#மீனாட்சிசொக்கநாதர்_திருக்கோயில் #கோச்சடை
மதுரை மாநகரில் உள்ள மிகப் பழமையான கோயிலில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் மண்டபங்களை ஆராய்ச்சி செய்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் மிக பழமையான கோயில் இது என்பதை உறுதி செய்துள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில்
மீனாட்சி அம்பாள் உடனுறை சொக்கநாதர் எழுந்தருளி அருள் பாலிக்கும் இத்திருத்தலம் உள்ளது.
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சிவ தீர்த்தம்
புராண பெயர்: #கோவிச்சடையன்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார். ஆண் வில்வ மரமும் பெண் வில்வமரமும் அருகருகே
அதுவும் சுவாமிக்கு மிகவும் பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு. இங்குள்ள ஆண் வில்வ மரத்தின் ஒரு இணுக்கில் 3 வில்வ இலைகள் இருக்கும். பெண் வில்வ மரத்தில் ஒரே இணுக்கில் 7 வில்வ இலைகள் வரை இருப்பது அதிசயம். பொதுவாக அரசமரமும் வேப்ப மரமும் ஒருங்கே அமையப்பெற்ற இடத்தில்
விநாயகர் இருப்பது சிறப்பு. ஆனால் இங்கோ தமது தந்தைக்கு மிகவும் உகந்த வில்வ மரத்தடியில் அதுவும் ஆண் பெண் என இரு மரங்களும் ஒருங்கே அமைந்துள்ள இடத்தில் உள்ளது மிகவும் சிறப்பானது. மதுரைப் பகுதிகளில் உள்ள சிவத்தலங்களிலேயே சுமார் 4 அடி உயரமுள்ள பிரம்மாண்ட மூர்த்தி வீற்றிருக்கும் தலம்
இது. இது பாண்டியர் கால புராதன கோயில் ஆகும். இத்தலத்தின் முன் உள்ள அம்மச்சியம்மன் கிராம தேவதை ஆவார். இவர் துர்க்கையின் அம்சம் உள்ளவர். சங்கு சக்கரதாரி, வடக்கு பார்த்த முகம் என்று மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருகில் உள்ள கோச்சடை முத்தையா சுவாமி
கோயிலில் சுவாமி புறப்பாட்டின் போது இத்தலம் வந்து பொங்கல் வைத்து வழிபட்ட பின்பு தான் அக்கோயிலுக்கு செல்வார்கள். சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் முக்கியமான புட்டுக்கு மண் சுமந்த படலம் இங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான். வைகையில்
வீற்றிருக்கும் தலம். கோவிச்ச சடையான் என்ற இத்தல நாயகனே கோச்சடை என்ற பெயர் வரக் காரணமாக இருந்தவர். கோவித்துக் கொண்டதால் கோவிச்ச சடையான் என்ற பெயர் பெற்று பின்னர் அதுவே கோவிச்சடை என்றாகி பின்பு கோச்சடை என்ற பெயர் வந்தது. ரணதீர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலின்
உள்ள பூஜைச் சாமான்கள் கிட்டதட்ட 100 வருடங்களுக்கு முந்தையதாக உள்ளன. சுமார் 300 வருடங்களுக்கு
முன்பிருந்து தான் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் புட்டுத்திருவிழா நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பு இத்தலத்தில்தான் அந்த திருவிழா நடந்து வந்துள்ளதாக தெரிகிறது. மன்னர் திருமலைநாயக்கர்
காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிட்டுக்கு மண் சுமந்த பிரம்படி பெற்ற பெருமானே இத்தலத்தின் மூலவர். மீனாம்பிகை அம்பாள் மதுரை மீனாட்சி போலவே அழகுற அருள்பாலிக்குறார். அருகில் உள்ள திருவேடகம் தலத்து கதையான ஏடு ஏறிய படத்திலும் இந்த தலம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வைகை
ஆற்றில் உருவான சுயம்பு லிங்க மூர்த்தி என்றும் குறிப்பிடுகிறார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு வாய்ந்த தலம். இத்தலத்தின் காவல் தெய்வமாக திகழ்கிறார் முனீசுவரர். பெரும் வெள்ளம் வருகிறது. மன்னர் உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை வெள்ளத்தை அடைக்க மண் சுமக்க வேண்டும்
என்பதால் வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள்யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் வாலிபப் பையன் வேடத்தில் வந்து வந்தியிடம் பாட்டி உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்கு புட்டு தருவாயா என கேட்கிறார். அதாவது நீ அவிக்கும் புட்டில் உதிர்ந்துள்ள புட்டெல்லாம்
எனக்கு உதிராத புட்டெல்லாம் உனக்கு என்று கூற வந்தியும் ஒப்புக் கொள்கிறாள். வந்தி அவிக்கும் புட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்க அதையெல்லாம் இவரே சாப்பிட்டு விட்டு கரையை அடைக்க மண் சுமக்காமல் உண்ட மயக்கத்தில் அயர்ந்து தூங்கி விடுகிறார். அவ்வழியே வந்த மன்னன் கரையை அடைக்காமல் தூங்கி
கொண்டிருப்பதால் கோபமடைந்து பிரம்பால் அடிக்கிறார். முதுகில் பிரம்படி வாங்கிய பெருமான் துள்ளி ஓடிச் சென்று ஒரு கூடையில் மண்ணை அள்ளிப் போட அதுவரை அடைக்க முடியாத வெள்ளத்துக்கு அணை போடப்பட்ட அதிசயத்தை அனைவரும் கண்டு வியக்கின்றனர்.
மேலும் அனைவரது முதுகிலும் பிரம்படி தடம் இருப்பது தெரிய
வருகிறது. வந்தது ஈசன்தான் என்பதை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்து அவன் தாள் பணிந்து வணங்குகின்றனர். இந்த திருவிளையாடல் புராண வரலாறு நிகழ்ந்த தலம் தான் இது. குழந்தை வரம், கல்யாண வரம் ஆகியவைக்கு பக்தர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறுகிறது. தொழில் முடக்கம்,
கடன் தொல்லை, பிணி பீடை இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பெருமாள் வீற்றிருக்கும் தலம் என்பதால் இங்கு சுவாமிக்கு நேர்த்திக்கடனாக புட்டு செய்து படைத்து வழிபடுகிறார்கள். சுவாமி அம்பாளுக்கு வேட்டி, புடவை சாத்துகிறார்கள்.
பொங்கல் வைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதம் தருகிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
சித்திரை மாதம் – திருக்கல்யாண உற்சவம் – ஒருநாள் திருவிழா – மதுரை பெரியகோயிலான மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோயிலில் திருக்கல்யானம் நடப்பது போல் இங்கும் அதே நேரத்தில் திருக்கல்யாணம் நடப்பது மிகவும் முக்கியமான விழா ஆகும். ஏராளமான சுமங்கலிப் பெண்கள் கோயிலில் தரப்படும் புதுத்தாலியை அணிந்து கொள்வர். பிட்டுத்திருவிழா – ஆவணி மூல நட்சத்திரம் – இத்தலத்தின் பெருமைக்கு காரணமாக இருந்த விழா இது.
மதுரையில் நடக்கும்போது இங்கும் அவ்விழா நடக்கும். ஒவ்வொரு மாதமும் பிரதோஷத்தன்று இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அபிஷேக அர்ச்சனைகள் செய்கின்றனர்.
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தில்லையாடி_வள்ளியம்மை கிறிஸ்தவ முறைப்படி செய்யப்படும் திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் எனவும், மற்ற சம்பிரதாய முறைப்படி நடை பெறும் திருமணங்கள் செல்லுபடி ஆகாது எனவும் தென்னாப்பிரிக்காவில் உள்ள உச்ச நீதிமன்றம் 1913 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 14 ஆம் தேதி, ஒரு தீர்ப்பை வழங்கியது. இதனை
எதிர்த்து, தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்தை எதிர்த்து, தன் தாயுடன் போராட்டத்தில் பங்கேற்றார் வள்ளியம்மை. அது நீண்ட தூர நடைப் பயணம். வள்ளியம்மை கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப் பட்டார். உடல் நிலை மிகவும் பாதிக்கப்
பட்ட போதும், கலக்கம் அடையாமல், தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். சொந்தமாக கொடி கூட இல்லாத இந்தியர்கள் என ஏளனம் செய்த ஆங்கிலேயப் போலீசாரிடம், தன்னுடைய புடவையின் முந்தானையை காண்பித்து, இது தான் எங்கள் நாட்டின் தேசியக் கொடி என சூளுரைத்தார். 1914ல் தன் 16வது வயதில் தென்
பத்து வயதுப் பையன் தரிசனத்துக்கு வந்தான். "அவனை விஜாரி" என்று பெரியவர் ஜாடை காட்டினார்கள்.
ராயவரம் பாலு என்ற தொண்டர் அவனிடம் போய், என்ன பெயர், என்ன பண்ணுகிறாய் என்றெல்லாம் விஜாரித்து விட்டு
வந்து பெரியவாளிடம் சொன்னார்.
"ராமகிருஷ்ணானாம். அஞ்சாவது படிக்கிறானாம். அப்பா சமையல் வேலை செய்யறாராம். ரெண்டு தங்கை."
பெரியவாள் வலது கையை சற்றே உயர்த்திக் காட்டிவிட்டு பிரசாதம் கொடுக்கச் சொன்னார்கள். திருநீறு - குங்குமத் தட்டை அவனிடம் நீட்டிய பாலு, "நன்றாகப் படி" என்றார். பாலு
திரும்பி பெரியவாள் அருகில் வந்ததும், "இனிமேல் படி படி என்று சொல்லாதே" என்றார்கள். பாலுவுக்குப் புரியவில்லை. பள்ளிக் கூடத்தில் படிக்கும் பையனைப் பார்த்து, படி படி என்று அறிவுரை கூறுவது தவறில்லையே? பின் ஏன் படி..படி.. என்று சொல்ல வேண்டாம் என்கிறார்கள்?
"இனிமேல் பசங்களைப் பார்த்தால்
#Demonetization took place in India about 6 years ago. Within a few weeks, India's biggest trader of fake currency, Javed Khadani committed suicide in Karachi. According to the unconfirmed report, he had India's goods worth 40000 crores and all that became garbage. Property worth
billions ruined in Pakistan. The goods of making fake rupees worth billions of rupees were destroyed in Pakistan. Pakistan Army, running Pakistan's ISI and printing industry, has gone bankrupt. Pakistan is craving for flour and pulses just within 7 years of this demonetization in
India. You can connect some dots here too. Meaning that a large portion of Pakistan's economy was India's fake currency. Neither there was any industry then and there is none now. Sycophants in India were saying 6 years ago
“Demonetization will destroy the country.” But they did
#பக்தனுக்காக_எதையும்_செய்யும்_பகவான்
சேனாயி ஒரு முடி திருத்துபவர், விட்டலன் பக்தர். தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன் ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார். மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம். அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை
மொகலாயர்கள் ஆண்ட நேரம்! பந்தர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் மொகலாய சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக பண்டரிபுரத்தில் இருந்தான். அவனுக்கு ஒரு பிரத்யேகமான முடி திருத்துபவன் தேவை. ஒரு நல்ல ஆள் கிடைத்தால் அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப
செலவுகளையும் ஏற்று, ஸௌகரியமாக வைத்துக் கொள்வதாக அறிவிப்பு வந்தது. நவாபிடம் வேலை செய்பவன் மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது. இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்து கொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை,
#நற்சிந்தனை யாரையும் திட்டாமல், சாபம் விடாமல், கெடுதல் நினைக்காமல் இருப்போம். நாம் எதை செய்கிறோமோ அதுவே நம்மை வந்து சேரும். நாம் மனம் வருந்தினாலே போதும் நமக்கு பாதிப்பை தந்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விடும். எதை செய்தாலும் யாரையும் காயப் படுத்தாமல் வாழப் பழகுவோம். கடவுள் நாம்
கேட்டதை தரவில்லை என்று கவலைப்படாமல் கெட்டதை தரவில்லை என்று மகிழ்ச்சி கொள்வோம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழவும், இல்லாததை நினைத்து கவலைப்படாமல் இருக்கவும் பயிற்சி எடுப்போம். நம்மைப் படைத்த கடவுளுக்கு தெரியும் நமக்கு எந்த நேரத்தில் எது தேவை என்று. அவன் மேல் நம்பிக்கையுடன்
பொறுமையாக இருந்தால் நல்லதே நடக்கும்! எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்போம். தாங்கவே முடியாத துன்பம் வந்தால் கூட பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்து கொள்வோம். யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அடியோடு ஒழிப்போம். அது நம் நிம்மதியை தான் தொலைக்க வைக்கும்.
#ராஜமாரி_அம்மன்_திருக்கோயிலில்
மூலவர் : ராஜமாரி அம்மன்
ஊர் : ஒன்னிப்பாளையம்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பல வருடங்களுக்கு முன் ஒன்னிபாளையத்தில் வசித்த மக்கள், சத்தியமங்கலம் அருகிலிருக்கும் கொத்தமங்கலத்திற்குச் சென்று அங்கே கோயில் கொண்டிருந்த அம்மனை வழிபட்டு
வந்தனர். அங்கு விவசாயம் செழித்தும், மக்கள் வசதி வாய்ப்போடும் இருப்பதற்கு அந்த அம்மனே காரணம் என நம்பினர். அதுபோல் நம் ஊரிலும் ஒரு கோயில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணினர். அதை அந்த அம்மனிடமும் கோரிக்கையாக வைத்தனர். அச்சமயத்தில் ஒருநாள், ஒன்னிபாளையத்தைச் சேர்ந்த பெரியவர்
ஒருவரை ஆட்கொண்ட அம்மன், நான் கொத்தமங்கலத்துக்காரி இப்போது உங்கள் ஊரில் நிலைகொள்ள வந்திருக்கிறேன். எனக்கு இங்கு கோயில் எழுப்பினால், சுற்றியுள்ள எட்டு ஊர்களையும் ஏகபோகமாக வாழவைப்பேன் என்று அருள்வாக்குக் கூற, அப்படி அமைந்ததுதான் ஒன்னிப்பாளையம் ராஜமாரியம்மன் கோயில். துவக்கத்தில்