தட்டிப்பறித்த தமிழ்நாட்டை
தன்
தாடித்தலைவன் கையில்
எங்கள்
காஞ்சித்தலைவன் ஒப்படைத்தார்;
மூன்று கோடிப் பேருக்கும்
அரணாய் நின்றார்;
அண்ணனாய் நின்றார்;
மதராஸ் என்றார்கள்;
இது தமிழ்நாடு என்றார்!
தற்கொலைப்
படைகளை அல்ல,
தன்மானப்
படைகளை உருவாக்கினார்;
குழந்தைகள் கையில்
துப்பாக்கிகளை அல்ல,
புத்தகங்களைத் திணித்தார்;
வாய்க்கரிசி அல்ல
பசிக்கு அரிசி இட்டார்;
போர்த்திட்டங்கள் அல்ல,
பார்போற்றும் பெருஞ்சட்டங்கள்
செய்தார்:
இவ்வளவும் செய்தவரை
தறிகெட்ட தறுக்கர் சிலர்
பிழைப்புவாதி என்பார்;
அரசியல்வாதி என்பார்;
அதுவும் சரிதான்;
அவர் இரண்டும்தான்;
*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*..
அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..
காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் .
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க...
(குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.)
பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..
அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்...
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
செலவு ஏதும் கிடையதுங்கோ...
சாமானியர்களை அரசியல்மயப்படுத்தும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் ஒவ்வொரு வட்டத்திலும் கிளைகளை உருவாக்கினார் அண்ணா.
திமுக உறுப்பினர் கட்டணம் 50 காசுகள். குறைந்தது 25 பேர் கொண்ட அமைப்புகள் கிளைகளாகப் பதிவுசெய்யப்பட்டன. ஓராண்டுக்குள் 2,035 பொதுக்கூட்டங்களில் பேசினார்கள் திமுக தலைவர்கள். ஆளாளுக்குப் பத்திரிகைகளை உருவாக்கி நடத்தினார்கள்.
மாணவர்கள் தம் பங்குக்கு ஓய்வு நேரங்களில் பூங்காக்களிலும் தெருமுனைகளிலும் இயக்கப் பத்திரிகைகளை வாசித்துக் காட்டினார்கள். தமிழருக்கு என்று தனி நாடு என்ற கனவு எல்லோர் மனதிலும். விளைவாக, ஒரே ஆண்டில் 35 ஆயிரம் உறுப்பினர்கள், 505 கிளைகளைக் கொண்ட இயக்கமாக உருவெடுத்தது திமுக.
பிபிசி ஆவணப்படத்தின் முதல் பகுதியைப் பார்த்தேன். குஜராத் கலவரம் குறித்து நமக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான தகவல்களைச் சீரான முறையில் தக்க சான்றுகளுடன் விவரிக்கிறது. இசுலாமியப் படுகொலைகள் நிகழ்ந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் பயன் அதிலுள்ள
பதற்றமான உண்மையின் குரலே. காலம் கடந்தும் அது நம்மை உலுக்கத் தவறுவதில்லை. குற்றங்களின் கல்லறைகளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பூதங்கள் எழும், அவை நிரந்தரமாக உறங்குவதில்லை என்பதற்கான சான்று இப்படம்.
இவ்வழக்கின் நான்கு முக்கியமான சாட்சிகளைக் குறித்துப் படத்தில் காட்டுகிறார்கள். முதலாமவர், இம்தியாஸ். கலவரத்தின்போது காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாப்ரி வீட்டில் உயிருக்கு அஞ்சித் தஞ்சமடைந்தவர்.
தமிழகம் முழுக்க உள்ள அனைத்து பெரிய கோயில்களும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சிதம்பரம் நடராசர் கோயில் மட்டும் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் சர்ச்சைக்குரியதாக தொடர்ந்து வருகிறது. 1885 ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் கோவில் தொடர்பாக வழக்கு நடந்துள்ளது.
1951 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் சிதம்பரம் கோயில் தனிச் சொத்து அல்ல அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என தீட்சிதர்களுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்போது முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராசா, சிதம்பரம் கோயிலை சட்ட வரம்பிற்குள் கொண்டுவர ஆணை பிறப்பித்தார்.
ஆனால் அந்த ஆணைக்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற தீட்சிதர் தரப்பு தொடர்ந்து கோவிலை தங்கள் வசமே வைத்திருந்தது.
பிறகு 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சிதம்பரம் கோயிலை அரசு எடுத்துக் கொண்டு செயல் அலுவலரை நியமித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர் தீட்சிதர்கள்.
காமராஜர் காலத்தில் குடிப்பதற்கு யாருகிட்ட பணம் இருந்தது. பணம் இருந்தவன் லைசென்சோட குடிச்சிட்டு தான் இருந்தான். இல்லாதவர்கள் அவனவன் சொந்தமாக கள்ளச் சாராயத்தை தானே காய்ச்சி குடிச்சிட்டு இருந்தார்கள்.
பஞ்சம்
சந்தை கஞ்சி
தமிழ்நாடு மாநில உரிமை எல்லாம் சந்தி சிரித்தது யாருடைய ஆட்சியில்
காமராஜரும் ஏழை
மக்களும் ஏழை
சில பண்ணையாளர்களின் கைவசமே ஆட்சி இருந்தது.
சாராய கடைகளை 1971-ம் ஆண்டு தி.மு.க. திறந்தாலும், 1974-ம் ஆண்டு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியது என்று கலைஞர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா?