பழனி ஆண்டவரை பற்றி யாருக்கும் தெரியாத ஆச்சரிய தகவல்கள்....!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாக திகழும் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள்..
🌹 தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி) மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
🌹 இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் (தலை) வைத்து உடனே அகற்றப்படுகிறது.
அதாவது முழு அபிஷேகத்திற்கு சந்தனமும், பன்னீரும் மட்டும் தான்.
இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
🌹 ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது.
இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
🌹 அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
🌹 இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது.
🌹 விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.
முன்பு சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர்.
பிறகு இந்த முறை மாற்றப்பட்டது.
🌹 விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்.
ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.
இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.
🌹 தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
🌹 அந்த சிலையை சுற்றி எப்போதும் சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.
🌹 இந்த சிலையை போகர் செய்து முடிக்க ஒன்பது வருடங்கள் ஆயிற்று.
🌹 அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சி எடுத்ததாகவும்,
இதற்காக 4000க்கும் மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தேர்வு செய்து, 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் செய்தனர்.
🌹 போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார்.
இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
🌹 கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோவில்கள் சேதமடைந்து போனாலும், நவபாஷாணத்தில் சிலை செய்த இந்த கோவில் இன்றளவும் பிரசித்தி பெற்றிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான்.
🌹 தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும்.
ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க முடியாது.
🌹 பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் உள்ளது. இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது . . .
திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீ காமகோடி பீடத்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் , 1943 இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் சில காலம் அங்கு தங்கிய பொழுது ஒரு நாள்,
தரிசிக்க வந்த பக்தர்களிடம் இங்கு அருகாமையில் எங்கேனும் கிணறு தோண்டும் வேலை நடைபெருகிறதா என்று கேட்டார்.
உடனே ஒரு பக்தர் முன் வந்த வழியில் ஓரிடத்தில் கிணறு தோண்டுவதை கண்டதாக கூறினார்.
உடனே நீ போய் கடப்பாரை மம்மட்டியுடன் ஒரிருவரை அழைத்து வா என்றார்.
சில நிமிடங்களில் 3 பேர் கடப்பாரை சகிதமாக பெரிவாளின் முன் வந்து நமஸ்கரித்தனர்.
பெரியவா அவர்களை ஆசிர்வதித்து தன்னுடன் வருமாறு அழைத்து பின்புறம் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றார்.
அடியார்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்ற பொழுது ஒரு விஷயம் தெரியவரும்.
அவர்கள் சிவநெறி, சிவத்தொண்டு, தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை.
அவர்கள் செய்த சில செயல்கள் சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லாததாக நாம் விவாதிக்கலாம்.
ஆனால் அவர்களிடமிருந்த இறை உணர்வும் பக்தியும், இறையடியார்களிடத்திலே கொண்ட அன்பும் நாம் உணர்வுப் பூர்வமாக விளங்கிக்கொண்டால் தான் அவர்கள் செய்யும் காரியங்களை நம்மாலே விளங்கிக்கொள்ள முடியும்.
கலிக்கம்ப நாயனார் திருப்பெண்ணாடகம் (பெண்ணாடம்) என்ற ஊரிலே வாழ்ந்து வந்தவர்.
அங்கே இருக்கும் சிவன் கோயிலில் (தூங்கனை மாடத் திருக்கோயில்) எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருக்கு பல தொண்டுகளை ஆற்றியவர். மிகப்பெரிய வணிகர்.
கருங்குளம் ஸ்ரீ குலசேகர நாயகி ஸமேத மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் :
ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் மார்த்தாண்டேஸ்வரர் என்னும் மன்னன் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாலையை சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார்.
ஊருக்காக குளங்களை வெட்டினார்.
மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது.
எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர்.
மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது.
இதற்கிடையில் குலசேகரப்பட்டினத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு செல்லும்போது அன்னை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனை கண்டு வணங்கி அங்கு ஒரு அன்னையை பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பால்பாயாசம் தயாரிக்கும் புதிய பாத்திரம்.......
குருவாயூர் கோவிலுக்கு நிவேத்யபால்பாயசம் தயாரிப்பதற்காக பீமன் வார்ப்பு குழுவினர் வந்தனர்.
திங்கள்கிழமை காலை கோயிலுக்கு 1500 லிட்டர் பால் பாயாசம் தயாரிக்கக்கூடிய பிரமாண்டமான 4 காத்தான்
ஓடு சரக் (வார்ப்) வழங்கப்பட்டது.
தேவஸ்வம் தலைவர் டாக்டர்.வி.கே.விஜயன் தேவஸ்வம் நிர்வாக குழு உறுப்பினர்கள் க்ஷேத்திரம் தந்திரி பிரம்மஸ்ரீ: பி.சி.தினேசன் நம்பூதிரிபாட், சி.மனோஜ், நிர்வாகி கே.பி.வினயன், தேவஸ்வம் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள்
தேவஸ்வம் தலைவர் டாக்டர் வி.கே.விஜயன் முன்னிலையில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பிரசாதம் வழங்கினர்.
கிரேன் மூலம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டது.
மடப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அடுப்பில் 4 கத்தான் பொருட்கள் வைக்கப்பட்டன.