அடியார்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்ற பொழுது ஒரு விஷயம் தெரியவரும்.
அவர்கள் சிவநெறி, சிவத்தொண்டு, தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை.
அவர்கள் செய்த சில செயல்கள் சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லாததாக நாம் விவாதிக்கலாம்.
ஆனால் அவர்களிடமிருந்த இறை உணர்வும் பக்தியும், இறையடியார்களிடத்திலே கொண்ட அன்பும் நாம் உணர்வுப் பூர்வமாக விளங்கிக்கொண்டால் தான் அவர்கள் செய்யும் காரியங்களை நம்மாலே விளங்கிக்கொள்ள முடியும்.
கலிக்கம்ப நாயனார் திருப்பெண்ணாடகம் (பெண்ணாடம்) என்ற ஊரிலே வாழ்ந்து வந்தவர்.
அங்கே இருக்கும் சிவன் கோயிலில் (தூங்கனை மாடத் திருக்கோயில்) எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருக்கு பல தொண்டுகளை ஆற்றியவர். மிகப்பெரிய வணிகர்.
எப்பொழுது அவருடைய வீட்டிற்கு சிவனடியார்கள் வந்தாலும் அவர்களுக்கு திருப்பாதம் விளக்கி, திருவமுது ஊட்டி, அவர்கள் மகிழும்படியாக நடந்து கொண்டு, அவர்களிடத்திலே ஆசிபெறுபவர்.
ஒருநாள் அவர் இல்லம் நோக்கி ஒரு சிவனடியார் வருகின்றார்.
அந்த சிவனடியாரைப் பார்த்தவுடன் அவர் ஏற்கனவே இவரிடத்திலே வேலை செய்தவர் என்பதும் வேலையை விட்டு நீங்கி இப்பொழுது சிவனடியார் வேடம் கொண்டு வந்திருப்பதாகவும் பலரும் சொல்ல அதைப் பொருட்படுத்தாத நாயனார்,
சிவனடியார் என்றால் சிவனடியார் தான்;
அவருக்குத் தொண்டு செய்ய வேண்டியது நமது கடமை என்று சொல்லி, அவருக்கு நீர் வார்த்து திருப்பாதம் விளக்குவதற்கு முற்படுகின்றார்.
ஆயினும் அவருடைய மனைவிக்கு தயக்கம்.
ஒரு காலத்தில் இவர் நம் வீட்டில் வேலை செய்து, வேலையை விட்டு சென்றவர் தானே என்கின்ற எண்ணம்.
அம்மையார் மனதில் எழ, அவருடைய தயக்கத்தையும் அவர் திருவடி விளக்காமல் இருப்பதையும் கண்ட கலிக்கம்ப நாயனார் அவருக்கு தண்டனை தருகின்றார்.
அருகில் இருந்த வாளை எடுத்து வந்து மனைவியின் கரத்தைப் பற்றி வெட்டினார்.
இதனால் மயக்கமுற்று சிவனைத் துதித்தப்படி மயங்கி கீழே விழுந்தார் அந்த அம்மையார்.
நடந்ததைக் கண்டு சிவனடியார் மனம் பதைத்து எழுந்தார்.
கரங்களை வெட்டியதால் அம்மையாரின் கரங்களிலிருந்து இரத்தம் பெருகி வழிந்தது.
எந்தவித சலனமும் இல்லாமல் அந்த சிவனடி யாருடைய திருப்பாதத்தை விளக்கி அவருக்கு திருவமுது ஊட்டுகின்றார்.
சிவத்தொண்டு செய்யும் பொழுது எத்தனை குறுக்கீடுகள் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாத வைராக்கிய மனம் அவருக்கு சிவனுடைய பேரருளைப் பெற்றுத் தந்து நாயனார் என்கிற உயரத்துக்கு உயர்த்தியது.
கலிக்கம்பரின் அன்பை உலகுக்கு உணர்த்தவே இத்தகைய நாடகத்தை அரங்கேற்றிய சிவபெருமான் அவர்கள் முன் தோன்றினார்.
உறக்கத்திலிருந்து எழுந்தது போல் எழுந்து நின்றாள் கலிக்கம்பரின் மனைவி. மூவரும் இறைவனின் பாதம் பணிந்து மனமுருகி நின்றார்கள்.
எம்பெருமானின் அருளால் தமது மனைவியுடன் இணைந்து சிவத்தொண்டுகள் செய்து இறைவனடி சேர்ந்தார் கலிக்கம்ப நாயனார்.
கலிக்கம்ப நாயனாரின் குருபூஜை இன்று தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.
திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீ காமகோடி பீடத்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் , 1943 இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் சில காலம் அங்கு தங்கிய பொழுது ஒரு நாள்,
தரிசிக்க வந்த பக்தர்களிடம் இங்கு அருகாமையில் எங்கேனும் கிணறு தோண்டும் வேலை நடைபெருகிறதா என்று கேட்டார்.
உடனே ஒரு பக்தர் முன் வந்த வழியில் ஓரிடத்தில் கிணறு தோண்டுவதை கண்டதாக கூறினார்.
உடனே நீ போய் கடப்பாரை மம்மட்டியுடன் ஒரிருவரை அழைத்து வா என்றார்.
சில நிமிடங்களில் 3 பேர் கடப்பாரை சகிதமாக பெரிவாளின் முன் வந்து நமஸ்கரித்தனர்.
பெரியவா அவர்களை ஆசிர்வதித்து தன்னுடன் வருமாறு அழைத்து பின்புறம் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றார்.
கருங்குளம் ஸ்ரீ குலசேகர நாயகி ஸமேத மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் :
ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் மார்த்தாண்டேஸ்வரர் என்னும் மன்னன் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாலையை சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார்.
ஊருக்காக குளங்களை வெட்டினார்.
மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது.
எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர்.
மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது.
இதற்கிடையில் குலசேகரப்பட்டினத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு செல்லும்போது அன்னை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனை கண்டு வணங்கி அங்கு ஒரு அன்னையை பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பால்பாயாசம் தயாரிக்கும் புதிய பாத்திரம்.......
குருவாயூர் கோவிலுக்கு நிவேத்யபால்பாயசம் தயாரிப்பதற்காக பீமன் வார்ப்பு குழுவினர் வந்தனர்.
திங்கள்கிழமை காலை கோயிலுக்கு 1500 லிட்டர் பால் பாயாசம் தயாரிக்கக்கூடிய பிரமாண்டமான 4 காத்தான்
ஓடு சரக் (வார்ப்) வழங்கப்பட்டது.
தேவஸ்வம் தலைவர் டாக்டர்.வி.கே.விஜயன் தேவஸ்வம் நிர்வாக குழு உறுப்பினர்கள் க்ஷேத்திரம் தந்திரி பிரம்மஸ்ரீ: பி.சி.தினேசன் நம்பூதிரிபாட், சி.மனோஜ், நிர்வாகி கே.பி.வினயன், தேவஸ்வம் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள்
தேவஸ்வம் தலைவர் டாக்டர் வி.கே.விஜயன் முன்னிலையில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பிரசாதம் வழங்கினர்.
கிரேன் மூலம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டது.
மடப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அடுப்பில் 4 கத்தான் பொருட்கள் வைக்கப்பட்டன.