#நவநீதகிருஷ்ணன்_கோவில் திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் இறைவனை ‘தமிழகத்தின் குருவாயூரப்பன்’ என்று போற்றுகிறார்கள்.
மூலவர்: நவநீதகிருஷ்ணன்
உற்சவர்: ஸ்ரீதேவி,
பூதேவி சமேத நவநீதகிருஷ்ணன்
இக்கோவிலுக்கும் கருடாழ்வாருக்கும் நிறையதொடர்பு உண்டு. “பறவைகளுள் நான் கருடன்” என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறியுள்ளார். கண்ணன் துவாரகைக்கு வெளியே இருந்த போதெல்லாம், துவாரகையை காத்தவர் கருடன். “வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியில் விளங்குவாய்” என்று
கருடனுக்கு திருமால் வரம் அளித்துள்ளார். கருட தரிசனம் உள்ளத்தில் ஊக்கத்தை உண்டாக்கும். ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். எதிரிகளை முறியடிக்கும் அதிர்வலைகளை கருட தரிசனம் அருளும். கருடனைக் கண்டாலே காரிய வெற்றி கிடைக்கும். பாண்டியமன்னர்கள் ஆளுகைக்கு
உட்பட்டதாக இருந்த வீரகேரளம்புதூரை, வைணவத்தை தழுவிய மன்னன் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவர் கருடனின் பெருமைகளை அறிந்து அனுதினமும் அவரை வணங்கிய பிறகே தன் பணிகளைத் தொடங்குவார். திருமாலின் வாகனமும், நித்ய சூரியுமான கருடனை, காலை உணவுக்கு முன் தரிசிப்பதை அந்த மன்னன் வழக்கமாக வைத்து
இருந்தார். வீரவைணவர்கள் கருட தரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டார்கள். கருடனைக் கண்டதும் ‘மங்களானி பவந்து’ என்று மனதுக்குள் சொல்லி தரிசனம் செய்த பிறகே உணவருந்துவார்கள். மன்னனும் அதே போல செய்து வந்தார். இதனால் அவர் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமைந்தன. ஒரு நாள்
வழக்கம் போல கருட தரிசனத்துக்காகக் காத்திருந்தார் மன்னன். அவருடன் பணியாளர்களும் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் வானில் கருடன் தென்படவில்லை. அரசரும் ‘கருட தரிசனம் இன்றி, இந்த நாள் கடந்து விடுமோ’ என்று தவித்தார். நேரம் கடந்து கொண்டிருந்தது. பசி மயக்கத்தில் சோர்ந்து போயினர்
பணியாளர்கள். பசியைப் பொறுக்க இயலாத அவர்கள், ஒரு தந்திரம் செய்தனர். உடனே செயற்கையாகக் கருடன் போன்ற ஒரு பொம்மைப் பறவையைத் தத்ரூபமாகத் தயார் செய்தனர். அதனை ஒரு மரத்தின் உச்சியில் கட்டிவைத்தனர். பின்னர் அரசரிடம் வந்து, “அரசே! அதோ பாருங்கள், மரத்தின் உச்சியில் கருடன் ஒன்று இருக்கிறது"
என்று தாங்கள் செய்த கருடப் பறவையைக் காட்டினர். அரசன் மகிழ்ச்சி பொங்க, பக்தி பரவசத்துடன் “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்று மனதில் கூறிக் கொண்டே பேரானந்தம் கொண்டார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, மரத்தில் கட்டி வைத்திருந்த பொம்மைக் கருடன் உயிர் பெற்று விண்ணில் பறந்து சென்று மறைந்தது.
அரசரோ கருட தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தார். பணியாளர்களோ, அதிர்ச்சியில் பயத்திலும், வியப்பிலும் உறைந்து அரசரிடம் சென்று உண்மையைக் கூறி விட்டனர். அரண்மனைப் பணியாளர்களின் செயலுக்காக மன்னன் கோபப்படவில்லை. தன் பக்திக்காக கருட பொம்மைக்கு உயிரூட்டிய திருமாலின் கருணையை நினைத்து
உள்ளம் உருகினார். ஒரு சில நாளில் மன்னனுக்கு திடீரென்று உடல்நலம் குன்றியது. அவர் படுத்தப் படுக்கையானார். மூன்றாம் நாள் திருநாடு (வைகுண்டம்) அடைந்தார். இதையறிந்த இவ்வூர் மக்கள், “தன் பக்தனான அரசரை, திருமால் வைகுண்டம் அழைத்துச் சென்றுவிட்டார்” என்று கூறி சிலிர்த்தனர். இந்த
சம்பவத்தின் அடிப்படையில் உருவானதுதான் வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணன் கோவில். பாண்டிய மன்னர்களால் மதுரைக்குத் தெற்கே எழுப்பப்பட்ட ஒரே வைணவக் கோவில் இது என்று கூறப்படுகிறது. மன்னர்களின் ஆட்சி காலத்தில் தென்காசிக்கு அடுத்து, பெரிய ஊராக வீரகேரளம்புதூர் விளங்கியுள்ளது. இவ்வூரில்
தாமிரபரணியின் ஊட்டாறுகளான ‘சித்ரா நதி’யும் (சிற்றாறு), ‘அனுமன் நதி’யும் ஒன்று சேருமிடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இங்குள்ள சித்ரா நதிக்கரையில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருந்ததாகவும், நவநீத கிருஷ்ணன் கோவில் கட்டுவதற்காக, சித்ரா நதி தெற்கு நோக்கித
திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விநாயகர் சிலை தற்போது கிருஷ்ணன் கோவிலுக்குள் இருக்கிறது. திருமாலின் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வையால், இவ்வூரே செழிப்பாக உள்ளது. கருடனின் நிழல்பட்ட நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும். வேத ஒலிகளுக்கு தாவரங்களை
நன்கு வளரவைக்கும் சக்தியுண்டு. நல்ல தெய்வீக சக்திகள் நிறைந்த சூழ்நிலையில் நிச்சயமாக கருடன் வாசம் செய்வார். கும்பாபிஷேகம் நடைபெறும் போது வானில் கருடன் பறப்பது இன்றும் நடக்கும் புனித மற்றும் ஆச்சரிய நிகழ்வு. இத்தகைய தெய்வீக அதிர்வலைகள் நிரம்பிய வீரகேரளம்புதூரில், எழில்மிகுந்த
சித்ரா நதிக்கரையில் நவநீதகிருஷ்ண சுவாமி ஆலயம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவநீத கிருஷ்ணன் சிலை, இந்த ஊருக்கு அருகே உள்ள கீழப்பாவூரில் செதுக்கப் பட்டதாகவும், மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தில் வடிக்கப்பட்டதாகவும் இருவேறு கருத்துகள் கூறப்
படுகின்றன. குருவாயூரில் உள்ளது போன்றே, இந்த ஆலய நவநீத கிருஷ்ணனின் தோற்றம் இருக்கிறது. கையில் வெண்ணெயுடன் அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் உட்பிராகாரத்தில் தசாவதார மூர்த்திகள் விக்கிரங்களாக நின்ற நிலையில் ஒரே இடத்தில் எழுந்தருளி உள்ளனர். பன்னிரு ஆழ்வார்களும் இங்குள்ளனர். மூலக்கருடன்
பொருத்துக்கல், தங்கக் கொடி மரம், நவக்கிரகங்களும் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கியுள்ள இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் சிறப்புகளைக் கொண்டது. திருமணம் தடை அகல, புத்திர பாக்கியம் கிடைக்க, மாங்கல்ய தோஷம் நீங்க, நெஞ்சக நோய் தீர, எதிரிகளை வெற்றிபெற, அதிகாரப் பதவி
கிடைக்க, இங்கு வந்து நவநீத கிருஷ்ணனை வழிபட்டுச் சென்றால் விரைவில் பலன் கிடைக்கும் என்கிறார்கள். 41 நாள் விரதம் இருந்து இத்தல இறைவனை வழிபட வேண்டும் என்பதும், தமிழ் மாதக் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசித்தால் குழந்தை வரம்
கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆலயத்தில் முன்பு 11 நாள் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு பங்குனி உத்திரம் உற்சவம் சிறப்பாக நடக்கிறது. பங்குனி மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று கொடியேற்றி 10 நாள் திருவிழா வெகு உற்சாகமாக நடைபெறும். ஆடி சுவாதி, வளர்பிறை
பஞ்சமி, கோகுலாஷ்டமி, விஜயதசமி பரிவேட்டை, ரோகிணி நட்சத்திரம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் ஆறுகால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு
8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப் பட்டிருக்கும்.
அமைவிடம் : திருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ள ஆலங்குளத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசி - பாவூர்சத்திரம் - சுரண்டை வழியாக 21 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசி - ஆய்க்குடி - சாம்பவர்வடகர
- சுரண்டை வழியாக 18 கிலோமீட்டர் தூரத்திலும், சங்கரன்கோவில் - வீரசிகாமணி - சுரண்டை வழியாக 30 கிலோமீட்டர் தொலைவிலும், சுரண்டையில் இருந்து 5 கிலோமீட்டரிலும் வீரகேரளம்புதூர் என்னும் வீ.கே.புதூர் இருக்கிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 13
#வல்லக்கோட்டைஅருள்மிகுசுப்பிரமணியசுவாமி_திருக்கோயில்

மூலவர் : சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்)
தல விருட்சம் : பட்டரி மரம்
தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம்
பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண Image
ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பி வைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார Image
அவன் பல தேசங்களுக்கு திக்விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் “பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால் தான், உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்” என்றார், நாரதர். இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் Image
Read 20 tweets
Feb 13
#மகாபெரியவா ஒரு சமயம் மகா பெரியவா தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் அவரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார். Image
தருமபுரம் மடம் வழியாக அவரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதை யுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெளரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம். நாதசுவரம்
சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் அகில உலக நாதசுவரம் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் என்றுதான் அச்சிடப் பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில் தான் பயணிப்பார். இந்த
Read 8 tweets
Feb 13
#கனகதாரா_ஸ்தோத்திரம் #சொர்ணத்து_மனை
#ஆதிசங்கரர் சிறுவயதில் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார். ஒரு நாள் அவர் யாசித்த வீடு மிகவும் ஏழ்மையான வீடு. பவதி பிட்சாந்தேஹி என குரல் கொடுத்த ஆதிசங்கரருக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண் தன்னிடமிருந்த Image
காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். ஒரு ஏழைப் பெண் அளித்த பிட்சையை ஏற்றுக் கொண்ட ஆதிசங்கரர் இந்த வீட்டில் ஒரு சன்யாசிக்கு கொடுப்பதற்கு கூட ஒரு நெல் மணி இல்லாத அளவுக்கு ஏழ்மையில் இருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டார். உடனே அவரது காதில் உதவி செய்வதாக இருந்தால் பரிதாபப்பட வேண்டும
உதவி செய்ய இயலாத போது பரிதாபப் படக்கூடாது என்று ஒரு அசிரீரீ கேட்டது. இதனை கேட்ட ஆதிசங்கரர் அவளுக்கு உதவ விரும்பினார். மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். ஆதிசங்கரர் தனது பாடலில் சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய
Read 10 tweets
Feb 12
#மகத்துவம்_நிறைந்த_மாசிமாதம்
மாசி மாதத்தினை #கும்ப_மாதம் என்றும் அழைப்பார்கள். மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான #வராக_அவதாரம் எடுத்து உலகை
காப்பாற்றியது இந்த மாசி மாத்தில்தான் என்பது மாசி மாதத்திற்கேயுரிய கூடுதல் சிறப்பாகும்
#மாசி_பௌர்ணமி
இந்த ஆண்டு மாசி 23ஆம் தேதி அதாவது செவ்வாய் கிழமை (07.03.2023) மாசிபௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு
திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது,
#மாசி_மகம்
மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில்
Read 12 tweets
Feb 12
#MahaPeriyava
Source: Maha Periyavar by S. Ramani Anna
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This incident happened several years ago. A Vedic Pundit, Ramanatha Ganapadigal who hailed from Karur was living in Srirangam. His wife’s name was Dharmambal.
Their only daughter was Kamakshi. Though the Pundit was a master in Vedas, he did not pursue Vaideegam (performing Vedic rituals) for his livelihood but used to do Upanyasam (spiritual discourses) for a living with whatever remuneration he received for his discourses. The family
members were staunch devotees of Sri Maha Periyava. Their daughter’s marriage was fixed suddenly and the groom was a teacher in a nearby village. His wife Dharmambal asked her husband, “Our daughter’s marriage has been fixed. How much savings have we got?” Ganapadigal replied,
Read 34 tweets
Feb 11
#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
Read 38 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(