பீமன் பூஜித்ததாலயே இந்த இறைவன் பீமேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
அருள்மிகு திண்டிவனம் பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீ பாலாம்பிகை ஸமேத ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில்.
பஞ்சபாண்டவர்கள் 14 வருடம் வனவாசத்தில் இருந்த காலத்தில் கடைசி வருட வனவாசத்தில் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும் என்பது கட்டளையாக இருந்தது.
அச்சமயம் தர்மருக்கு பசி ஏற்படவே பீமனை அனுப்பி உணவு கொண்டு வரச் சொன்னார்.
எங்கு தேடியும் உணவு கிடைக்காமல் தவித்த பீமன் இறுதியாக அந்தப் பகுதியில் இருந்த சிவன் கோயிலுக்கு சென்று சிவனிடம் உணவு வழங்குமாறு வேண்ட உடனடியாக அவ்வழியே சென்ற ஒருவர் மூலமாக பால் கிடைக்க அதனை குடித்து பசியாறினார்.
பீமன் பூஜித்ததாலயே இந்த இறைவன் பீமேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
பீமனுக்கு பால் அளித்ததால் இத்தல அம்பாள் பாலாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோயில் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கோயிலின் கருவறை, இடைக்கட்டு அர்த்தமண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ஆகியவை எழில் தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.
விஜயநகர பேரரசர்களும், சம்போவராய மன்னர்களும் இந்த கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளனர்.
சதுரமான கருவறையில் ஐந்தடி உயரத்தில் லிங்க வடிவில் பீமேஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.
கருவறையின் வெளிச்சூழலில் உள்ள தெற்கு புற தேவகோட்டங்களில் தாமரை மலர்களின் மேல் நர்த்தனமாடும் விநாயகர் பெருமான்,
கல்லால் மரத்தின் மீது அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் வழங்கும் தக்ஷணாமூர்த்தி,
கிழக்கே சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி நிற்கும் திருமால்,
வடக்கே பிரம்மன் திருபங்க நிலையில் நின்ற கோணத்தில் அருள் பாலிக்கும் துர்க்கை ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
கருவறையின் வெளியே வலது புறம் பைரவர்த்தி, ராஜராஜேஸ்வரி, இடதுபுறம் சூரிய பகவான் தரிசனம் தருகிறார்கள், மகா மண்டப தூணில் ஆஞ்சநேயர் உருவம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கோயிலின் தென்மேற்கு பகுதியில் வரசித்து விநாயகர் சிலையும், வடமேற்கே வள்ளி தெய்வானை சமேதராக ஆறுமுகனும், வடமேற்கு திசையில் பாலாம்பிகையும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.
கருவறைக்கு நேர் எதிரே மகா மண்டபத்தின் வெளியே தனி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தி பகவான் சாளரத்தின் வழியே சிவபெருமானின் தரிசிக்கிறார்.
அதனை ஒட்டி பலிபீடம் அமைந்திருக்கிறது வடகிழக்கு மூலையில் நவகிரக சன்னதியும் காணப்படுகிறது.
யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதி அற்புத நிகழ்வு இது.
1879- ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தது.
ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எதிரான போரில்
படையை தலைமை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்தார்.
கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம்.
ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது.
மேலும் கர்னிலிடமிருந்து எந்தக் கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை.
கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார்.
ஒரு நாள் குதிரை சவாரி சென்றவரின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது.
அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவரை ஈர்க்க, உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களைக் கண்டார்.