ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு, திருவிசைப்பா போன்றவற்றைப் பாடியருளிய அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சேந்தனார்.
இவர் பட்டினத்தடிகளிடம் கணக்குப் பிள்ளையாய் பணிபுரிந்தவர் என்றும் ஞானம் பெற்ற பட்டினத்தடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்தம் வீட்டுக் கருவூலத்தை மக்களுக்காகத் திறந்து விட்டவர் என்றும் கூறப்படுகிறது.
அவரின் செயலினைக் கண்ட சோழ மன்னன் கணக்குக் காட்ட வேண்டிச் சிறையில் அடைத்தான்.
அதனைக் கண்ட சேந்தனாரின் மனைவி உள்ளிட்ட சுற்றத்தார் பட்டினத்தடிகளிடம் முறையிட்டனர்.
உடன் பட்டினத்தடிகள் “மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி செய்த்தனைக் கயல்பாய் நங்கூர் செந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி