மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிக்கும் விருப்பம் உடையவள்.
பச்சை நிறம் கொண்டவள்.
மதங்க முனிவரின் புதல்வி.
நான்கு திருக்கரம் உடையவள் பாசம், அங்குசம், மலர் அம்பு கொண்டவள்.
சந்திர கலை தலையில் அணிந்தவள்.
குங்கும சாந்தை மார்பில் தரித்தவள் என்று
அம்பிகையின் தோற்றத்தை வருணிக்கிறார்.
அம்பிகையின் கையில் கிளியும் இடம் பிடித்திருகின்றது.
இது வாக்கு திறமையை குறிக்கிறது.
இவளின் நிறம் பச்சை ஆகும்.
பச்சை புதனுக்குரிய நிறம் இது ஞானத்தை குறிக்கிறது.
*சியாமளா உபாசனை*
சியாமளாவை உபாசிப்பவர்களுக்கு வாக்கு பலிதம், கல்வி, வித்தை, நுண்ணறிவு, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, ஞானம், மனதை ஒருநிலை படுத்தும் திறன், புத்தி கூர்மை, இசை, தேர்வில் வெற்றி போன்றவை தானாக வந்து சேரும்.
இவளை உபாசிப்பது கடுமையான விஷயம் என்று தாந்திரீக நூல்கள் கூறுகின்றன.
*மதுரை மீனாட்சியம்மன்*:
சியாமளாவின் அம்சமாக மதுரை மீனாட்சி திகழ்கிறாள்.
இவளை வழிபடுவதும் மாதங்கியை வழிபடுவதும் ஒன்றே ஆகும்.
இந்த சியாமளா நவராத்திரியில் “மீனாட்சியம்மை பிள்ளை தமிழ்” படிப்பது நற்பலன்களைத் தரும்.
சியாமளா நவராத்திரியானது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெகு விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த சியாமளா நவராத்திரியின் 5- வது நாள் பஞ்சமி அன்று சரஸ்வதி தேவி அவதரித்த நாளாகக் கருதப்படுகிறது.
எனவே இந்நாளில், வடநாட்டில் விஜயதசமி போன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வர்.
எனவே இந்நவராத்திரியானது சரஸ்வதி தேவியின் அருளையும் பெற்று தரும்.
*சியாமளா நவராத்திரியில் எப்படி பூஜிக்க வேண்டும்*
தை அமாவாசை முடிந்து பிரதமை அன்றில் இருந்து ராஜ மாதங்கியை ஸ்ரீ சியாமளா தண்டகம், ஸ்ரீ சியாமளா அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா அஷ்டோத்ர நாமாவளி, ஸ்ரீ அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி,
இவற்றை பாராயணம் செய்யலாம்.
வீணை மீட்ட தெரிந்தவர்கள் அம்பிகை முன் வீணை மீட்டி ஆராதிக்கலாம்.
மீனாட்சியம்மை பிள்ளை தமிழ் மற்றும் மீனாட்சியம்மை பதிகம் பாடலாம்.
அம்பிகைக்கு பிடித்தமான பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை ஒன்பது நாட்களும் படைக்க வேண்டும்.
மாதுளை சியாமளாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும்.
இவளை பூஜிக்கும் போது மனத்தூய்மை மிக முக்கியமான ஒன்றாகும்.
மனம் அலைபாய்வதைத் தவிர்த்து முழு மனதோடு வணங்கவேண்டும். 🙏🌹
குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.
வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால்
வாலி குரங்காகவும்,
இந்திரன் அணிலாகவும்,
எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.
தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.
அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.
வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.
ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.
அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.