தைமாதம் 8ஆம் தேதி (22-01-2023) ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசை திருநாங்கூர் 11 திவ்யதேச எம்பெருமான்களின் பிரம்மாண்ட மங்களாசாசன கருட சேவை உத்ஸவம் நடைபெறுகிறது.
இத்தனை திவ்ய தேச எம்பெருமான்கள் ஒருசேர கருட சேவை உலகத்தில் இங்கு மட்டுமே.
இந்த மங்களாசாசன கருட சேவை உற்சவத்திற்கு மிக முக்கியமானவர் ஸ்ரீ திருமங்கையாழ்வார்.
இவர் தை அமாவாசை (தை 07, 21-01-2023) அதிகாலை திருநகரி ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கல்யாண ரெங்கநாதன் திருக்கோயிலிருந்து ஸ்ரீ குமுதவல்லி நாச்சியாருடன் ஸ்ரீ திருமங்கையாழ்வார் கோலாகலத்துடன் புறப்பட்டு, நடுவில் உள்ள
1. திருக்குறையலூர்
2. திருமங்கைமடம்
3. திருக்காவலம்பாடி
4. திருமணிக்கூடம்
5. திருப்பார்த்தன்பள்ளி
ஆகிய ஸ்தலங்களில் எழுந்தருளி மங்களாசாசனம் செய்வார், பின்பு அங்கிருந்து புறப்பட்டு பகலில் மஞ்சள்குளி மண்டபத்தில் திருமஞ்சனம் கன்டருளி பின்பு
1. திருநறையூர்
2. திருவரங்கம்
ஆகிய எம்பெருமான் மங்களாசாசனம் பாசுரம் கோஷ்டியினர் சேவிக்கப் பெற்றும்,
பிறகு திருப்பாவை சாத்துமறை முடிந்து அங்கிருந்து கீழ்வரும் திருநாங்கூர் 6 திவ்யதேச எம்பெருமான்கள் சன்னதியில் எழுந்தருளி மங்களாசாசனம் செய்வார்.
1. மணிமாடக்கோயில்
2. வண்புருடோத்தமம்
3. வைகுந்த விண்ணகரம்
4. செம்பொன் செய்கோயில்
5. திருத்தெற்றியம்பளம்.
6. அரிமேயவிண்ணகரம்.
ஆகிய எம்பெருமான்கள் சன்னதியில் மங்களாசாசனம் முடிந்து மணிமாடகோயிலில் அர்த்தஜாம பூஜை நடைபெறும்.
இத்துடன் சனிக்கிழமை அமாவாசை உற்சவம் முடிகிறது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பாவை சாத்துமறை முடிந்து மதியம் கீழ்க்கண்ட வரிசையில் எம்பெருமான்கள் ஒருவர் பின் ஒருவராக ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
1. ஸ்ரீ நாராயண பெருமாள், மணிமாடகோயில்.
2. ஸ்ரீ குடமாடு கூத்தர், அரிமேய விண்ணகரம்,
3. ஸ்ரீ செம்பொண்ணரங்கன், செம்பொண்செய்கோயில்,
4. ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், திருத்தெற்றியம்பளம்
5. ஸ்ரீ அண்ணன் பெருமாள், திருவெள்ளக்குளம்
6. ஸ்ரீ புருஷோத்தம பெருமாள், வன்புருடோத்தமம்,
7. ஸ்ரீ வரதராஜன், திருமணிக்கூடம்
8. ஸ்ரீ வைகுந்த நாதன், வைகுந்த விண்ணகரம்,
9. ஸ்ரீ மாதவ பெருமாள், திருதேவனார்தொகை,
10. ஸ்ரீ பார்த்தசாரதி, திருப்பார்த்தன்பள்ளி,
11. ஸ்ரீ கோபாலன் , திருக்காவலம்பாடி,
12. ஸ்ரீ புருஷோத்தம பெருமாள் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மனவாள மாமுனிகள் ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தல்.
மேற்படி இரவு அந்த அந்த திவ்யதேச எம்பெருமான்கள் கருட வாகனத்தில் எழுந்தருள
ஸ்ரீ திருமங்கையாழ்வார் ஸ்ரீ குமுதவல்லி நாச்சியாருடன் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி மங்களாசாசன உற்சவம் நடைபெறும்,
ஸ்ரீ மனவாள மாமுனிகள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீ திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வார்.
அதனை தொடர்ந்து அந்த அந்த திவ்யதேச எம்பெருமான்களின் விடைபெற்றுக்கொண்டு அவரவர் சன்னதியில் திரும்புவார்.
இத்துடன் உலக பிரசித்தி பெற்ற திருநாங்கூர் 11 திவ்யதேச எம்பெருமான்களின் பிரம்மாண்ட மங்களாசாசன கருட சேவை முடிவடைகிறது.
🙏 அனைவரும் வருக ஸ்ரீ எம்பெருமான்கள் திருவருள் பெறுக. 🙏
குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.
வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால்
வாலி குரங்காகவும்,
இந்திரன் அணிலாகவும்,
எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.
தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.
அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.
வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.
ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.
அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.
21.01.2023 சனிக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருச்சேறை அருகே மேலநாகம்பாடி கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் வாழைத்தோட்டத்தில் சிவலிங்கத்தின் தலைப்பகுதி மட்டும்
பல நாட்களாக மண்ணுக்கு வெளியே தெரிந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்களால் சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது.
தோண்டி எடுக்கப்பட்ட சிவலிங்கம் 3½ அடி உயரத்தில் 4 மற்றும் 8 பட்டைகளுடன் இருந்தது.
பிரம்ம சூத்திர குறியீடு மற்றும் பாம்பின் உருவத்தை பின்பக்கத்தில் அமைத்திருப்பது சிறப்பான ஒன்று.
சிவலிங்கத்தின் அமைப்பு மற்றும் அவ்வாழைத் தோட்டத்தில் கிடைத்த செங்கற்களை வைத்துப் பார்க்கும்போது சுமார் 400 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சிவலிங்கம் என கருதலாம்.