முதல்வராக இருந்த காலத்தில்...
பெட்ரோல் போட காசில்லாமல் கஷ்டப்பட்டார் என அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன் எழுதி இருக்கிறார்!
அண்ணா இறந்த பொழுது,
நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூபாய் 5000 மட்டும் கையிருப்பு இருந்ததாக தகவல்!
எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணா நீங்கள் எழுதுவது சிறுகதையே அல்ல என்று விமர்சித்தது கூட,ஆம் என்று ஒப்புக் கொண்ட பெருந்தகை மனிதர்!
நேரு ஒரு முறை நான்சென்ஸ் என்று சொன்னபோது,
"அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம்,நாங்கள் கொட்டிக்கிடக்கிற செங்கல்!
என நாகரிக வார்த்தை மட்டுமே பயன்படுத்தினார்.
19 வருட பிரிவில், பெரியாரை விமர்சித்தது கிடையாது!
இவர்களின் விரல்களை நருக்குவேன் என்று சொன்ன காமராஜரை கூட, குணாளா குலக்கொழுந்தே என்றுதான் கூறியிருக்கிறார்!
ஈவிகே சம்பத், தோழர் அண்ணாதுரை என்ற போது கூட, "வைரக் கடுக்கன்" காது புண்ணாகி விடும் என்று கழட்டி வைத்திருக்கிறேன் என்றவர்!
அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்தில், அவரோடு பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரி ஒருவர் வெளியில் செல்ல,தான் மறந்து போனதை அவரிடம் கூறவேண்டும் என்று எண்ணி, அப்போது அண்ணாவோடு, கூட இருந்த சட்டமன்ற உறுப்பினரை பார்த்து, நீங்கள் வேகமாக சென்று அந்த அதிகாரியை அழைத்து வாருங்கள் என்று கூறினார்.
உறுப்பினர் சற்று வேகமாக செல்ல தயங்கி, கைத்தட்டி கூப்பிட்டு விட்டார்!
வந்த, அந்த உயர் அதிகாரியை பார்த்து நான் உங்களை அழைக்கச் சொல்லவில்லை வேறொருவரை அழைக்கசொன்னேன். மன்னித்து விடுங்கள் என்று கூறி அந்த அதிகாரி போன பிறகு....
கை தட்டி அழைத்த அந்த சட்டமன்ற உறுப்பினரை பார்த்து,
எனக்கு கை வலிக்கும் என்றா நீங்கள் கை தட்டினீர்கள்!
அவர் ஐ.ஏ.எஸ் முடித்து நிரந்தர பதவியில் இருப்பவர். மீண்டும் நம்மை ஐந்தாண்டுகளுக்கு பிறகு மக்கள் தேர்ந்தெடுத்தால் தான் உண்டு.
உயர் அதிகாரிகளை எப்படி அழைப்பது என்ற நாகரிகத்தை சட்டமன்ற உறுப்பினருக்கு சொன்னார்.
இப்பொழுது கவுன்சிலருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிலையே
எப்படி இருக்கிறது என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.
காமராஜரும், பக்தவத்சலமும் தோற்கடிக்கப் பட, மக்களின் முன் நாம் மட்டும் எம்மாத்திரம் என வேதனைப்பட்டார்!
கலைந்த தலைமுடியோடும், அழுக்கு வெள்ளை வேட்டி யோடும் மக்களிடம், "நான் வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன் நான்தான் தமிழகத்தின் முதல்வர்" என்று அடக்கத்தோடு கூறினார். சென்ற ஊர்களில் எல்லாம் தமிழர் பெருமையை ஓங்கச் செய்தவர். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தன் அறிவுத் திறத்தால் பதில் சொன்னவர்!
ஆங்கிலத்திலும் அடுக்கு மொழி பேசத் தெரிந்த அண்ணா!
சுயமரியாதைத் திருமணங்கள் அண்ணா காலத்தில்தான் சட்டமாக்கப்பட்டது.
தாயாக நேசித்த தமிழ்நாட்டிற்கு,
🔥தமிழ்நாடு🔥 என்று பெயர் வைத்து அழகு பார்த்த தலைமகன் அண்ணா.......
தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை சட்டம் ஆக்கினார்.
காங்கிரசை விட, கல்விக்காக ஏழுகோடி அதிகம் ஒதுக்கிறவர் #அண்ணா.
எதிரிகளை கூட நேசிக்கிற பண்புதான் அவரை எல்லோராலும் "அண்ணா" என்று ஏற்றுக்கொள்ள வைத்தது.
இறக்கின்ற தருவாயில் கூட,
"தி மாஸ்டர் கிறிஸ்டியன்"
நூலை வாசித்துக் கொண்டே இருந்தவர்.
அவர் இறந்தபோது தமிழகத்தில் மொத்தம்
நாலரை கோடி மக்கள்.
அவரோடு இருந்தவர்களோ👇👇👇👇👇👇👇👇👇
"ஒன்றரை கோடி மக்கள்"
என அவருடைய இறப்பும் "கின்னஸ்"🙏🙏🙏 சாதனையானது!
குறைந்த கால முதல்வராக இருந்தாலும் இன்றுவரை எல்லா மக்கள் மனதிலும் நிறைந்தவர் தானே அண்ணா......🙏🙏🙏
கொடிகளில் பறந்து கொண்டிருப்பவரா அண்ணா!
கொண்ட கொள்கையில் நெருப்பாய் பூத்தவர் அண்ணா.
ஆரியம் இன்றும் என்றும் அலறும்படி காரியங்களை செய்து வைத்து விட்டு சென்றவர்தான் நம்
அண்ணா
ஆம்
"அறிஞர் அண்ணா"🔥🔥🔥
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சாவித்ரிபாய் புலே என்பவர் தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் ஒரு குறிப்பிடத்தக்க கல்வியாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். 1831 ஜனவரி 3ம் தேதி மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்ற சிற்றூரில்,
விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், லட்சுமி மற்றும் கண்டோஜி நெவேஷே பாட்டீல் தம்பதியின் மூத்த மகள் ஆவார்.
அந்த கால வழக்கப்படி சாவித்ரிபாய் புலேவிற்கு அவரது 9 வயதில், 13 வயதான ஜோதிராவ் புலேவை 1840ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
ஜோதிராவ் புலே மகாராஷ்டிராவின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். எனவே தனது மனைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தன்னுடன் இணைத்து கொண்டார் ஜோதிராவ்.
காஞ்சியில், பெரியார் கொடியேற்றிவைத்து, கடவுள் மறுப்பு வாசகமான,
..கடவுள் இல்லை
கடவுள் இல்லை...
... கடவுள் இல்லவே இல்லை...
கடவுளைக் கற்பித்தவன், முட்டாள்
... கடவுளை, பரப்பினவன் அயோக்கியன் ..
. கடவுளை வாங்குகிறவன் காட்டு மிராண்டி...
என்கிற கல்வெட்டையும் திறந்து வைத்தார்...
இதற்கு பதிலடியாக எதிர் கோஷ்டியினர் ,
.... கடவுள் உண்டு... கடவுள் உண்டு...
.... கடவுள் உண்டவே உண்டு....
..... கடவுளைக் கற்பித்தவன் பண்பாளன்....
.... கடவுளை பரப்பினவன் யோக்கியன்...
.... கடவுளை வணங்குகிறவன், வணக்கத்திற்குரியவன் ...
என்கிற கல்வெட்டைத் திறந்து வைத்தனர்..
அந்தக் கல்வெட்டை அகற்றச் சென்ற பெரியார் தொண்டர்கள், பெரியாரிடம் அனுமதி
கேட்டனர்... கல்வெட்டில் இருக்கும் செய்தியை கேட்டறிந்த பெரியார்,
அந்தக் கல்வெட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், அகற்ற வேண்டாம் என்று கூறினார்...
நாம், கடவுளைக் கற்பித்தவன், முட்டாள் என்கிறோம்...
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."😔
💥மாவீரன் அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."
💥ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்*
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."
❤️ *"ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது!"* ❤️
தந்தை பெரியாரிடம் உரையாடிக் கொண்டிருந்த கோவை அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்கள் தந்தை பெரியாரை நோக்கி ஒரு கேள்விகேட்டார்.
நீங்கள் பார்ப்பனர்களை அரசு உத்தியோகங்களிலிருந்து விரட்டிவிட்டீர்கள். அதனால் அவர்கள் பலர் வைதிக காரியங்களில் சம்பாத்யம் செய்யாமல், வேறு இந்திய முதலாளிகளாக்கி பெரும் பணக்காரர்கள் ஆக்கிவிட்டீர்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவர்களுக்கு நீங்கள் நன்மைதான் செய்திருக்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
அதற்கு அங்கேயே பதில் அளித்த தந்தை பெரியார், அடுத்த வாரமே 09.11.1946 'குடிஅரசு' வார ஏட்டில் ஓர் அற்புதமான விளக்கத்தையும் அளித்தார்கள்.