திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீ காமகோடி பீடத்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் , 1943 இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் சில காலம் அங்கு தங்கிய பொழுது ஒரு நாள்,
தரிசிக்க வந்த பக்தர்களிடம் இங்கு அருகாமையில் எங்கேனும் கிணறு தோண்டும் வேலை நடைபெருகிறதா என்று கேட்டார்.
உடனே ஒரு பக்தர் முன் வந்த வழியில் ஓரிடத்தில் கிணறு தோண்டுவதை கண்டதாக கூறினார்.
உடனே நீ போய் கடப்பாரை மம்மட்டியுடன் ஒரிருவரை அழைத்து வா என்றார்.
சில நிமிடங்களில் 3 பேர் கடப்பாரை சகிதமாக பெரிவாளின் முன் வந்து நமஸ்கரித்தனர்.
பெரியவா அவர்களை ஆசிர்வதித்து தன்னுடன் வருமாறு அழைத்து பின்புறம் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றார்.
அங்கு ஓரிடத்தை காட்டி 5 அடிக்கு 5 அடி அளவில் தொடச் சொன்னார்.
ஓரிரு அடிகள் தோண்டியவுடன் ணங் என்று சத்தம் கேட்டது.
உடனே பெரியவா அவர்களை நிறுத்தச் சொல்லி, கையால் மண்ணை அள்ளுங்கள் என்று சொன்னார்.
சில நிமிடங்களில் ஒரு லிங்கம் தென்பட கூடியிருந்த அனைவரும்
*ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர* என்று கோஷமிடத் தொடங்கினர்.
அனைவரின் முயற்சியால் ஒரு சின்ன பின்னமும் இல்லாமல் ஒரு பெரிய பஞ்ச முக லிங்கம் அங்கே மண்ணுக் குள்ளிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
மஹா பெரியவாளின் தபோ சக்தியை அனைவரும் உணர்ந்து அவரை நோக்கி நமஸ்கரித்தனர்.
இன்று நாம் தரிசிக்கும் வகையில் ஒரு கோயிலாக பஞ்ச முக லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
மஹா பெரியவாமுன்பு ஒரு முறை காளத்தி அருகில் பரமக்குடியில் பஞ்சலிங் கத்தைக் கண்டுபிடித்துச் சொன்னது போல்
இந்த லிங்கத்தையும் கண்டுபிடித்துச் சொல்லி நித்ய பூஜை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.
ஸ்ரீ திரிபுர சுந்தரி ஸமேத ஸ்ரீ பஞ்ச முகேஸ்வரராக அகிலாண்டேஸ்வரி சன்னதியின் அருகில் உள்ள சங்கர மடத்தில் தரிசிக்கலாம்.
ஸ்ரீ ருத்ர மஹாமந்திரத்தில் பரமசிவனுக்கு ஐந்து மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
கிழக்கு பார்த்திருக்கும் முகம் தத்புருஷம்.
இது ரிக் வேதத்திற்குரியது.
தெற்கு பார்த்திருக்கும் முகம் அகோரம்.
யஜூர் வேதத்திற்குறியது.
மேற்கு பார்த்திருக்கும் முகம் ஸத்யோஜாதம்.
ஸாம வேதத்திற்கு உரியது.
வடக்கு பார்த்திருக்கும் முகம் வாமதேவம்.
அதர்வண வேதத்திற்குரியது.
ஐந்தாவது ஈசானம் ஆகாயத்தை நோக்கி ஜோதிர்மயமாக உருவமில்லாமல் காணப்படுவது.
ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்தாற்போல் உள்ள பரமக்குடி என்ற குன்றின் மேல் பஞ்சமுக லிங்கம் இருக்கிறது.
ஸ்ரீ பரமாசாரியாள் 1932இலும் பிறகு 1939இலும் அப்பஞ்சமுக லிங்கத்தை தர்சனம் செய்து கொண்டார்கள்.
1966ஆம் வருடம் ஸ்ரீ பரமாசாரியாளும் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவாளும் சாதுர்மாஸிய காலத்தில் இந்தப் பஞ்ச முக லிங்கத்தை தர்சனம் செய்துள்ளார்கள்.
வாதாபியில் “ஐகோளை” என்னுமிடத்தில் இம்மாதிரி பஞ்சமுக லிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
அடியார்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்ற பொழுது ஒரு விஷயம் தெரியவரும்.
அவர்கள் சிவநெறி, சிவத்தொண்டு, தவிர வேறு விஷயங்களைப் பெரிதாக நினைப்பதில்லை.
அவர்கள் செய்த சில செயல்கள் சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லாததாக நாம் விவாதிக்கலாம்.
ஆனால் அவர்களிடமிருந்த இறை உணர்வும் பக்தியும், இறையடியார்களிடத்திலே கொண்ட அன்பும் நாம் உணர்வுப் பூர்வமாக விளங்கிக்கொண்டால் தான் அவர்கள் செய்யும் காரியங்களை நம்மாலே விளங்கிக்கொள்ள முடியும்.
கலிக்கம்ப நாயனார் திருப்பெண்ணாடகம் (பெண்ணாடம்) என்ற ஊரிலே வாழ்ந்து வந்தவர்.
அங்கே இருக்கும் சிவன் கோயிலில் (தூங்கனை மாடத் திருக்கோயில்) எழுந்தருளிய சிவக்கொழுந்து நாதருக்கு பல தொண்டுகளை ஆற்றியவர். மிகப்பெரிய வணிகர்.
கருங்குளம் ஸ்ரீ குலசேகர நாயகி ஸமேத மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் :
ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் மார்த்தாண்டேஸ்வரர் என்னும் மன்னன் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாலையை சுற்றி அருமையான ஊர் ஒன்றை அமைத்தார்.
ஊருக்காக குளங்களை வெட்டினார்.
மரங்களின் நிழல்கள் பட்ட காரணத்தினால் எப்போதுமே குளங்கள் கருமையான நிறத்தில் காணப்பட்டது.
எனவே இந்த ஊரை கருங்குளம் என அழைத்தனர்.
மார்த்தாண்ட மன்னன் இந்த ஊரை அமைத்த காரணத்தினால் மார்த்தாண்டேஸ்வர கருங்குளம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது.
இதற்கிடையில் குலசேகரப்பட்டினத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த குலசேகர மன்னன், தாமிரபரணி ஆற்றில் நீராடி விட்டு செல்லும்போது அன்னை இல்லாத மார்த்தாண்டேஸ்வர சிவனை கண்டு வணங்கி அங்கு ஒரு அன்னையை பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பால்பாயாசம் தயாரிக்கும் புதிய பாத்திரம்.......
குருவாயூர் கோவிலுக்கு நிவேத்யபால்பாயசம் தயாரிப்பதற்காக பீமன் வார்ப்பு குழுவினர் வந்தனர்.
திங்கள்கிழமை காலை கோயிலுக்கு 1500 லிட்டர் பால் பாயாசம் தயாரிக்கக்கூடிய பிரமாண்டமான 4 காத்தான்
ஓடு சரக் (வார்ப்) வழங்கப்பட்டது.
தேவஸ்வம் தலைவர் டாக்டர்.வி.கே.விஜயன் தேவஸ்வம் நிர்வாக குழு உறுப்பினர்கள் க்ஷேத்திரம் தந்திரி பிரம்மஸ்ரீ: பி.சி.தினேசன் நம்பூதிரிபாட், சி.மனோஜ், நிர்வாகி கே.பி.வினயன், தேவஸ்வம் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள்
தேவஸ்வம் தலைவர் டாக்டர் வி.கே.விஜயன் முன்னிலையில் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு பிரசாதம் வழங்கினர்.
கிரேன் மூலம் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டது.
மடப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அடுப்பில் 4 கத்தான் பொருட்கள் வைக்கப்பட்டன.