குறுகிய காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக மாறுகிறார் ஒருவர். வணிகங்களைப் பெருக்க ஏகப்பட்ட கடன் வாங்குகிறார். ஏதோ தவறாக இருக்கிறது என்று தோன்றினாலும் யாரும் வாய் திறக்கவில்லை. அமெரிக்க நிறுவனமொன்று அறிக்கை வெளியிடுகிறது.
1/4
எல்லாவிதமான திருட்டுத்தனங்களும் நடந்திருப்பதாகச் சொல்கிறது. பங்கு விலை சரிகிறது. அந்தப் பணக்கார முதலாளி எல்லாவற்றையும் மறுக்கிறார். ஒழுங்காக வட்டி செலுத்துகிறோம் என்கிறார். நிற்க.
2/4
இது Bad boy billionaires எனும் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்தில் வரும் விஜய் மல்லையாவின் கதை. ஆனால் அந்நேரத்தில் யாரும் தேயப்பற்றைக் கொண்டு ஊற்றவில்லை. இந்தியனைக் கேள்வி கேட்க நீயார் அயலான் என்கவில்லை. நம் வணிகரைக் காக்க உங்கள் இன்னுயிரை ஈனுங்கள் என்று சொல்லவில்லை.
3/4
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு சிறுவயதில் இருந்தே அடிக்கடி செல்வது வழக்கம். கடந்த 2009ஆம் ஆண்டு செல்போன்கள் எல்லாம் தமிழ்நாட்டினுள் வேகமாக நுழைந்த சமயம். அப்போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறேன். (1/12)
வகுப்பில் கிரிக்கெட், சினிமா, கில்மா கதைகளை நண்பர்களுடன் கதைப்பது வழக்கம். கிசுகிசுனா ஆண்கள் பள்ளியில் கூட்டம் கூடுவது குறித்து சொல்லவா வேணும். அந்த நேரத்தில் தான் பூதாகரமாக கிளம்பியது காஞ்சிபுரம் தேவநாதன் வழக்கு. (2/12)
கருவறையிலேயே ருத்ரதாண்டவம் ஆடிய விசயம் பள்ளி/கல்லூரிகளில் தான் தீயாக பரவியிருக்கும் என கருதுகிறேன்.
அதிலும் நடுவில் பக்தர் ஒருவர் அர்ச்சனைக்கு வருவார். தனது 'சீர்மையான' பணியை பாதியிலேயே விட்டுட்டு போய் அதே கருவறையில் மந்திரம் சொல்லி தீபாராதனை வேற காட்டுவார் தேவநாதன். (3/12)