பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் பெரும் தவம் செய்து வேண்டியதற்கு இணங்க, சிதம்பரத்தில் தை மாதம், பூச நட்சத்திரம், பௌர்ணமி, பகல் நேரம் கூடிய நன்னேரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் கொண்டருளினார்.
சிதம்பரம் - மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் - இம்மூன்றினாலும் சிறப்புற்ற ஸ்தலம்.
தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம். சிதம்பர க்ஷேத்ரத்தின் தச (10) தீர்த்தங்களுள் முக்கியமானது.
காசியில் உள்ள கங்கையை விட மேலானது.
மிகவும் புனிதம் வாய்ந்தது.
சிவசக்தி ரூபங்கள் இணைந்தது.
ஸ்ரீ நடராஜப் பெருமானின் தங்க மேனியில் தவழ்ந்த அபிஷேக தீர்த்தம் சேரும் இடமாதலால்,
சிவகங்கையே பொற்குளம் போல் காட்சியளிக்கின்றது.
இங்கு ஸ்நானம் செய்வதால் பொன்னார் மேனியனின் திருவருளால் தேகம் புனிதமடைகின்றது.
கௌடதேசத்து சிம்மவர்மன் உடல் குறை நீங்க இங்கு ஸ்நானம் செய்து தங்க மேனியனாக ஹிரண்யவர்மனாக மாறினான்.
இக்குளத்தின் வருண (மேற்கு) திசை வாயிலில், ஸ்வாமி தீர்த்தம் கொடுப்பதே தைப் பூச தினத்தின் மிக முக்கிய நிகழ்வு.
ஸ்தலம் : சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம்.
உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம்.
பக்தர்களின் வேண்டுதல்களை செவி கொடுத்துக் கேட்டு வரமருளும் தோடுடைய செவியன்.
எவரும் விரும்பாத ஊமத்தம்பூ, பாதி வளர்ந்த சந்திரன் போன்ற குறைகள் கொண்ட அனைத்தையும் தாம் ஏற்றுக் கொண்டு,
தம்மை தரிசிப்பவர்களுக்கு அருளை நிரம்ப வாரி வழங்குபவர்.
தைப் பூச தினத்தில் பஞ்ச மூர்த்தி வீதியுலா வந்து,
பகல் நேரத்தில், சிவகங்கைக் குளத்தின் மேற்கு வாசலில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி அருகிருக்க,
ஸ்வாமி தீர்த்தவாரி (அனைவருக்கும் அருளுதல்) நடைபெறும்.
மதிய வேளையில் கனகசபையில் தரை முழுவதும் அன்னம் நிரப்பி,
ஸ்ரீ நடராஜ ராஜருக்கு நிவேதனம் செய்து,
அனைவருக்குமான அன்னதான நிகழ்ச்சி நடைபெறும்.
தைப்பூச அன்னதான பாவாடை ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது.
எதிரிலிச் சோழன் குலோத்துங்கன் சிவபாதசேகரன் எனும் சோழ மன்னன் தைப்பூச அன்னப்பாவாடையை நிகழ்த்தினான் என்று பழங்கால செப்பேடு தெரிவிக்கின்றது.
தைப்பூச தினத்தில் சிவகங்கையில் ஸ்நானம் செய்வதால், பாபங்கள் அனைத்தும் நீங்கி, பெரும் செல்வம் மற்றும் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
தைப்பூச நன்னாளில் சிவகங்கையில் நீராடி,
ஆனந்த நடனமிடக் காரணமாகிய ஸ்ரீ மூலநாதரையும்,
பொன்னம்பலத்தில் விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜரையும் தரிசித்து பேரின்பப் பயன்பெறுவோம்.
குறிப்பெடுத்த நூல்கள் :
1. குஞ்சிதாங்கிரிஸ்தவம்
2. கோபால கிருஷ்ண பாரதி பாடல்
3. சிதம்பர ஸபாநாத புராணம்
4. சாந்தோக்ய உபநிஷத், கைவல்ய உபநிஷத்
5. சிலப்பதிகாரம் - ஸ்ரீ நடராஜரின் பாண்டரங்க, கொடுகட்டி நடனம்,
6. ஜோதிட சிந்தாமணி
7. ஸ்ரீ நடராஜ தத்வம்
8. மாணிக்கவாசகர் - திருவாசகம்
9. தேவாரம் - திருஞான சம்பந்தர்
ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீ சித்ஸபேஸ்வர ஸ்வாமினே நமோ நமஹா.
ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு, திருவிசைப்பா போன்றவற்றைப் பாடியருளிய அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேந்தனார்.
இவர் பட்டினத்தடிகளிடம் கணக்குப் பிள்ளையாய் பணிபுரிந்தவர் என்றும் ஞானம் பெற்ற பட்டினத்தடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்தம் வீட்டுக் கருவூலத்தை மக்களுக்காகத் திறந்து விட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவரின் செயலினைக் கண்ட சோழ மன்னன் கணக்குக் காட்ட வேண்டிச் சிறையில் அடைத்தான்.
அதனைக் கண்ட சேந்தனாரின் மனைவி உள்ளிட்ட சுற்றத்தார் பட்டினத்தடிகளிடம் முறையிட்டனர்.
உடன் பட்டினத்தடிகள் “மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி செய்த்தனைக் கயல்பாய் நங்கூர் செந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி
முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!
தைப்பூச விரத முறையும் பலன்களும்...!!
தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி 05.02.2023 அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.
பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது எப்படி? என்று பார்ப்போம்...!!
"வைரக்குஞ்சிதபாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா"
(பொள்ளாச்சி ஜெயம் பாட்டிக்கு கிடைத்த அற்புத அனுபவம்)
நன்றி - மகாபெரியவா புராணம்.
திரு இந்திரா சௌந்தர்ராஜனும் புதுயுகம் டி.வி.யில் 21-12-2018 அன்று சொன்னார்.
சிதம்பரம் நடராஜரின் குஞ்சித பாதத்திற்கு வைரத்தால் கவசம் செய்து வைரக் குஞ்சித பாதம் அணிவிக்க வேண்டும் என்று ஶ்ரீ பெரியவா விரும்பினார்கள்.
நடராஜருக்கு வைரக்குஞ்சித பாதம். பெரியவா எது செய்தாலும் அது அவர் வழிச்செல்லும் அன்பர்களுக்காகத்தானே! அவரே ஸர்வேச்வரன்.
அவர் ஏன் கோவிலுக்குப் போகவேண்டும்.
ராமர் விஷ்ணுவின் அவதாரம். மானுஷ்ய தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லையா? அது போலத்தான்.
சரி. குஞ்சித பாதம் செய்வதென்று தீர்மானித்துவிட்டார்கள். மடத்தில் ஶ்ரீகார்யம், மற்றும் சில முக்யமானவர்களை அழைத்து discussion முடிந்து decision எடுக்கப்பட்டது.