குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.
வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால்
வாலி குரங்காகவும்,
இந்திரன் அணிலாகவும்,
எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.
தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.
அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
இப்படி குரங்கு, அணில், காகம் வழிபட்டு பேறு பெற்ற தலமாக திகழ்வது, குரங்கணில்முட்டம் எனும் சிவாலயமாகும்.
தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஆறாவது தலமாக குரங்கணில்முட்டம் திகழ்கின்றது.
இவ்வாலயம் ,மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பிறைச்சந்திரன் வடிவில் "காக்கை மடு". எனும் திருக்குளம் நீர் நிறைந்து காணப்படுகின்றது.
ஆலயத்தின் நுழைவாயிலின் இருபுறமும் குரங்கு, அணில், காகம் வழிபடும் புடைப்புச் சிற்பங்கள் காட்சி தருகின்றன.
இத்தலம் முற்பிறவி வினைகள் நீங்கி நற்பலன் தரும் திருக்கோயிலாக விளங்குகின்றது.
திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு பெறவும், சுகப்பிரசவம் அடையவும்,
பாலரிஷ்டம் நீங்கவும் கண் கண்ட தலமாக பக்தர்கள் நம்பிக்கையோடு வழிபடுகின்றனர்.
காஞ்சிபுரம் − செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் தூசி என்ற ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.
வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.
ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.
அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.