#குலதெய்வம் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் பல பதிவுகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இதோ இன்னும் ஒன்று: 1. குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. 2. குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. கோடி நன்மை தரும். 3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை,
குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4. குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
5.நம் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான். 6. வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். 7. நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த
தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். 8. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. 9. குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும். 10. குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால்
அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று அலட்சியப் படுத்தக் கூடாது. 11. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். 12. அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான்
அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. 13. ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். 14. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை
என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான். 15. குலதெய்வம் மனிதன் லௌகீக[இல்லற] வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது. 16. குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து வருகிறார்களோ
அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. 17. குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா, அப்பாவை மறப்பதற்கு ஒப்பானது. 18. குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை பட்டினி போடுவதற்குச் சமம். 19. குலதெய்வ வழிபாட்டினால் தீராத நோய்களுக்கு பரிகாரம்
பெறுவது, கல்வி, திருமணம் அமைவது, தொழில் விருத்தி கிடைப்பது, குழந்தை வரம் பெறுவது முதலிய பயன்கள் பெறலாம். 20. துன்பமான காலத்தில் நம் தாயை போல காப்பது குலதெய்வம் ஆகும். 21. நாள் செய்யாததை கோள் செய்யும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும். 22. குலதெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை
சார்ந்தவர்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் தள்ளி போகும். ஆகவே எல்லோரும் தவறாது குலதெய்வ வழிபாட்டை செய்து சந்தோஷமாய் இருப்போம். 23. ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும்
செய்யாமல் இருக்கவே கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும். 24. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்துவிடும். 25. குலதெய்வ வழிபாடு என்பது இந்த
பிரபஞ்சத்தையே படைத்த பரப்பிரும்ம வழிபாடே என்பதினால் தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு
ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது. 26. வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய,
வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபட்டாலே போதும் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். 27. குலதெய்வம் அசைவம் வைத்து படைக்கும் குலதெய்வமாக இருந்தால் நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்ற வேண்டாம்.
ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்க வேண்டும். வேறு எந்த
தெய்வமும் அதற்கு இணை இல்லை.
குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வர். குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல்
காத்து நிற்கும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@sarvadamanpremi இருக்கிறது. எங்களுக்கும் குல தெய்வம் பல வருடங்களாகத் தெரியாமல் 5 வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடித்தோம். திருப்பதி பெருமாள் தான் குலதெய்வமாக வைத்திருந்தோம். பிறகு எனக்குப் பல பிரச்சினைகள் வந்த பின் ஜோசியரை அணுகியபோது அவர் குலதெய்வம் வழிபாடு இல்லாமல் தான் இந்தப் பிரச்சினை என்றார்
@sarvadamanpremi பிறகு வேறு ஒரு நல்ல ஜோசியர், என் நண்பருக்கு குலதெய்வம் கண்டுபிடிக்க உதவியதால் அவரிடம் சென்றேன். அவருக்கு trance மாதிரி ஜாதகத்தைப் பார்த்ததும் வரும். அவர் எங்கள் குல தெய்வம் எப்படி இருக்கும் என்று சில clues கொடுத்தார். தினம் கூர்ம ஆவதாரத்தை, ஸ்லோகம் சொல்லி வழிபாட்டு வர சொன்னார்.
@sarvadamanpremi ஒரு நாள் விடாமல் ஏழெட்டு வருடங்கள் பிரார்த்தித்து வந்தேன். அவர் சொன்னபடி எதிர்பாராத விதமாக எங்கள் தூரத்து உறவினர் மூலம் எங்கள் உண்மையான சொந்த ஊரும், குல தெய்வமும் தெரிய வந்தது. குல தெய்வம் போய் வணங்கிவிட்டு வந்ததும் பல நல்ல விஷயங்கள் உடனே நடந்தேறியது. எங்கள் குடும்பத்தார்
உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் #சப்த_விடங்க_தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தான் சப்த விடங்க தலங்கள் இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம்
வாய்ந்தவை. ‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாதது’ என்று பொருள். 1. திருவாரூர் வீதிவிடங்கர் - #அசபாநடனம்.
கும்பகோணத்தில் இருந்து 43 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜ பெருமான், இறைவி - கமலாம்பாள். சிதம்பரத்திற்கும் முந்தைய கோவில் என்று சொல்லப்
படுகிறது. இங்குள்ள ஈசன் #வீதிவிடங்கர் என்று அழைக்கப் படுகிறார். இத்தல இறைவன் ஆடிய தாண்டவம் அசபா நடனம். உயிரின் இயக்கமான மூச்சுக் காற்று, உள்ளும் புறமும் சென்று வருவது போன்ற உன்னதத்தை உணர்த்துவது இந்த நடனம் ஆகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல,
#MahaPeriyava
Author: Dr. Padma Subramanyam, 'Nrutyodaya', Chennai
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Some years back a few Russian and American professors, who came to Chennai, had darshan of
Maha Swamigal. In the year 1987, Soviet Union celebrated the Indian Cultural Festival. It was my custom to write research papers related to our culture and tradition and show it to Periyavargal. We took one such blessed paper to hand over to Professor Ribekov, the President of
the Russian Academy of Sciences and the Institute of Oriental Studies in Moscow. The only picture that adorned his room was of the Kanchi Periyavar! What wonder, he had not even seen Swamigal in person until then. He said, 'When I come to Chennai--one, I should meet the Kanchi
#நற்சிந்தனை ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் பரமசிவம் என்பவர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர். அனைத்தும் கற்றவர் மற்றும் புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்து இருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை
அழைத்திருந்தார்கள். பண்டிதரை அழைத்து வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார். பண்டிதர் பரமசிவம் வந்த போது அங்கே
யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதருகோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. என்னப்பா பண்ணலாம் என்று குதிரைக்காரனிடம் கேட்டார். அய்யா! நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு
#ஶ்ரீரங்கம்#பூலோக_வைண்டம்#ஶ்ரீரங்கநாதர்
எங்கும் சுத்தினும் ரங்கனச் சேர் என்பது ஆன்றோர் வாக்கு. ஶ்ரீரங்கத்தில் முழுதாக வாழ கொடுப்பினை இல்லாவிட்டிலும் இறுதி காலத்தையாவது ரங்கனை சேவித்துக் கொண்டு அங்கேயே வாழ விருப்பம் இல்லாதோர் இல்லவே இல்லை என்று அறுதியிட்டு கூறலாம். தினம்
பெருமாள் வீதி உலா வருகிறார். உடல் நலம் இல்லாவிட்டாலும் நம் வாசலில் எழுந்தருளி நமக்கு கடாக்ஷிக்கிறார். அதனால் பலருக்கும் வேலையில் இருந்து ஒய்வு பெற்றதும் ஶ்ரீரங்கத்திலேயே குடியிருக்க முயற்சி செய்கின்றனர். இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களை கேட்டு பயன் பெற வேண்டும் என்று
எத்தனை பேருக்கு ஆசை! நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது? அதற்கு என்ன காரணம்? ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல். அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இருந்து கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி” என்று
Author: Smt Indira Balasubramaniam
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 6
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Kanchi Mahan needs no introduction. If it is one kind of joy to read about the experiences had by those who
approached Him, it is another kind to share them with others; and to write about them is a third kind. He was also unique in fulfilling the yearnings of those who sought Him. It was the time when Kanakabhishekam was being arranged for the Mahan. A letter received from the Matham
said that those who wished to participate in the service might give according to their Shakti, gold worth one sovereign or an equivalent amount in rupees. I decided to give the pair of bangles that I had made for my marriage. Although it was a month and a half for the day of the