தைப்பூசம் தினத்தன்று முருகன் தலங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் காவடிகளாக இருக்கும்.
அதற்கு காரணம், தமிழ்க் கடவுளான முருகனுக்குச் செய்யப்படும் வேண்டுதல் பிரார்த்தனைகளில் முக்கியமானது காவடி எடுப்பது தான்.
இந்தக் காவடி எடுப்பதன் காரணம் தெரியுமா?
அகத்திய முனிவர் ஒரு தடவை தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து,
தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களையும் கொண்டு வரும் படி கூறினார்.
அகத்திரியின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியா கக்கட்டி எடுத்துக் கொண்டு வந்தான்.
பழனி தலம் வந்த போது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான்.
பிறகு புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான்.
ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணான்டி யாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான்.
இடும்பன் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.
ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாடினான்.
கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான்.
அப்போது இடும்பன் வேரற்ற மரம்போல் கீழே சரிந்து விழுந்தான்.
இதைக்கண்ட அகத்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட,
முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார்.
அப்போது முருகன், இடும்பன்போல் காவடியேந்தி, சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.
அப்போது முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.
ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு, திருவிசைப்பா போன்றவற்றைப் பாடியருளிய அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேந்தனார்.
இவர் பட்டினத்தடிகளிடம் கணக்குப் பிள்ளையாய் பணிபுரிந்தவர் என்றும் ஞானம் பெற்ற பட்டினத்தடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்தம் வீட்டுக் கருவூலத்தை மக்களுக்காகத் திறந்து விட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவரின் செயலினைக் கண்ட சோழ மன்னன் கணக்குக் காட்ட வேண்டிச் சிறையில் அடைத்தான்.
அதனைக் கண்ட சேந்தனாரின் மனைவி உள்ளிட்ட சுற்றத்தார் பட்டினத்தடிகளிடம் முறையிட்டனர்.
உடன் பட்டினத்தடிகள் “மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி செய்த்தனைக் கயல்பாய் நங்கூர் செந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி
முருகனுக்கு விரதம் இருக்கும் பக்தர்களின் கவனத்திற்கு..!!
தைப்பூச விரத முறையும் பலன்களும்...!!
தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி 05.02.2023 அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.
அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.
பல சிறப்புகள் மிக்க தைப்பூச திருநாள் அன்று விரதம் இருப்பது எப்படி? என்று பார்ப்போம்...!!