ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு, திருவிசைப்பா போன்றவற்றைப் பாடியருளிய அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேந்தனார்.
இவர் பட்டினத்தடிகளிடம் கணக்குப் பிள்ளையாய் பணிபுரிந்தவர் என்றும் ஞானம் பெற்ற பட்டினத்தடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்தம் வீட்டுக் கருவூலத்தை மக்களுக்காகத் திறந்து விட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவரின் செயலினைக் கண்ட சோழ மன்னன் கணக்குக் காட்ட வேண்டிச் சிறையில் அடைத்தான்.
அதனைக் கண்ட சேந்தனாரின் மனைவி உள்ளிட்ட சுற்றத்தார் பட்டினத்தடிகளிடம் முறையிட்டனர்.
உடன் பட்டினத்தடிகள் “மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி செய்த்தனைக் கயல்பாய் நங்கூர் செந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி
இப்பாடலால் மகிழ்ந்த சிவபெருமான் விநாயகருக்குக் கட்டளையிட அவர் சேந்தனாரைச் சிறைமீட்டார்,
சிறைமீண்ட சேந்தனார் பட்டினத்தடிகளின் ஆணைக்கிணங்க சிதம்பரம் சென்று விறகு வெட்டி
அதனால் கிடைத்த கூலியைக் கொண்டு சிவனடியார்களுக்குக் உணவு தந்து அவர்கள் உண்டதும் தான் உண்டு வாழ்ந்து வந்தார்,
ஒருநாள் சிவபெருமான் தன் அன்பராம் சேந்தனார் அடியார்களுக்கு அளிக்கும் களியினைப் பெற விரும்பி அவர்தம் இல்லத்தினை அடைந்தார்.
சேந்தனாரும் வந்திருப்பவர் இறைவன் என்பதனை அறியாமலே அகமும் முகமும் மலர வரவேற்று உணவளித்தார்.
அன்பரால் அளிக்கப்பெற்ற களியினை விரும்பி உண்ட சிவபெருமான் அடுத்த வேளைக்கும் வேண்டும் என்று எஞ்சியதைத் தன் கந்தைத் துணியில் கட்டிக்கொண்டு பொன்னம்பலம் வந்தடைந்தார்.
சோழ மன்னன் சிவ வழிபாடு முடித்தே உணவு உண்பது என்பதனை தன் வழக்கமாகக் கொண்டிருந்தான்.
அம்மன்னன் இறைவனை வணங்கும் பொழுதெல்லாம் தில்லைப் பெருமானின் சிலம்பொலி கேட்கும்.
ஆனால் தில்லைக் கூத்தன் சேந்தனார் வீட்டிற்கு உணவு உண்ணச் சென்ற போது அவ்வொலி கேட்காது போகவே வருத்தமுற்ற மன்னன் அந்த வருத்தத்துடனே துயில் கொண்டான்.
மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் மன்னனே வருந்தற்க,!
சேந்தனாரின் வீட்டிற்கு இரவு உண்ணச் சென்றமையால்
உன் வழிபாட்டிற்கு வர காலம் தாமதமாயிற்று என்றார், அதனைக் கேள்வியுற்ற மன்னன் அதிகாலை எழுந்து தில்லைப் பெருமானைக் காணச் சென்றான்.
அம்பலத்தில் களி சிந்தியிருப்பதனைக் கண்டு இறைவனுக்கே உணவளிக்கும் பேறு பெற்ற சேந்தனாரைக் காண விரும்பினான்.
மேலும் இத்தகைய செய்தியினைத் தில்லைவாழ் அந்தணர்களுக்கும் தெரிவித்தான்.
இத்தகைய நிகழ்வுகள் நடந்த மார்கழி மாதப் பொழுதில் தில்லைப் பெருமானின் திருத்தேர் உலா நடைபெற்றது.
திருவாதிரைத் திருவிழாக் காலத்தில் நன்கு மழை பொழிய திருத்தேர் சேற்றில் சிக்கி ஓடாது நின்றது.
மன்னன் உட்பட மக்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அந்நேரத்தில் சேந்தா, தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக! என்றோர் குரல் வானிலிருந்து அனைவரும் கேட்க எழுந்தது, உடன் சேந்தனார்,
“மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகந்து புவனியெலாம் விளங்க அன்ன நடைமடவாள் உமை கோன் அடி யோமுக்கு அருள் புரிந்து பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே”
எனப் பாடியருளத் தேர் வடம் பிடிக்காமலே நிலை வந்து சேர்ந்தது,
இத்தகைய சிறப்பு வாய்ந்த சேந்தனாரால் பாடப்பெற்றவையாக திருவீழிமிழலை, திருவாவாடுதுறை, திருவிடைக்கழி ஆகிய தலங்களுக்குரியவாக திருவிசைப்பா பதிகங்கள் மூன்றும் திருப்பல்லாண்டுப் பதிகம் ஒன்றும் ஆக நான்கு திருப்பதிகங்கள் உள்ளன.
இவற்றுள் நாற்பத்தியேழு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
திருப்பல்லாண்டின் இறுதிப் பாடலில் சேந்தனார் தன்னை சிவனின் திருவடிகளை வணங்கும் நாய் போன்ற இழிந்தவன் என்று கூறிக் கொள்வதுடன் அத்தகைய இழிந்தவனாகிய தனக்கு இறைவன் சுற்றமாய் நின்றான் எனத் தொழுது நிற்கின்றார்.
சேந்தனார் திருமடம் ஒன்றினை அமைத்துக் கொண்டு தங்கிய பகுதி சேந்தன் மங்கலம் என்று அழைக்கப்பட்டது,
இங்கிருந்த திருக்கோயில் தற்காலத்து இல்லை.
அங்கு கிடைத்த சிவலிங்கத் திருமேனியை அவ் ஊருக்கு அருகில் உள்ள விசலூரில் வைத்து வழிபட்டு வருகின்றனர்,
இத்தகைய சிறப்புடைய சேந்தனாரின் குருபூஜை இன்று வருகிறது,
முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!
தைப்பூச விரத முறையும் பலன்களும்...!!
தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி 05.02.2023 அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.
பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது எப்படி? என்று பார்ப்போம்...!!