வை மு கோதைநாயகி *மடிசார் கட்டிக் கொண்டு சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி*
தமிழின் முதல் நாவலாசிரியர்.
116 நாவலகளை எழுதியவர்.
துப்பறியும் கதைகள் எழுதிய முதல் பெண்.
நாடக ஆசிரியர், நாடக டைரக்டர், மேடை பேச்சாளர், சமூக சேவகர், பாடகர்.
தமிழில் எழுத படிக்கத் தெரியாது, பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பு இல்லை.
காரணம் வறுமை அல்ல. அந்த கால பெண்களின் சூழ்நிலை.
பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியினால் இவர் சொல்ல சொல்ல எழுதப்பட்ட முதல் நாடகம் இந்திராமோகனா 1924.
பின் எழுதவும் படிக்கவும் அவர் அறிந்து கொண்டு எழுதிய நாவல்கள் ஏராளம்.
தான் இயற்றிய “அன்பின் சிகரம்” நாடகத்தினை சென்னை வானொலியில் ஒளிபரப்ப தானே டைரக்ட் செய்தார்.
ஜகன்மோகினி இதழையும், பெண்களுக்கென்று இதழ் ஒன்றையும் நடத்தியவர்.
கேட்ட பாடலை அப்படியே மனதில் பதிய செய்து மீண்டும் சுவைபட பாடும் வல்லமை கொண்ட
வை மு கோதைநாயகி அவர்கள்.
திருவல்லிக்கேணியில் பாரதி வீட்டுக்கு எதிரே வாழ்ந்தவர்.
பாரதியார் பாடல்களை எழுதித்தர, நல்ல முறையில் ராகம், தாளம் அமைத்து பாடி பாரதியின் பாடல்களை பரப்பியவர்.
பாரதியின் பெண்கள் தங்கம்மா செல்லம்மா இருவரும் இவரது தோழிகள்.
1901 டிசம்பர் முதல் தேதி இவரது பிறந்த தினம்.
தந்தை வெங்கடாசாரியார், தாயார் பட்டம்மாள்.
ஆறு வயதில் திருமணம். கணவர் பார்த்தசாரதி.
வை மு சடகோபாச்சாரியாரின் தம்பி பார்த்தசாரதி.
திவ்யதேசமான திருக்கோளூர் பெருமாள் வைத்தமாநிதி குல தெய்வம் என்பதால் “வை” யும் முடும்பை நகர் பூர்வீகம் என்பதால் “மு” வும் சேர்ந்து வை. மு என்ற முன்னொட்டு வழங்குவது பார்த்தசாரதி குடும்பத்தினருக்கு உள்ளது.
கணவர் ஸ்ரீ வை மு பார்த்தசாரதி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்,
கணவரை பற்றிய தேசபக்தி தீ வை மு கோதைநாயகியையும் பற்றியது!
1932 ஜனவரி 26 தேதியை சுயராஜ்ய தினமாக கொண்டாடியது நாடு.
காந்தியின் கோரிக்கையை ஏற்று கதர் புடவையை அணிந்து கொண்டு மதுவிலக்கு பிரசாரத்தில் ஈடுபட்ட கோதையை நோக்கி கள்ளுக்கடைக் காரர்களின் துப்பாக்கிகள் நீண்டன.
அஞ்சாமல் கள்ளுக்கடை மறியலுக்கு சென்றார் கோதை.
சுதந்திர போராட்ட நிகழ்வுகளில் தடைகளை மீறி கலந்து கொண்டார் மேடையில் பேசினார்.
பாரதியின் பாடல்களை உணர்ச்சியுடன் பாடினார்.
சொல்லின் செல்வர் தீரர் சத்திய மூர்த்தி போன்றோர்கள் இவரது பேச்சை கண்டு வியந்தனர்.
ஆங்கில அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
மடிசார் புடவையுடன் சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி இவர் என்பது குறித்துக் கொள்ளத்தக்கது.
தேசிய நாவல்களான இவரது தியாகக் கொடி, நளின சேகரன் நாவல்கள் ஆங்கில அரசின் கண்களை உறுத்தியது. சிறையிலிருந்து நாவல் எழுதியவர் .
சுதந்திரத்துக்குப் பின் மகாத்மா சேவா சங்கம் என்ற அமைப்பை அரசு உதவியுடன் அமைத்து மதுவிலக்கு, தீண்டாமை எதிர்ப்பு .பெண்கள் முன்னேறத்துக்கு, பத்திரிகை, எழுத்து என்று பிரபலமானவர்.
1960 இல் பிப்ரவரி 20ஆம் தேதி வைத்தமாநிதியில் கலந்தார்.
*பார்ப்பான் சுதந்திரத்துக்கு சிறை சென்றானா? என்று கேட்கும் வரலாற்று அறிவு அற்றவர்களுக்கு*
*பிராமண பெண்கள் கூட சிறை சென்றார்கள் என்று சொல்லுகிறது வரலாறு.*
மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறுதற்கரிய பேறு
பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது.
யாரும் பெறாவரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின்
சூழ்ச்சியால் கௌரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம
வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது
விதி.
என்னதான் நல்லது செய்தாலும் நம்மை அறியாமல் அதர்மம் செய்து விட்டால்
அதற்குரிய பலா பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும்.
பிறருக்கு நடக்கும் அநீதியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலும் பாவம்
வந்து சேரும் என்பதை மிக அழகாக சுட்டி காட்டியுள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடும், ஆண்டி கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள்......!
🌹 தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி) மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
🌹 இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட முருகன் பழநி மலைக்கு வந்து விடுகிறார்.
1
முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழநி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார்.
2
ஆனால் உமையவளோ தன் மகன் முருகனை காண பழநிக்கே செல்ல அனுமதிக்கும் படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடை பெற்றதால் அன்னை பிரியா நாயகி என்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால் பிரியா விடையார் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...
ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:
உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி
முருகன் சிலை
அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.
போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.