மயில் வாகனத்தைப் பற்றிய ஒரு அபூர்வ விஷயத்தினை பார்ப்போம்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நட்சத்திரம் ஒன்று உண்டு.
திருவாதிரை சிவபெருமானுக்கும்,
திருவோணம் மகாவிஷ்ணுவிற்கும் உரியவை.
முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரம் விசாகம்.
முருக அஷ்டோத்திரத்தில், "ஓம் விசாகாய நமஹ' என்று அவரது நட்சத்திரம் குறித்து வருகிறது.
ஆதிரையான் என்று சிவபெருமானையும்,
ஓணத்தான் என்று மகாவிஷ்ணுவையும் குறிப்பிடுவதைப் போல,
மயிலேறும் விசாகன் என்று முருகனை நட்சத்திரத்தின்
பெயரால் குறிப்பிடுகிறார்கள்.
"விசாகன்' என்ற திருநாமத்திற்கு, "பறவை மீது சஞ்சரிப்பவன்' என்று பொருள்.
"மயிலேறிய வடிவேலன்' என்கிறார் அருணகிரிநாதர்.
அருணகிரி வாக்குப்படி, முருகப்பெருமான் மயில் மீது ஏறி சஞ்சரிப்பவர் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
ஆனால், மயில் வாகனத்திலேயே, பல மயில் வகை உண்டு.
அதில் மிகவும் அதி சக்தி வாய்ந்தது மந்த்ர மயில் என்பதாகும்.
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டு ஆடு மயில் என்பதறியேனே என்கிறார் அருணகிரியார் தம் திருப்புகழில்.
மயில் வாகனங்களில் ஒன்று வைகாசி விசாகத்தோடு தொடர்புடையது.
முருகப்பெருமான் திருஅவதாரம் செய்தவுடன், அனைவரும் குழந்தையைத் தரிசிக்க வந்தார்கள்.
அப்போது சூரியபகவானும், அக்னியும் தங்கள் திருமேனியில் இருந்து
மயிலையும், கோழிக்கொடியையும் உருவாக்கி முருகப்பெருமானுக்கு அளித்தார்கள்.
அன்று முதல் முருகனுக்கு மயில் வாகனம் உருவானது என்கிற கந்த புராணம்.
இதையடுத்து வேதமும் மயிலானது..
இதே கருத்தை மயூராதிரூடம் என்ற சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரரும் துதிக்கிறார்.
இது இரண்டாவது மயில்.
அடுத்தது முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிடும் போது, தேவேந்திரன் மயிலாக இருக்க, அதன் மீது ஆரோகணித்து சூரபத்மனுடன் போரிட்டார்.
இது மூன்றாவது மயில்.
சூரசம்ஹாரம் முடிந்த பின், சூரன் மயிலாகவும் கோழிக்கொடியாகவும் ஆனான்.
இது நான்காவது மயில்.
கோயில்களில் நாம் தரிசிக்கும் மயில் முருகப் பெருமானுக்கு இடது கைப்புறமாக மயிலின் முகம் இருந்தால் அது இந்திர மயில்.
முருகனுக்கு வலதுகைப் புறமாக மயிலின் முகம் இருந்தால் அது சூரபத்ம மயில்.
மயிலின் முகம் நேருக்கு நேராக நம்மைப் பார்ப்பது போலிருந்தால் அது மந்த்ர மயில்.
முருகனை விட சக்தி இந்த மந்த்ர மயிலுக்கு உண்டு.
அதனால் நாம் உள்ளம் உருகி இந்த மந்த்ர மயில் வேலன் முருகப்பெருமானிடம் வேண்டினால் அது உடனே பலிக்கும்.
இது சத்திய வாக்கு.
அந்த மயிலேறிய மந்த்ர சக்திவேலன் தங்களுக்கு அருள் புரிவதுடன் நம் அனைவரின் உள்ளங்களிலும் வீற்றிருந்து அருள் புரிய மயிலேறிய முருகப்பெருமான் திருவடி பற்றி இறைஞ்சுகிறேன்.
ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு, திருவிசைப்பா போன்றவற்றைப் பாடியருளிய அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேந்தனார்.
இவர் பட்டினத்தடிகளிடம் கணக்குப் பிள்ளையாய் பணிபுரிந்தவர் என்றும் ஞானம் பெற்ற பட்டினத்தடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்தம் வீட்டுக் கருவூலத்தை மக்களுக்காகத் திறந்து விட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவரின் செயலினைக் கண்ட சோழ மன்னன் கணக்குக் காட்ட வேண்டிச் சிறையில் அடைத்தான்.
அதனைக் கண்ட சேந்தனாரின் மனைவி உள்ளிட்ட சுற்றத்தார் பட்டினத்தடிகளிடம் முறையிட்டனர்.
உடன் பட்டினத்தடிகள் “மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி செய்த்தனைக் கயல்பாய் நங்கூர் செந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி
முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!
தைப்பூச விரத முறையும் பலன்களும்...!!
தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி 05.02.2023 அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.
பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது எப்படி? என்று பார்ப்போம்...!!