நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன்.கோவில்களுக்கு செல்வது பிடிக்கவில்லை.
நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன்.ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.
நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில், ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு திலகம் & 10 ரூபாய்.
என் அம்மா மூடநம்பிக்கையால் அந்த பணத்தை சந்தோஷமாக செலவு செய்தார்கள் என்று நம்பிய எனக்கு வெறுப்பாக இருந்தது. இது போன்ற விஷயங்கள் என்னை கோவில்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையிலிருந்து விலக்கி வைத்தது.
பின்னர் நான் வளர்ந்து,நான் விரும்பிய மதசார்பற்ற அரசியலைப் பின்பற்ற ஆரம்பித்தேன், அன்று ஒருநாள் என்னை நெகிழ வைத்த ஒரு செய்திக் கட்டுரையைப் பார்த்தேன்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரின் அறிவிப்பின்படி, இமாம்களின் சம்பளம் மாதம் ரூ.10,000லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும்.
அதேசமயம், உதவியாளர்களின் சம்பளம் மாதம் ரூ.9,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும்.
டெல்லி வக்ஃப் வாரியத்தின் கீழ் வரும் தேசிய தலைநகரில் உள்ள 185 மசூதிகளுக்கு இந்த முடிவு பொருந்தும்.மஸ்ஜித்களில் வசிக்கும் மௌலவிகள், மௌலானாக்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட்டதை நான் உணர்ந்தேன்.
தேவாலயத்தில் பங்குத் தந்தைகள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் மாத ஊதியம் வழங்கப்பட்டது.பல்வேறு நலத்திட்டங்கள் அவர்கள் எந்தவித கோரிக்கையும் வாய் திறக்கும் முன்பே நிறைவேற்றப் பட்டுவிட்டது.இந்த செயல்பாட்டை எல்லாம் நான் ஒரு நடுநிலையாக வரவேற்றேன்.
பிறகு தான் அந்த உண்மை எனக்கு சுட்டது.இந்துக் கோவில்களுக்கு என்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.உண்மையில் பெரும்பாலான கோவில்களில் பூசாரிகளுக்கு கிட்டத்தட்ட சம்பளம் வழங்கப்படவில்லை.
பார்வையாளர்கள் கொடுக்கும் பணத்தை நம்பியே இருந்தனர்.அதை நான் பிச்சை என்று கேலி செய்திருக்கிறேன்.நான் அதிர்ச்சியடைந்தேன்.அரசுகளின் வருமானம் பெரும்பாலும் இந்துக்களுடையது.
மேலும் கோவில் சொத்துக்கள் உள்ளன.ஆனாலும் இந்துக்களின் கோவில்களை பராமரிப்போர், பூஜை செய்வோருக்கு சம்பளம் மறுக்கப் படுகிறது.
எனது கோவில்களில் இருந்து என்னை விலக்கிய ஒரு மதமாற்றக் கட்டுக்கதையின் மறுபக்கம் பல்லிளித்த தருணம்.பூஜாரிகள் எந்த தவறும் செய்யவில்லை.
அவர்கள் குற்றவாளிகள் அல்ல, ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்.எனது தர்மத்திற்கு ஆதாரமான வழிபாட்டுத் தலங்களைப் பராமரிப்பவர்கள், நான் வணங்கும் எனது கடவுள் சிலைகளைத் தூய்மை செய்பவர்கள் இன்று கையேந்தும் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டார்கள்.
அதனால் அவர்கள் பிறகு கேலிக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.
நமது வரிப்பணத்தில் காசு வாங்கும் முல்லா, மௌலானாக்களுக்கு தரப்படும் மரியாதை கூட அல்ல ,,இவர்களுக்கு அவமானம் தரப்பட்டது.
"கருவறைக்குள் நீ நுழைய முடியுமா..? என்ற தர்ம சங்கடமான கேள்வி ஒன்றை முன் வைத்து என்னை மடக்கினார்கள்.அது எனது வேலை அல்ல.
ஆனாலும் எனது மாமா கோவில் ஒன்றில் கருவறையில் பூஜை செய்கிறார்.'பூஜாரி குடும்பம்' என்பதே ஊரில் அவருக்கு பெயர்.ஆனால் பிராமணர் அல்ல. என்னைச் சுற்றி பின்னப்படும் வலை ஒன்றை கண்டு கொண்டேன்.அது பிராமண வெறுப்பு!!
தெரிந்த பிறகு இந்த மதமாற்ற அரசியலை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன்.
முதலில் என் மனதில் எழுந்த அடுத்த கேள்வி, ஏன்? இந்த பாகுபாட்டிற்கு என்ன காரணம்?
நான் மேலும் தோண்டினேன்
பதில் அரசியல்.
ஆளும் கட்சி இந்து மதத்தை வளர்க்கவே விரும்பவில்லை. மாறாக நமது தர்மத்தை அழிக்க செய்த முயற்சி நம் கண்ணுக்குத் தெரியாமல் திறமையாக மறைக்கப் பட்டது.
அவர்கள் மற்ற மதங்களை ஊக்குவிக்க விரும்பினர்.இவர்கள் வெளியில் வேஷம் போடுகிறார்கள்.
இந்து மதத்தை முடக்கிப் போட அவர்கள் கண்டுபிடித்ததே மதசார்பற்ற அரசியல்.
இந்துக்கள் அதில் ஏமாந்து விட்டதை உணர்ந்தேன்.அது ஒரு வெற்றிகரமான செயல்பாடு.
ஏனெனில் ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்.
"ஏன் அந்த 70 வருடங்களில் ராமர் கோவில் கட்டப்படவில்லை?"
"ஏன் கங்கை தூய்மைப் படுத்தப்படவில்லை?"
"ஏன் காசி கோவிலின் ஆக்கிரமிப்புகள் நீக்கப்படவில்லை?"
"ஏன் சார்தாம் யாத்திரையின் பாதைகள் சீரமைக்கப்படவில்லை?"
"ஏன் கைலாயமலைக்கு இந்தியா நிலப்பரப்பினூடே வழிகள் உருவாக்கப்பட வில்லை?"
"ஏன் இந்துக்களின்(பெரும்பான்மையாக இருந்தும் கூட) அவர்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை?மாறாக தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டார்கள்? "
என்ற எல்லா கேள்விக்கும் எனக்கு பதில் கிடைத்தது.
உண்மையிலேயே அவர்கள் இதில் எதையுமே என்றுமே செய்ய விரும்பவில்லை.
இந்துக்களின் ஆலயங்களை மேம்படுத்துவது மதசார்பற்ற அரசியலுக்கு எதிரானது என்று எனக்கு கூறப்பட்டது.
ஆனால் தெருவெல்லாம் மசூதிகள், சர்ச்சுகள் எழுந்த வண்ணம் இருந்தன.அப்படி இருந்தும் அவர்களுக்கு இந்துக்கள் ஓட்டுக்கள் விழுந்து கொண்டு இருந்தது.அதில் நானும் ஒருவன்.இதை சொல்வதில் நான் வெட்கப்படவில்லை.
ஏனென்றால் இன்று நான் ஏமாறுவதில் இருந்து தப்பித்துக் கொண்டேன்.
சில நாட்கள் நோட்டா கூட எனது தெரிவாக இருந்தது.ஆனால் உண்மை என்ன தெரியுமா??
நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டவர்களும் பெரும்பாலும் என்னைப் போன்ற விரக்தி அடைந்த இந்துக்களே.
உண்மையில் அந்நிய மத ஓட்டுக்கள் ஒருங்கிணைக்கப் பட்டு விட்டன.ஒட்டுமொத்தமாக யார்க்கு அவர்கள் ஓட்டு என்பது தீர்மானிக்கப்படுகிறது.
இந்துக்கள் ஓட்டுக்கள் நோட்டா, இனவாதம், மொழிவாதம் பல்வேறு திட்டமிட்ட காரணிகளால் சிதறடிக்கப் படுகின்றன.
நான்(நாம்) இதை உணரும் முன் போலி மதசார்பற்ற கட்சி ஆட்சியில் அமர்ந்து,தனது மதசார்பற்ற செயல்பாடுகளை மீண்டும் செய்ய ஆரம்பித்து விட்டது.
நீங்கள் உங்கள் மாநிலத்தில் இதை உணர்ந்து பார்க்கும் தருணம் இருந்திருக்கும்.
ஆனால் உங்களுக்கு தஷ்ரத் மஞ்சி தெரியுமா?அவரது முயற்சிகள் நம் வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை.தன் 22 வருட கடின உழைப்பால் மலையை வெட்டி சாலை அமைத்தவர்.
இது நமது மண்டைக்குள் உட்கார்ந்து கொண்டு வேறு யாரோ செயல்படுவது போன்றது.இது ஒரு சின்ன உதாரணம்.
இந்துக்களின் உணர்வுகள் மதிக்கப் படவில்லை என்பது கூட ஒரு பக்கம்.
மாறாக நமது மனம் புண்படுத்தப் பட்டது.இராமபிரான் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று காங்கிரஸ் கட்சி இந்திய அரசு சார்பாக அஃப்டவிட் தாக்கல் செய்தது.
கோடிக்கணக்கான இந்துக்கள் இருந்தும் அவர்களை காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் இதுவரை மதித்தது இல்லை.
வேதனையின் உச்சமான தருணங்கள் தொடர்ந்தன. 70 வருடங்களில் எதுவும் மாறவில்லை.
காங்கிரசுக்கு மாற்று என்று நான் நினைத்த கம்யூனிஸ்ட்கள், ஆம் ஆத்மீ, திரிணமூல், ஜகன் காங்கிரஸ், திமுக போன்ற பிற கட்சிகள் இந்துக்களை அவமதிப்பதில் பிறரை காபந்து செய்வதில் ஒருபடி மேலே இருந்தன.
கேரளா மற்றும் மே வங்கத்தில் இந்துக்கள் மீது நடக்கும் கொலைவெறித் தாக்குதல்கள் பற்றிய தரவுகள் காங்கிரசே பரவாயில்லை போன்ற தோற்றத்தை தந்தது.
மீண்டும் மீண்டும் இந்துக்கள் ஏமாந்து போயினர்.போலி மதசார்பின்மை ஒரு ஆபத்தான மதமாற்ற வலை என்று உணரும் வரை இது தொடரும் என்பதை அறிகிறேன்.
ஆனால் இவை எல்லாம் ஒருநாள் மாறி விட்டது!!!
ஆனால் இவை எல்லாம் ஒருநாள் மாறி விட்டது!!!
2014!!
நான் அதுவரை இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவானது, இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக இந்துக்களை வைத்து மதவாதம் வளர்க்கும் கட்சி என்று நினைத்திருந்த அல்லது எனது மனதில் விதைக்கப்பட்டிருந்த ஒரு கட்சி ஆட்சி அமைத்தது.
அந்த நாளில் இருந்து எல்லாம் மாறி விட்டது.பேசுவதற்கு அஞ்சிய இந்துக்கள் தலை நிமிர்ந்து பேச ஆரம்பித்தனர்.
அயோத்தி,காசி,கங்கை சார்தாம் போன்ற சீரமைப்புகள் இந்துக்கள் யாரும் கோரிக்கை கேட்காமலேயே நடந்தன.
இருந்தும் கூட எங்கும் முஸ்லீம் அல்லது கிறித்தவ விரோதம் வளர்க்கப்படுகிறது என்ற பேச்சே இல்லை.
நான் நினைத்தது தவறு.இத்தனை நாள் எனது முட்டாள்தனம் நிறைந்த போலி மதச்சார்பின்மையை உணர ஆரம்பித்தேன்.
என்னில் பிற ஊடகங்கள் மூலமாக வளர்த்தெடுக்கப்பட்ட நடுநிலை என்னை இதுநாள் வரை ஏமாற்றுவதற்காக கட்டமைக்கப்பட்டது என்பதை உணர்ந்த தருணம்.
எனது கண்களுக்கு முன்னே ஒரு கட்சி இந்துக்களின் நலனிற்காக செயல்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க நான் ஒன்றும் 'நடுநிலைக் குருடன்' அல்ல.
பளிச்சிடும் விளக்குகள்,சாலைகளுடன் கங்கை வரை நீளும் காசி விஸ்வநாதரின் அந்த வளாகம் எனது மனதைத் திறந்து சொல்லி விட்டது.
இந்த ஆட்சியை ஒரு இந்துவாக நான் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதை.இந்த ஆட்சியின் சார்தாம் யாத்திரை, நமாமி கங்கா போன்ற திட்டங்களை பிறகு நான் தேடிப் பார்த்தேன்.உண்மை எனக்கு உறைக்க ஆரம்பித்தது.
ஏன் இந்த ஆட்சி மிகமிக தீவிரமாக எதிர்க்கப்படுகிறது என்பதை புரிய இப்போது அதிக நேரம் எடுக்கவில்லை.
ஆம் இப்போது எனது மதத்தை வளர்க்க விரும்பும் ஒரு கட்சி மையத்தில் உள்ளது,இதை சொல்லவோ ஆதரிக்கவோ உண்மை புரிந்த இந்நாட்டின் குடிமகனாகிய எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
இந்துக்களாகிய நாம் போலி மதச்சார்பின்மையால் மூழ்கி இருந்தோம்.அதனால் தான் கோவில்களின் இந்த தேவையை யாரும் பார்க்கவில்லை.
நம் கண் முன்னே நமது கோவில் சொத்துக்களை அவர்கள் கொள்ளை அடிக்க முடிந்தது.
இந்துக்களாகிய நாங்கள் எங்கள் மத அடிப்படையில் வாக்களிக்க முடியாமல் செய்யப்பட்டோம்.
ஆனால் மறுபக்கம் மதஓட்டுக்கள் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
இந்துக்களின் பார்வை மட்டும் மதசார்பற்ற நோக்கு கொண்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இந்துக்களுக்கு ஊட்டப்பட்டது.நமது வழிபாடுகள், நடைமுறைகள் திட்டமிட்டு நிறுத்த/தடை செய்யப்பட்டன.
இது ஒரு கூடுதல் செய்தி.ஈரமுள்ள மனதால் படிக்க வேண்டாம்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின்படி:மனு தாக்கல் செய்யும் போது நரசிம்ம கோபாலன் மாத சம்பளமாக ரூ. 750, உயர்த்தப்பட்டது.
அதுவரை கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக அவர் பெற்றுக் கொண்டிருந்த 250ரூபாய்.
நீதிமன்றம் வழங்கிய 750/- சம்பளத்தை, "3 மடங்கு சம்பள உயர்வு இதோ உனக்கு..." என்று கிண்டல் தொனியில் அவருக்கு அந்தப் பணம் வழங்கப் பட்டது.
கோயிலில் மேலும் ஆறு முழுநேர சேவை பணியாளர்கள் உள்ளனர்,
அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெறும் மூன்று இலக்க சம்பளம்.900க்கு அருகில் என்று நினைத்து விட வேண்டாம்
300,400,600 என்ற அளவில் தான்.திருப்பூந்துருத்தி ஆலய உதவியாளர் சம்பளம் 240ரூ.
அதுவும் பல மாதங்களாக தரப்பட வில்லை.
பத்தமடை அருகே உள்ள வில்வநாதர் கோவிலில் பூசாரிக்கு ரூ.1000 சம்பளம் வழங்கப்படுகிறது.
பிரம்மதேசத்தில் உள்ள வரலாற்று மற்றும் புராதன கைலாசநாதர் கோவிலில், அர்ச்சகருக்கு மாதம் 19 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதெல்லாம் காணும்போது ஒரு இந்து ஆலய வழிபாட்டாளாராக கலங்கினால் இதற்கு காரணம் நீங்களும் தான் என்பதை வலித்தாலும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
எனக்கு அதில் தயக்கமில்லை.
ஏனெனில் நான் உண்மை தெரிந்து கொண்டேன்.
நிஜத்தில் கோவில் சொத்துக்கள் கோடிக்கணக்கில்.சம்பளம் தாராளமாக தரலாம்.ஆனால் இது காரணத்துடன் மறுக்கப் படுகிறது.
இவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது.நமது கோவில்களை அழிய விடப்பட வேண்டும்.
நமது கோவில்களில் அர்ச்சகர்களின் நிலை மிகவும் மோசமாக ஆக்கப்பட்டு விட்டது'. அவர்களை பிச்சைக்காரர்கள் போல் காட்டியது யார்?
சம்பளம் இல்லாமல் கோவில் நடைமுறைகளுக்கு பணி செய்ய எவரும் முன்வரக் கூடாது.திட்டமிட்ட அழிப்பு செயல்பாடுகள்.
ஆனால் இது எல்லாம் மாறி விடும் என்று இன்று நான் நம்ப ஆரம்பித்து விட்டேன்.
ஒரு இந்துவாக என்னை சாதரணமாக அல்ல தலை நிமிர்வுடன் என்னை உணர ஆரம்பித்தேன்.இந்த முறை ""ஹிந்து வேறு ஹிந்துத்வா வேறு"" என்று ராகுல் காந்தி சொன்ன போது நான் ஏமாறவில்லை.
திருப்பி கேலி செய்தேன் அதை ஒரு 'இந்து வெறுப்பாளன்' சொல்லக்கூடாது என்று பதிவிட்டேன்.
அந்த தந்திரமான மதசார்பற்ற நிலை மனோநிலை மாறி சுதந்திரமான இந்து ஆதரவாளன் என உணர்ந்தேன்.
போலிகளை, வேஷமிடுபவர்களை என்னால் இப்போது எளிதாக கண்டுபிடித்து விட முடிகிறது.
மம்தா கோவிலுக்கு செல்வதும்
பிரியங்கா திலகமிடுவதும்,
ஜெகன் இந்துவாக மாறியதாக படித்ததையும் என்னால் போலித்தனம் என்று உடனே உணர முடிகிறது.
இப்போது, நான் மிகவும் பெருமையுடன் எனது கோயிலுக்குச் செல்கிறேன்.
கோவில்களில் என்னால் முடிந்த அளவு தானம் செய்கிறேன்.
நம் தெய்வங்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த நம் மரபைக் கவனித்துக்
கொள்பவர்களுக்கு நன்றி செலுத்தும் பங்களிப்பாக இதை நான் கருதுகிறேன்.
இப்போது அவர்கள் உருவத்தை கண்டு கேலி உணர்வு பொங்குவதில்லை.மாறாக அவர்களை காணும் போது மனத்தால் பணிகிறேன்.
நமது தர்மத்தைக் காக்க நினைக்கும் அந்ததியாக உணர்வு என்னில் நமது தர்மத்தின் ஊற்றைப் பெருக்கெடுக்க வைக்கிறது.
போலி வரலாறு ஆரிய படையெடுப்பை நம்பிய காலம் மலையேறிவிட்டதை அடுத்த முறை நீங்கள் கோவிலுக்குச் சென்று பண்டிட் ஜியிடம் பணம் காணிக்கை அளிக்கும் போது, அவர் பாதிக்கப்பட்டவர் & குற்றவாளி அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
மலிவான மதமாற்ற அரசியலுக்கு அவர் பலியாக்க பட்டார் என்பதை உணரும் தருணம் அது.
கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதையும், பார்வையாளர்கள் கொடுக்கும் பணத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு சம்பளம் வழங்கப்படுவதையும் அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த நிலை மாறி நன்மைகள் வந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன்.
எனக்குத் தெரியும்.இந்து என்ற எனது உணர்வால் நான் யாரையும் புண்படுத்தவில்லை.
ஆனால் இனி என்னை நான் இந்து என்பதற்காக யாரும் புண்படுத்தி விட முடியாது.
இந்து என்ற உணர்வில் எனது தர்மத்தை மதிக்கும், காப்பாற்றும் ஒரு ஆட்சியை தேர்ந்தெடுக்க நான் செயல்படுவேன்.
பிறரால் என்மீது கட்டமைக்கப்பட்ட
தயக்கங்களை
நான் குப்பையில் தள்ளினேன்.
இந்து என்றால் நடுநிலை அல்ல என்ற பொய்யை அடித்து நொறுக்கினேன்.
என்னைப் போன்ற இந்துக்கள் நடுநிலையாக இருப்பதால் தான் பிற மதங்கள் இன்று இந்த நாட்டில் சுதந்திரமாக இருக்கின்றன.
ஆனால் இன்று எனது கோவிலை இடித்தால் பொறுத்துக் கொள்வதே நடுநிலைமை என்று எவனாவது சொம்படித்தால் அதை நம்பும் மூடனல்ல!! அது நிச்சயமாக முட்டாள்தனம்.
மதமாற்ற கட்சிகள் அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் இனி எனது ஆதரவைப் பெறுவதற்கு அவை இனிமேல் என்னை,எனது தர்மத்தை மதிக்க வேண்டும்.மதித்தே ஆக வேண்டும். இதில் இனி மாற்றமில்லை.
உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.
அது என்ன பழைய சடங்கு?.
சந்தியாவந்தனம் !.
அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான்.
தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான்.
இராமாயணத்தில் ஒரு அற்புதமான காட்சிதசரதன் அவை கூடியிருக்கிறது. விஸ்வாமித்திர முனிவர் வருகிறார்.
வந்தவர், தசரதனைப் புகழ்கிறார். ‘‘இன்று இந்திரன் பதவியில் இருப்பது உன்னால்தான்” என்கிறார். தசரதனுக்கு மகிழ்ச்சி. விஸ்வாமித்திரரைப் பார்த்து, ‘‘உமக்கு அடியேன் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கிறார்.
*சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.*
1
*இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது.*
*இக்கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.*
2
*முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.
மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறுதற்கரிய பேறு
பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது.
யாரும் பெறாவரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின்
சூழ்ச்சியால் கௌரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம
வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது
விதி.
என்னதான் நல்லது செய்தாலும் நம்மை அறியாமல் அதர்மம் செய்து விட்டால்
அதற்குரிய பலா பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும்.
பிறருக்கு நடக்கும் அநீதியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலும் பாவம்
வந்து சேரும் என்பதை மிக அழகாக சுட்டி காட்டியுள்ளனர்.