியை கேள்வி கேட்பவர்களை ஒதுக்கும் மனநிலை தான் விக்ரமனை பலரும் எதிர்க்க காரணம்.
(17)
முக்கியமாக ஒருவர் எப்படி எப்போதும் சரியாக பேச முடியும் என கேட்டு, விக்ரமன் எப்போதும் சரியாக பேசுவதால் அவர் நடிக்கிறார் என சொல்வது நகைப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவர் எப்போதும் சரியாக இருக்க முடியாது, சரி தான் ஆனால் எல்லா சூழலிலும் Politically correct ஆக இருக்க வேண்டும் என
(18)
தொடர்ந்து முயற்சி செய்கிறார், Concious ஆக தான் இதை செய்கிறேன் என விக்ரமனே பல இடங்களில் பதிவு செய்துள்ளார். இயல்பாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு abusive - ஆக இருப்பதற்கு, கான்சியஸாக சரியாக நடந்து கொள்வது தான் சமூகத்திற்கும் நமக்கும் நல்லது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
(19)
சமூகத்திற்கு சரியான உதாரணமாக இருக்க வேண்டும், தன்னால் யாரும் தவறான தாக்கத்திற்கு உட்பட்டு விடக்கூடாது என நினைத்து, தன் வார்த்தைகளிலும் செயல்களிலும் கவனம் செலுத்தி சரியாக நடந்து கொள்வதை இயல்பாக்கிக் கொண்டுள்ளார் விக்ரமன், இதை தவறு என சொன்னால்
(20)
நாம் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என புரிந்து கொள்ளலாம்.
#BiggBossTamil6 நிகழ்ச்சி அதன் முடிவை எட்டியுள்ள இந்த நாட்களில், வெற்றியாளர் யார் என முடிவு செய்வது பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தான்.
(21)
சமூகத்திற்கு எந்த வகையிலும் நன்மை பயக்காத narcissistic behaviour உள்ள ஒருவரை ஆதரிப்பதும் அவருக்கு வாக்களிப்பது அவர் வெற்றிபெறுவதும் சமூகத்தில் ஒரு தவறான முன் உதாரணமாக மாறிவிடும். தரக்குறைவாக நடந்து கொண்டாலும் வெற்றி பெறலாம் என்ற மனநிலையை உருவாக்கி விடும், அது சரியல்ல.
(22)
எந்த நிலையிலும் தன் கொள்கையை சமரசம் செய்யாமல், வெகுஜன மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் சமூக நீதி கருத்துக்களை சமரசம் இல்லாமல் எடுத்து வைக்கும் விக்ரமன் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பது, நேர்மைக்கு கிடைக்கும் வெற்றியாக இருக்கும்.
(23)
நியாயமாக நடந்து கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று பொது சமூகத்திற்கு ஆழமாக சொல்லும் வெற்றியாக இருக்கும் விக்ரமன் வெற்றி பெற்றால்.
பா. ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் பேசப்பட்ட சில புத்தகங்கள் குறித்த சில தகவல்கள்.
மெட்ராஸ் திரைப்படத்தில் "ஜி.கல்யாண ராவ்" அவர்கள் எழுதிய "தீண்டாத வசந்தம்" புத்தகத்தை காண்பித்திருப்பார்.
பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அடையாளத்தையும்,
(1)
அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்பதனை, நிலாத்திண்ணை வழியே எல்லண்ணா குடும்பத்தின் ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக நமக்கு படம் பிடித்துக்காட்டும் உணர்வுப்பூர்வமான புத்தகம்.
(2)
கபாலி திரைப்படத்தில் "ஒய்.பி.சத்தியநாராயணா" அவர்களின் "My Father Baliah" எனும் புத்தகம் காண்பிக்கப்பட்டிருக்கும்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரு தலித் குடும்பத்தின் அசாதாரணக் கதை இது. நர்சியா தன் தந்தைக்கு ஒரு நிஜாம் அவர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட நிலத்தை இழந்து,
நீலம் இது ஒரு நிறம் மட்டுமல்ல இச்சமுதாயத்தில் அது ஆற்றிய தொண்டுகள் பல. ஆம், நீலம் என்றாலே நினைவிற்கு வருவது நம் நாட்டின் புரட்சியாளர் கற்பி புரட்சி செய் ஒன்று சேர் என்று கூறிய மாமேதை,
சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்றுறைத்த சீர்திருத்தவாதி.
(1)
நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை , இதற்கெல்லாம் மேலாக "#ஜெய்_பீம்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர், அவர் தான் பாபா சாகேப் என்றழைக்கப்படும் Dr. B. R . அம்பேத்கர்.
(2)
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,உயர் கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்,பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர், தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்து கலகம் செய்தவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்;
(3)
உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய மற்ற ஜீவராசிகளுக்கு புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால் அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகின்றன.
(1)
இதில் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை.
பிறவியில் இயற்கையாய் உள்ள பேதங்களின் சிறு மாறுதல்களின் அடிப்படையில் பேதங்களின் அடிப்படையிலும் பேதங்களைக் காண்பதற்கில்லை. ஜீவ நூல் - ஜீவ ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆதியில் அதாவது, உலகம் தோன்றிய காலத்தில் மனிதனும் மற்ற மிருக
(2)
ஜீவப்பிராணிகளும் ஒன்றுபோலவேதான் நடந்து வந்ததெனக் குறிப்பிட்டுள்ளனர்.
மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளைவிட அறிவுத் துறையில் சிறிது மாற்றம் இயற்கையில் இருந்துவருகிற காரணத்தால் மனிதனுக்கு ஆசைப்பெருக்கெடுத்து - வாழ்க்கையின் பெருங்கவலைக்கு ஆளாகி,
(3)
புராணக்கதைகள் முற்றிலும் கடவுள்கள் சார்ந்து எழுதப்பட்டுள்ளது, அவை புனிதமானது, அதை கொச்சை படுத்தக் கூடாது என பலர் சொல்லலாம். யாரும் மெனக்கெட்டு அவற்றை கொச்சைப் படுத்த வேண்டிய அவசியமில்லை, காரணம் அதில் எழுதப்பட்டுள்ள கதைகள் நாம் சிந்திப்பதை விட மிகவும் கொச்சையாகத் தான் உள்ளது.
(1)
அதற்கு ஒரு சிறு உதாரணம் இந்திரனின் கதை. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் இருக்கிறது என்ற கதை பலருக்கும் தெரியும். ஆனால், அது கண்கள் அல்ல பெண்குறிகள் என எத்தனை பேருக்கு தெரியும்!?
கவுதம முனிவரால் இந்திரனுக்கு அளிக்கப்பட்ட சாபத்தின் பலன் தான்,
(2)
இந்திரனின் உடல் முழுக்க ஆயிரம் பெண் குறிகள் தோன்ற காரணம் என "சிவமகா புராணத்தில்" சொல்லப்பட்டுள்ளது.
சிவமகா புராணத்தில் சொல்லப்பட்டுள்ள இந்திரனின் சாபக்கதையை முழுமையாக கீழே உள்ள படத்தில் படித்துப்பாருங்கள். 👇🏽
முன்பு ஒரு காலத்தில் அக்னி தேவன் சப்தரிஷிகளின் மனைவியர் மீது மோகம் கொண்டான், அந்த மோகத்தால் அவர்களை எப்படி அனுபவிப்பது என்று மோக அக்னியால் மிகவும் வாடினான்.
(1)
இதை உணர்ந்து கொண்ட அவன் மனைவி சுவாஹா தேவி, தன் கற்பின் சக்தியால் அந்த முனி பத்தினிகளின் உருவங்களைப் போல் ஒவ்வொன்றாக தானே வடிவம் எடுத்து தன் கணவனை கட்டித்தழுவி அவனுக்கு ஆனந்தம் கொடுத்து வந்தாள்.
(2)
அவ்வாறு அவள் ஆறு ரிஷி பத்தினிகளின் உருவங்களையும் எடுத்தாள், ஆனால் அருந்ததியின் உருவத்தை மட்டும் அவளால் எடுக்க முடியவில்லை. அருந்ததியின் உருவம் தன்னால் எடுக்க முடியாததை நினைத்து சுவாஹா தேவி மிகவும் வியப்படைந்தாள்.