தஞ்சை பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக பெரிய சிவலிங்கம் திருவருள் புரிகின்ற திருக்கோயில்.
விநாயகப்பெருமானின் பல திருவடிவங்கள் உள்ள திருக்கோயில் இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட திருக்கோயிலாக ஸ்ரீ விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது.
இந்தக் கோயில் இருக்கின்ற ஊர் திருபுனவாசல், திருப்புனவாயில் என்பது பண்டைய பெயர், காலப்போக்கில் திருப்புனவாசல் என்ற பெயர் வந்தது.
மிகப்பெரிய கோயில் ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ளது.
நீண்ட மதில்கள் உள்ளன, கிழக்கிலும், மேற்கிலும் வாயில்கள்.
கிழக்கிலே இரு வாயில்கள் கோயிலுக்கு வெளியே தென் பக்கத்தில் வல்லபை கணேசர் சன்னதி உள்ளது.
வடபக்கம் தண்டபாணி சன்னதி உள்ளது.
கோவிலின் உள்ளே ஐந்து விநாயகர்கள் உள்ளனர்.
இன்னும் விநாயகரையும் தரிசிக்கலாம் இந்திரன் வழிபட்ட ஆகண்டலவிநாயகர் ஒருவர்,
இன்னொருவர் கோஷ்ட மூர்த்தியான நர்த்தன கணபதி.
இத்தலத்தில் காட்சி கொடுக்கின்ற விநாயகர் திருவடிவங்களின் எண்ணிக்கையையும்,
சிவபெருமான் திருவடி பங்குகளின் எண்ணிக்கையும்,
இத்தலத்திற்கான தீர்த்தங்களின் எண்ணிக்கையும், இத்தலத்திற்கான விருட்சங்களின் எண்ணிக்கையும் அறிந்து கொள்வதே ஒரு தனிச்சிறப்பு எனப் பக்தர்கள் கூறுகின்றனர்.
இத்தலத்திற்கான சிறப்பம்சங்களில் ஒன்றாகும் என் தளத்தின் சிறப்பம்சங்கள் பற்றிச் சொல்கையில் மூலவர் பெருமாள் விருத்தபுரீஸ்வரர் திருவடி பற்றிச் சொல்வது முக்கியமான ஒன்று.
தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய திருமேனியர் இவர்.
இப்பெருமானுக்கு அணிவிக்கப்படும் ஆடைக் காரணமாக,
மூன்று முறை ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று என்ற முதுமொழி உண்டாகியிருக்கிறது.
சுவாமிக்கு 3 ஆடைகள், ஆவுடையாருக்கு முப்பது முழ ஆடையும் வேண்டும்.
விருத்தபுரீஸ்வரர் என்கிற இப்பெருமானுக்கு பழம்பதி நாதர், மகாலிங்கேஸ்வரர் ஆகிய பெயர்களும் உள்ளன.
பாண்டிய நாட்டின் 14 திருத்தலங்கள் இங்கே உள்ளன.
அதனால் இந்த கோயிலில் 14 சிவலிங்கங்கள் உள்ளன.
திருஞானசம்பந்த நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தில் சிவபெருமானைப் பாடியுள்ளனர்.
அதன் காரணமாக 251 ஆவது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த திருபுனவாசல்.
குரங்கு, அணில், காகம் என மூன்றும் வழிபட்டு பேறு பெற்றதால் குரங்கணில்முட்டம் என இந்த தலம் வழங்கப்படுகின்றது.
வாலி, இந்திரன், எமன் இம்மூவரும் தங்களது முன்வினைப் பயனால்
வாலி குரங்காகவும்,
இந்திரன் அணிலாகவும்,
எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர்.
தங்களுடைய வினைப்பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர்.
சிவபெருமானின் அறிவுரைப்படி காஞ்சிபுரத்திற்கு தெற்கேயுள்ள சிவாலயம் சென்று வழிபட்டால் அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்புவார்கள் என இறைவன் வழிகாட்டினான்.
அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம்.
திருப்பங்கள் தரும் திருவோணம் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழ, வழிபாடுகள் மிக அவசியம்.
வரும் இடர்கள், கவலைகள் அனைத்துமே கர்ம வினைகள் தான்.
ஆனால் அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
ஆனால் கர்ம வினைகளை குறைத்து, வளமான வாழ்வளிப்பது வழிபாடுகள் என்றால் அது மிகையாகாது.
அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களை வழிபடுவதும், நட்சத்திர நாளில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் விரதங்களும் கைமேல் பலனளிப்பவை.
27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவனுக்குரிய திருவாதிரை மற்றும் பெருமாளுக்குரிய திருவோணம் இவ்விரண்டு நட்சத்திரங்கள் தான் “திரு” என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சந்திரனின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் திருவோணம்.