#ஶ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம் #அதன்பெருமை
‘சஹஸ்ரநாமம்' என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும் என்னும் அளவிற்கு அது பெருமை உடையது. #ஆதிசங்கர_பகவத்பாதாள் காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டு இருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை
எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம். அங்கே இருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
“நான் இதைக் கேட்கலையே, நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா. நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு
வந்திருக்கியே” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது! அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன?”
“சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு
கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு. இதை எடுத்துண்டு போன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்?” என்றார் சிஷ்யர்.
அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்தில், அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படி
நம்மை நியமிக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டார். அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர். இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது. எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான். ஆகையால் சஹஸ்ரநாமம் என்று
சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.
அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே? ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்?
ஞானியருள் அக்ரகண்யரான பீஷ்மரால்! "பீஷ்மர்" என்றாலே "பயப்படத் தக்கவர்" என்று பொருள். அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து,
தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.
“அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்? போ! அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.
ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே, தர்மத்தைச் சொல்ல
என்று நமக்குக் கேட்கத் தோன்றும். பகவான் இருந்து பிரயோஜனமில்லை. அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்! இந்த உண்மைக்கு சாட்சியாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே
கேட்டான். அவன் சொன்னது கீதை. கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு. #பராசரபட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார்.
#பகவத்குணதர்ப்பணம் என்று அதற்குப் பெயர்.
'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று பொருள்.
"விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்னும்
போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா, அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம். அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்! சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா? அதைப் போலே
சர்வ வியாபகனானவனை, அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார். தினம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணுகிற வழக்கம் வைத்துக்
கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது. நம் சித்தத்திலும் நுழையாது.
"கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால், அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். இன்னும் கேட்டால், கீதையைவிட
உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம். பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம். வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே
போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!!

நாராயண! நாராயண!
#கிருஷ்ணனின்_சேவகன்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
This is from part 1 of Kurai ondrum illai by Sri U. Ve Mukkur Lakshmi Narasimhachariyar

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 10
#கண்ணா #கிருஷ்ணா #முகுந்தா #கோவிந்தா
துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரமம். மிதமிஞ்சி ஆடிய கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். சொந்த மருமகனை கொல்ல துணிந்த ImageImageImageImage
கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், பெரும் அதர்மவாதிகள் சிசுபாலன், ஜராசந்தன் என கணக்கில் அடங்கா கெட்டவர்கள் மண்டி கிடந்தனர். இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது.
யாருக்கும்
தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கியது. அவன் வாழ்வினை படித்தால், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன்
Read 20 tweets
Feb 10
#MahaPeriyava
Narrated by Balaji
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

During the period when Kanchi Mahan Paramacharya was on his tour of Maharashtra, a Jamindar (a rich landlord) was providing all the necessities and was looking after the Image
conveniences of Paramacharya’s stay there. The landlord had appointed a servant of his to be near the Paramacharya always to attend to His needs so that there were no problems with any of the arrangements. The young lad’s name was Pawar. The boy provided flawless service and
Periyava was very pleased with him. When the camp was nearing its end and Periyava was about to leave the place, He asked the landlord, “Can I take this boy with me?” The landlord was overjoyed! What a big honour it was that a servant of his was going to serve the Mahan! He
Read 26 tweets
Feb 9
#வேதம்_விட்ட_கண்ணீர்
#ஶ்ரீ_ஞானானந்த_கிரி_மஹாஸ்வாமிகள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அவதரித்து 20ஆம் நூற்றாண்டின் எழுபதுகள் வரை(சுமார் 120+ஆண்டுகள்) ஸ்தூலமாயும் தற்போது சூட்ஷுமமாயும் அருள்பாலிக்கும் மஹாபுருஷர். #நாமசங்கீர்த்தன ஸம்ப்ரதாயத்தை அனுஸரித்து. தம்மை பற்றி ஒருமுறை Image
குறிப்பிடுகையில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி #ஸ்ரீ_பகவந்_நாம_போதேந்ர_ஸரஸ்வதி ஸ்வாமிகளை மூல குருவாகக் கொண்ட என்று அருளியவர். திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் #ஊஞ்சலூர் என்னும் க்ஷேத்திரத்தில் வசித்து, தற்போது பிருந்தாவனராய் அருளுபவர.
இந்த கட்டுரை ஸ்ரீ ரமணி Image
அண்ணாவால், அவரது சொந்த அனுபவமாக எழுதப்பட்டு, சக்தி விகடனில் வெளி வந்தது. எழுத்தும் அவருடையதே.

பல வருடங்களுக்கு முனபு ஒரு ஞாயிற்றுக்கிழமை, திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரைத் தரிசித்து விட்டு, திருக்கோயிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோவனத்திற்குச் சென்றேன். தபோவனத்தை அடைந்தபோது, காலை Image
Read 38 tweets
Feb 9
#ஸ்ரீமத்ராமாயணம் இந்துமத இதிகாசங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ சில முக்கியமானவர்களை (வால்மீகி, கம்பன் உட்பட) 69 பேரை பற்றிய சிறு விளக்கம்.
1. #அகல்யை
இராமாயண காலத்துக்கு முன் கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை Image
இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்ட பின்னர், மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் பாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப் பெற்றவர். இதிகாசம் கூறும் பஞ்ச பதிவிரதைகளில் முதன்மையானவர்.
2. #அகத்தியர்
குள்ளமான முனிவர் சகல வேத அஸ்திர சாஸ்திரங்கள் அறிந்தவர்.
இவர் ஸ்ரீராமனுக்கு இராம இராவண யுத்த போர்க்களத்தில் #ஆதித்யஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்
3. #அகம்பனன்
இராவணனிடம் இராமனைப் பற்றி தவறாக கோள் சொன்னவன். அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு ஒருமுறை
Read 74 tweets
Feb 9
#மகாபெரியவா
கட்டுரையாளர்-வெ,ஸ்ரீராம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்

விசேஷ நாள் ஒன்றில் ஸ்ரீமடத்திற்கு மகானை தரிசிக்க பெரும் கூட்டம் வந்திருந்தது. அப்போது அவர் சந்திரமௌலீஸ்வர பூஜை செய்து கொண்டிருந்ததால், வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அமைதியாக நின்றும் Image
அமர்ந்தும் ஜயஜய சங்கர கோஷத்தை மென்மையாக சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அப்போது, வந்திருந்த பக்தர் ஒருவர் பக்தர் கூட்டத்துக்கு இடையே புகுந்து, முன்னேறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தார். வழி விட மறுத்தவர்களுக்கும் அவருக்கும் இடையேலான பேச்சுதான் ரகளையாகிக் கொண்டிருந்தது.
மடத்துத் தொண்டர்கள் அவசரமாகச் சென்று அந்த நபரைத் தடுத்து, மகான் பூஜை செய்வதையும், அதன் பிறகு அவர் தரிசனம் தர அமரும்போது, வரிசையில்தான் செல்ல வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் முணுமுணுத்த படியே நின்று கொண்டிருந்தார், அந்த நபர். நேரம் நகர்ந்தது. பூஜையை
Read 13 tweets
Feb 9
#MahaPeriyava

Author: A Kanchi SriMatham attendant
Source: Maha Periyaval - Darisana Anubhavangal - Vol 3

That was the day of the transit of the planet Guru. A devotee came to Sri Maha Periyava. "According to my horoscope, Guru has arrived at the house of astronomical nativity Image
It seems that Shri Rama went to the forest because Guru came to his house of nativity in his horoscope at that time. So it is said that I will undergo heavy hardship. The astrologer says that I should do some shanti-pariharam (appeasement to get relief from planetary afflictions)
said the devotee.
Periyava replied, "There is indeed a view that Shri Rama was exiled to the forest when Guru reached his house of nativity. However, that is not right. Shri Rama was comfortable in the forest, doing tapas (penance), doing sambhashanam (conversing) with the
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(