கிரவுஞ்ச மலையையே தகர்த்திருக்கிறார் தங்கள் மருமகன் முருகப்பெருமான்.
நிலைமை இப்படியிருக்க, இவற்றை எப்படி பெரிதென ஒத்துக் கொள்ள முடியும்! பூலோகத்தில் தானே இவையெல்லாம் நடந்தன.
எனவே, பூலோகத்தில் பெரியவர் என்று யாருமில்லை.
பகவனாகிய தாங்களே பெரியவர், என்றான்.
இல்லை...இல்லை... நீ சொல்வது சரியல்ல.
உலகில் பெரியவர்கள் பலர் உள்ளனர்.
அவர்கள் உன்னைப் போன்ற பக்தர்கள் தான்!
அவர்களில் யார் மிக மிக உயர்ந்த பக்தி செலுத்துகிறார்களோ,
என்ன நடந்தாலும் கடவுளே கதியென இருக்கிறார்களோ, எவ்வளவு சோகம் வந்தாலும், எல்லாம் என்னால் வந்தது என நினைக்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்று பதிலளித்தார் பெருமாள்.
எப்படி? என்று தன் சந்தேகத்தை வெளியிட்ட பக்தன், தாங்கள் சர்வ வியாபி.
வாமன அவதாரம் எடுத்த போது, பூலோகத்தை தங்கள் சிறுபாதம் கொண்டு ஒரே அடியால் அளந்து விட்டீர்கள்.
*திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிட்டும்.