அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.
இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.
சோதிடரீதியாக அமாவாசை
நிறைந்த நாள் எனக் கூறுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள் பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம் பாடுபடாமல் அனுபவிக்கிறோம்.
அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கிறது. பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும்.
பின்னா் நம் குடும்பத்தை
நிச்சயம் பாதிக்கும்.
இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். வள்ளலார் வலியுறுத்தும் ஜீவகாருண்யம் இதுதான்!
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில்
செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து
தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும்.
ஒவ்வொரு மாதம் அமாவாசை
அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.
நகரங்களில் வசிப்பவா்கள்
அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது
ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து
அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது
அவரவர் வசதியைப் பொறுத்தது.
அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*திருப்பதி பெருமாளுக்கு தம்பி என்று வணங்கப்படும் குடவாசல்*ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்*
*Kudavasal srinivasa Perumal koil*
திருப்பதி, திருமலையில் நடப்பது போன்றே இவ்வாலயத்தில் எல்லா வழிபாடுகளும் வைபவங்களும் நடத்தப்படுகின்றன.
1
இவர் திருப்பதி பெருமாளுக்கு தம்பி என வணங்கபடுகிறார்.
திருப்பதி மலை செல்ல முடியாதவர்கள் பிரார்த்தனைகள் இந்த கோயிலில் செல்லுத்தபடுகிறது.
2
*ஆலய தல வரலாறு*
முன்னொரு காலத்தில், வடதிசைக்கு அதிபதியான குபேரன் மகாவிஷ்ணுவை வணங்கி, "நான் எப்பொழுதும் தங்களை தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும்'' என்று வரம் கேட்டார்.
2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?
3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?
4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.
பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.
சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும்
அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.
வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.
ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள் கவனமாகச் செல்கின்றன, தடம் மாறிச் சென்றால் அவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படும்.
அதுபோலவே, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் வரையறுக்கப்பட்ட வேகம் உண்டு. கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றிக் கொண்டுள்ளன. ஆனால், அவை மோதிக்கொள்வதில்லை. இந்த ஒழுங்குமுறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? யார் இந்த திறந்தவெளியில் கிரகங்கள் பயணிப்பதற்கான தடத்தினை அமைத்தது?
வாகனங்கள் குறிப்பிட்ட தடத்திற்குள் செல்லுமாறு முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறையை உருவாக்கியது யார்? காவல் துறை, அரசாங்கம்.
என்னை மண்டையில் சுத்தியை கொண்டு அடித்தார்கள்
ஒரு மலை என் தலையில் மோதியதை போல் உணர்ந்து அம்மா அம்மா என்று கதறியே தரையில் சரிந்தேன்.
என் மண்டை எழும்பு உடைந்த வலியை உணர்ந்தேன் நான்..
கூர்மையான கத்தியை கொண்டு என் கழுத்தை அறுக்கும் பொது அந்த வலிநிறைந்த நொடிபொழிதில் என்னை வளர்த்த உன் முகமே என் நினைவில் வந்து சென்றது.
உயிர் பிரியும் தருவாயில் என்னை உருவாக்கிய நீயே என்னை அழிப்பாயென்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.!
இதுவே நான் ஒரு நாயாக பிறந்திருந்தால் கடைசி வரையும் வளர்த்தவர் வீட்டிலேயே இருந்து இறந்து போயிருப்பேன்..
புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏற்ற புண்ணிய தலங்கள் !
அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன.
காசி, கயா போன்ற திருத்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் மாதம்தோறும் வரும் அமாவாசையன்று நமது ஊருக்கு அருகில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்கலாம்.
அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும் பித்ரு தோஷத்தை நீங்கும். புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப, கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள், நகரத்தார். காவிரிப்பூம்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த இவர்கள், ஆழிப்பேரலை மற்றும் வேறு சில மாறுதல்களின் காரணமாக, பாண்டிய நாட்டிற்கு வந்தனர்.
1
அவர்கள் வசிப்பதற்கு பாண்டிய மன்னர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொடுத்தார். நெடுங்காலம் காரைக்குடியில் வசித்த நகரத்தார், நாளடைவில் ஒன்பது ஊர்களுக்கு பிரிந்தனர்.
2
அவை காரைக்குடியைச் சுற்றியுள்ள, இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன் கோயில், நேமங்கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, இரணியூர் ஆகும்.