இன்று அனைத்து அரசு விழாக்களிலும், கல்வி நிலைய விழாக்களிலும் பாடப்படும் "நீராருங் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படவேண்டும் என ஆணை பிறப்பித்து கையெழுத்திட்டது.
ஒரு மனிதனை சக மனிதன் உட்கார வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் அவலம் நிறைந்த கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய கையெழுத்திட்டது.
குடிசை வீடுகள் இல்லா தமிழகத்தை அமைக்க 'குடிசை மாற்று வாரியம்’ உருவாக்க கையெழுத்திட்டது.
(2)
சுதந்திர தினத்தன்று பிரதமரும், குடியரசு தினத்தில் குடியரசுத் தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்கள் மட்டுமே கொடியேற்றுவது மரபாக இருந்த நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரைவிட மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களே கொடி ஏற்றும் உரிமை பெற்றவர்
(3)
என போராடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களும் தேசிய கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தது கலைஞரின் பேனா தான்.
ஆணும் பெண்ணும் சமம் என வெறும் வாய் வார்த்தையில் மட்டும் சொல்லாமல், ஆண்களுக்கு மட்டுமே காலம் காலமாக வழங்கப்பட்ட சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை
(4)
வழங்கும் தனிச் சட்டத்தை நிறைவேற்றியதும் கலைஞரின் பேனா தான்.
ஏழை மக்களும் பயன் பெரும் வகையில் பெண்களின் திருமணத்துக்காக, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள்
(5)
அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வே.ரா - நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம், ஈ.வே.ரா - மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண உதவித் திட்டம்,
(6)
சத்தியவாணி முத்து அம்மையார் இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், சத்தியா அம்மையார் குழந்தைகள் காப்பகங்கள் திட்டம், சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்,
(7)
பங்காரு அம்மையார் மகளிர் குழுக்கள் திட்டம் என பெண்கள் கல்வி பொருளாதாரம் சமூகம் என அனைத்திலும் தலை நிமிர்ந்து நிற்க அத்தனை திட்டங்களையும் வடிவமைத்து நடைமுறைக்கு கொண்டு வந்து பெண்கள் வாழ்வை செழிப்பாக்கியது கலைஞரின் பேனா தான்.
(8)
இன்றும் வடமாநிலங்களில் பல கிராமங்கள் இருளில் மூழ்கி இருக்கும் நிலையில் 1966-ம் ஆண்டே குடிசைக்கு ஒரு விளக்கு என்ற திட்டம் மூலம் மலைமேல் இருக்கும் குக்கிராமங்களுக்கும் கூட மின் இணைப்பு வழங்கி மக்களை இருளில் இருந்து காத்தது கலைஞரின் பேனா.
(9)
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ஊருக்குள் பல குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியிருந்த நிலையை களைய போலியோ ஒழிப்புத் திட்டத்தை நிறைவேற்றி இன்று போலியோவால் ஒரு குழந்தை கூட பாதிக்கப்படாத நிலையை உருவாக்கியது கலைஞரின் பேனா.
(10)
1966-ம் ஆண்டுத் தமிழகத்தில் 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இருந்தன, அவற்றில் அரசு கல்லூரிகள் 2, தனியார் கல்லூரிகள் 87. அதில் படித்த மாண்வர்களின் எண்ணிக்கை 1,31,093. 1969 முதல் 1976-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் கலைஞர் முதலமைச்சரானதும்,
(11)
68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டன. பின்னர், அடுத்தடுத்துக் கலைஞர் முதலமைச்சர் ஆன காலகட்டங்களில் புதிதாகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2010-ம் ஆண்டில் தமிழகக் கல்லூரிகளின் எண்ணிக்கை 587, இதை சாத்தியப்படுத்தியது கலைஞரின் பேனா தான்.
(12)
போக்குவரத்து வசதி இல்லாமல் மாணவர்களின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக இலவச பஸ்பாஸ் வழங்க ஆணையிட்டது கலைஞரின் பேனா தான்.
24 அரசு பல்கலைக் கழகங்களும், 25 தனியார் பல்கலைக்கழகங்களும் தொடங்க ஆணையிட்டது கலைஞரின் பேனா தான்.
(13)
வெறுமனே கல்லூரிகள் தொடங்கினால் மட்டும் போதாது மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி வழங்க வேண்டும் என 2010-ம் ஆண்டு, அரசுக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு இலவசமாக்க கையெழுத்திட்டது கலைஞரின் பேனா தான்.
(14)
ஆரம்பக் கல்விக்குக் காமராசர், உயர்கல்விக்குக் கலைஞர் என்று சொல்லும் அளவுக்கு உயர்கல்வி வளர்ச்சியில் பங்காற்றியது கலைஞரின் பேனா தான்.
வாய் வார்த்தையில் மட்டுமே தமிழ் தமிழ் என பேசும் பிழைப்புவாதிகள் மத்தியில், தமிழை 1967-68-ம் ஆண்டு இளங்கலை வகுப்பிலும்,
(15)
1969-70-ம் ஆண்டு இளம் அறிவியல் வகுப்பிலும் பயிற்றுமொழி ஆக்க ஆணையிட்டது கலைஞரின் பேனா. தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் ஆணை பிறப்பித்ததும் கலைஞரின் பேனா தான்.
(16)
அனைத்துப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை தமிழை கட்டாய பாடமாகக் கற்பிக்க வேண்டும் என சட்டம் இயற்ற எழுதியது கலைஞரின் பேனா தான்.
2010-2011-ம் ஆண்டு அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில்
(17)
தமிழ்மொழி வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து, இந்தியாவிலேயே முதன்முறையாகத் தாய்மொழியில் கற்க ஆணையிட்டது கலைஞரின் பேனா தான். ஆக, இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் முழு காரணம் கலைஞரின் பேனா மட்டும் தான் என சொன்னால் அது மிகையாகாது.
(18)
இவை அனைத்திற்கும் மேல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கித்தந்து, செம்மொழி மாநாடு நடத்தி உலகிற்கு தமிழ்மொழியின் சிறப்புகளை கொண்டு சேர்த்தது கலைஞரின் பேனா தான். இவை மட்டுமல்ல இன்னும் பல மக்கள் நல திட்டங்களில் கையெழுத்திட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகை செய்தது கலைஞரின் பேனா.
(19)
இலக்கியத்துறையில் அவர் பேனா செய்த சாதனைகள் எண்ணில் அடங்காதது, பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த திரைத்துறையில் இவர் பேனா செய்த புரட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பராசக்தி திரைப்பட அனல் பறக்கும் வசனங்கள், சிலப்பதிகாரத்தை அடிப்படையாக கொண்ட பூம்புகார் திரைப்படத்தின்
(20)
கொஞ்சு தமிழ் வசனங்களுக்கு சொந்தக்காரர் கலைஞர். ராஜகுமாரி, மந்திர குமாரி என இன்னும் எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம் கலைஞரின் பேனா திரைத்துறையிக் செய்த புரட்சியை எடுத்துச்சொல்ல.
இது மட்டுமல்ல பல பாடல்கள் கவிதைகள் கதைகள் என கலைஞரின் பேனா தொடாத இலக்கியவடிவமே இல்லை எனலாம்.
(21)
சேரன் செங்குட்டுவன், உதயசூரியன், தூக்குமேடை, பழனியப்பன் என 21 நாடகங்களை எழுதித் தள்ளியது கலைஞரின் பேனா தான். அப்பப்பா எத்தனை எத்தனை ஆச்சரியங்களை நம் தமிழ்நாட்டு மக்களுக்கு பரிசளித்துள்ளது கலைஞரின் பேனா.
(22)
கலை இலக்கியம் மக்கள் பணி மக்கள் நலன் என அனைத்திலும் ஆளுமை செலுத்திய, வாழ்நாள் முழுவதும் எழுதி எழுதி தமிழுக்காய் வாழ்ந்த கலைஞரின் நினைவை போற்ற, பேனா நினைவுச்சின்னம் வைப்பது அவர் தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை.
மோடி அவர்களை குறித்து BBC ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுருக்கு, BBC யாருன்னா நம்மள ஆட்சி செஞ்ச பிரிட்டிஷ் காரர்களின் செய்தித்தாள் என சொல்லி இந்த வீடியோவை ஆரம்பிப்பதே, விடியோ பார்ப்பவர்களின் மனநிலையை BBC ஆவணப்படத்திற்கு எதிராக தயார் செய்வது போல் உள்ளது.
(1)
இந்தியாவின் இறையாண்மையை குலைக்க செய்யப்படும் சதி தான் இந்த ஆவணப்படம் எனவும், மோடி அவர்களை இழிவு செய்ய அவதூறு பரப்பும் விதமாக செய்யப்பட்ட விஷயம் இது எனவும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் சொன்னதாக பதிவு செய்துள்ளீர்கள்.முதலில் அவதூறு என்பது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொல்வது
(2)
என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், இந்த BBC ஆவணப்படத்தில் அவதூறு பரப்பப்படவில்லை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை வெறியாட்டத்தை வெளிச்சம் போட்டு கட்டியுள்ளனர். உண்மையாக நடந்ததை எடுத்து சொல்வது அவதூறு ஆகாது என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன்.
(3)
ஊருக்குள்ள இருக்குற மொத்த சாதிவெறி அப்யூஸர் கூட்டமும் இந்த பதிவுக்கு கீழ தான் குத்தவச்சுருக்கு.
இவங்களுக்கெல்லாம் தான் ஏதோ இந்த கலாச்சாரத்தை தூக்கி நிறுத்துற மாதிரி நெனைப்பு. மூஞ்சி தெரியாத ஒரு ஐடில வந்து சாதி வெறியை காட்டுற கோழைகளின் ஒரு சின்ன sample தான் இந்த abuser கூட்டம்👇🏽
ஒருத்தர் என்னன்னா இந்த காதலர்கள அங்கையே கொலை செஞ்சிருக்கனும்னு சொல்லுறாரு, இன்னொருத்தர் ஏதோ வீட்ல உள்ள ஆடு மாடு மாதிரி நான் சொல்லுறத மட்டும் தான் என் பிள்ளைகள் கேக்கனும்னு சொல்லுறாரு, என் புள்ள யாருகூட வாழனும்னு நான் தான் முடிவு செய்வேன்னு சொல்லுறதெல்லம் அசிங்கம்னு கூட தெரியல 👇🏽
இன்னும் சாதியை கட்டிகிட்டு அழர இந்த சாதிவெறி கூட்டத்துக்கிட்ட இருந்து இந்த சமூகம் மேல வரனும்னா சுயமா யோசிக்க கத்துக்கனும், கலாச்சாரம் பண்பாடு எல்லாத்தையும் பொண்ணுங்க காலுக்கு நடுவுல வச்சிருக்கிற இந்த சாதிவெறி கூட்டம் சொல்லுறத ஒரு பொருட்டாகவே மதிக்காம கடந்து போறது தான் சரி 👇🏽
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை உள்ளது, இதை பற்றி ஏன் பேச வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பதிவை கடந்து செல்லலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கூட சிறிதளவு பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.
(1)
அந்த வகையில் #BiggBossTamil வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல இந்த சமூகத்தின் ஒரு முன்மாதிரி (Prototype) என்று தான் என் புரிதல். இது ரியாலிட்டி ஷோ என சொல்லிக் கொண்டாலும் இதை ஒரு Social experiment எனவே பல உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
(2)
காஸ்மோஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்ட் பிஹேவியரல் சயின்சஸ் (CIMBS) இயக்குனர் "சுனில் மிட்டல்" பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது "வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் மூடிய இடத்தில் வாழும் மக்களை வைத்து நடத்தப்படும் ஒரு சுவாரஸ்யமான Social experiment" என்று கூறுகிறார்.
(3)
பா. ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் பேசப்பட்ட சில புத்தகங்கள் குறித்த சில தகவல்கள்.
மெட்ராஸ் திரைப்படத்தில் "ஜி.கல்யாண ராவ்" அவர்கள் எழுதிய "தீண்டாத வசந்தம்" புத்தகத்தை காண்பித்திருப்பார்.
பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அடையாளத்தையும்,
(1)
அங்கீகாரத்தையும் இந்த சமூகத்தில் பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்திக்கிறார்கள் என்பதனை, நிலாத்திண்ணை வழியே எல்லண்ணா குடும்பத்தின் ஐந்து தலைமுறைகளின் வாழ்க்கையின் ஊடாக நமக்கு படம் பிடித்துக்காட்டும் உணர்வுப்பூர்வமான புத்தகம்.
(2)
கபாலி திரைப்படத்தில் "ஒய்.பி.சத்தியநாராயணா" அவர்களின் "My Father Baliah" எனும் புத்தகம் காண்பிக்கப்பட்டிருக்கும்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரு தலித் குடும்பத்தின் அசாதாரணக் கதை இது. நர்சியா தன் தந்தைக்கு ஒரு நிஜாம் அவர்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட நிலத்தை இழந்து,
நீலம் இது ஒரு நிறம் மட்டுமல்ல இச்சமுதாயத்தில் அது ஆற்றிய தொண்டுகள் பல. ஆம், நீலம் என்றாலே நினைவிற்கு வருவது நம் நாட்டின் புரட்சியாளர் கற்பி புரட்சி செய் ஒன்று சேர் என்று கூறிய மாமேதை,
சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்றுறைத்த சீர்திருத்தவாதி.
(1)
நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை , இதற்கெல்லாம் மேலாக "#ஜெய்_பீம்" என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர், அவர் தான் பாபா சாகேப் என்றழைக்கப்படும் Dr. B. R . அம்பேத்கர்.
(2)
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,உயர் கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்,பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர், தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்து கலகம் செய்தவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்;
(3)
உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய மற்ற ஜீவராசிகளுக்கு புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால் அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகின்றன.
(1)
இதில் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை.
பிறவியில் இயற்கையாய் உள்ள பேதங்களின் சிறு மாறுதல்களின் அடிப்படையில் பேதங்களின் அடிப்படையிலும் பேதங்களைக் காண்பதற்கில்லை. ஜீவ நூல் - ஜீவ ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆதியில் அதாவது, உலகம் தோன்றிய காலத்தில் மனிதனும் மற்ற மிருக
(2)
ஜீவப்பிராணிகளும் ஒன்றுபோலவேதான் நடந்து வந்ததெனக் குறிப்பிட்டுள்ளனர்.
மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளைவிட அறிவுத் துறையில் சிறிது மாற்றம் இயற்கையில் இருந்துவருகிற காரணத்தால் மனிதனுக்கு ஆசைப்பெருக்கெடுத்து - வாழ்க்கையின் பெருங்கவலைக்கு ஆளாகி,
(3)