#நெஞ்சுக்குநீதி_பாகம்1 8. சுதந்திர போராட்டம்
1939ல் விடுதலை கனல் தகித்து கொண்டு இருந்தது.
காந்தி இர்வின், ஒப்பந்தம், நேதாஜியின் ஆசாத் ஹிந்து ஃபவுஸ், ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் தென் மூலையில் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்த 15 வயது பையன் கருணாநிதியையும் பாதித்தது
இனி கலைஞர் வார்த்தைகளில்:
அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.
அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன்.
அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார்.
'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப் போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்து கிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து
விட்டு, கைராட்டையால் நாடு முன்னேறும் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு இந்தக் கையெழுத்துப் பத்திரிகையும்" என்று மதிப்புரை எழுதிக் கொடுத்தார்.
மாணவர்கள் நடத்தும் கையெழுத்து ஏட்டால் நாடு ஒரேயடியாக முன்னேறி விடும் என்று யாரும் கூறவில்லை. சிறுதுளி பெருவெள்ளம்.
பலர் சேர்ந்ததே நாடு. அந்த நாட்டின் எதிர்காலத்திற்குரியவர்கள் மாணவர்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ள மெருகேற்றிக்கொள்ளக் கையெழுத்துப் பிரதிகள் நல்ல வாய்ப்பு அளிக்கின்றன என்பதே என் நம்பிக்கை. இளமைப் பருவத்தில் எழுதுகின்றவைகளைப் பெரிய பத்திரிகைகள் எடுத்துக்
கொள்வதில்லை. அந்தப் பத்திரிகைக்கு எழுதுவது போன்ற தகுதியைக் கையெழுத்துப் பிரதி பயிற்சி தருகிறது. நான் பள்ளியில் நடத்திய கையெழுத்து ஏடுகளை ஒரு சமயம் ஒருவர்தான் படிக்க முடியும். நான் நடத்திய ஏடு மாதத்திற்கு இரண்டு வெளியீடு, ஒவ்வொரு வெளியீட்டிலும் எட்டு பக்கங்கள். பிரதிகளோ ஐம்பது
ஐம்பது பிரதிகளையும் நானும் சில நண்பர்களும் மட்டுமே உட் கார்ந்து காப்பி எடுப்போம். டெம்மி பேப்பர் செலவை மட்டும் வசூல் செய்து கொள்வோம். உழைப்பும் கட்டுரைகளும் இனாம்!
'மாணவ நேசன்' ஏழெட்டு மாதங்கள் நடை பெற்றது. இப்படி ஐம்பது பிரதிகள் கையாலேயே எழுதி வழங்குவது சிரமமாயிருக்கிறதே வேறு
வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது தான் 'முரசொலி' தோன்றியது. வாரப் பத்திரிகை. மாதப் பத்திரிகை என்ற அளவிலே அல்ல. துண்டு வெளியீடுகளாக!
'முரசொலி' துவங்குவதற்கு முன்னால் நாளகு மாதங்களுக்கு முன்புதான் கதர்ச் சட்டைக் கண்ணாடிக்காரர் என்னைச் சந்தித்ததாகும்! ''மாணவர்களையெல்லாம்
ஒன்றுபடுத்திச் சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்துக் குரல் எழுப்ப வேண்டும். அதற்குப் பாசறையாக மாணவர் சம்மேளனம் என ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருந்தது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர்ப் பள்ளியில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்." என கேட்டுக் கொண்டார்.
அணிந்திருந்தது கதர்ச்சட்டையாயினும், நாட்டுத் தலைவர்களைப் பெருமையோடு பேசினாராயினும் அவர் காங்கிரஸ்காரரல்ல என்று தெளிவாகியது. வந்தவர் கம்யூனிஸ்ட் என்பது அப்போது தெரியாது.
சுதந்திரம் - சமாதானம் - சமத்துவம் என்ற வார்த்தைகள் 15 வயது இளைஞனின் உள்ளத்தில் எவ்வளவு உணர்ச்சிகளை ஏற்றவல்லவை.!
அதனால் மாணவர்கள் சம்மேளனத்தின் அமைப் பாளன் ஆனேன். 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். காங்கிரஸ் சார்புடையது எனக்கருதி, காங்கிரஸ் மாணவர் களும் சேர்ந்தனர், நூறு பேர் எக்கட்சியிலும் சேராத பொதுமாணவர்கள். சம்மேளனத்தின் போக்கு நம்மையும் சேர்த்து அடித்துச் செல்லும் போலிருந்தது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சின்னங்களின்_வரலாறு #கை
1950 ல அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாகியது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களில் தேர்தலை சந்திக்கத் தொடங்கின.
முதல் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டை காளைச் சின்னத்தில் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 479 இடங்களுக்கு போட்டியிட்டு 364 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 37 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் வென்றன.
1957ல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலில் 371 இடங்களைப்பெற்றது.
361 இடங்களில் வெற்றிபெற்றது. 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி நேரு மறைந்தார். அதைத்தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டது.
இந்திய பாசிச முகமூடிகளை வெளிப்படுத்த இன்று போல் ஒரு கெட்ட நாள் அமையாது.
தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டிருந்தவரை, விதி ஒரு மத வெறி பிடித்த நூலிபானின் குண்டுக்கு பலியாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது
அவர் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி
காந்திக்கு முன்பே காங்கிரஸ் இயக்கம் ஆலன் ஆக்டோவியன் ஹுமால் ஆரம்பிக்கப்பட்டது
தாங்கள் அந்நியரால் ஆளப்படுகிறோம் என்பதை இந்திய மக்கள் உணராதபடி செய்ய தாதாபாய் நௌரோஜி ஃபிரோஜ் சா மேத்தா போன்ற மேல்தட்டு பார்சி தொழிலதிபர்கள் உள்ளே இழுத்துப் போடப்பட்டார்கள்
கூடவே சில நூலிபான்களும்
சென்னை ஹிந்து பத்திரிக்கை குடும்பம் வடக்கே மதன் மோகன் மாளவியா, மகாராஷ்டிராவில் கோபால கிருஷ்ண கோகலே போன்றோர்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நூலிபான்களின் கைக்கு சென்று விட்டது.
தென்னாபிரிக்காவில் அடக்குமுறைக்கு ஆளான காந்தி வழக்கு விஷயமாக இந்தியாவுக்கு வந்திருந்த போது இங்குள்ள நிலைமை
#இந்தியபாசிசத்தின்_எழுச்சி
பாசிசம் என்ற சொல் பொதுவாக அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு குழு அதனை தக்க வைக்க பிற குழுக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தை தன்னிடமே என்றென்றும் வைத்துக்கொள்ள முயல்வதை குறிக்கிறது. இந்தியாவில் நிகழ்வதை குறிக்க வேறு சொல் இல்லாததால் நாமும் பாசிசம் என்றே கூறுவோம்
பாசிசம் என்பது தனி நபர் அல்ல. அது ஒரு அமைப்பு அதன் முகமூடிகள் காலாவதி ஆனவுடன் மாற்றப்படும். சில பல வார்த்தை மாறுதலுக்கு பின் புதிய மொந்தையில் பழைய கள்ளை வழங்கி மாற்றம் நிகழ்ந்து விட்டது இனி எல்லாம் சுகமே என்ற மயக்கத்திலேயே மக்களை நம்பச் செய்து என்றும் அடிமையாக வைத்திருப்பது
சமூக பொருளாதார இன ரீதியாக இச்சொல் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புதிய பெயரில் அவதாரம் எடுக்கிறது. ஜெர்மனியில் நாசிசம் இத்தாலியில் பாசிசம், ஜிங்கோஇசம், ஸ்டாலினிசம், மேற்கு நாடுகளின் கேப்பிட்டலிசம், நேற்று உருவான #தாலிபானிசம்.
இந்தியாவுக்கு என்று ஒரு தனித்த சொல் என்றால் அது #நூலிபானிசம்
ஒவ்வொரு வயதிலும் ஒருவிதமான பிரமிப்பு நமக்கு எழும்.
1947 முதல் 70 ஆண்டு காலம் இந்தியா என்ற கட்டுமானம் சிறிது சிறிதாக நேரு முதல் மன்மோகன் வரை எழுப்பப்பட்டது.
2000 ல் அடிப்படை வரலாற்று அறிவோ,பகுத்தறியும் திறனற்ற சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வை தெரிந்து கொள்ளும் புதிய தலைமுறை உருவானது
முறையாக வரலாற்றை கற்பிக்க தவறிய காங்கிரஸ் அரசு இத்தலைமுறையில் மனப்போக்கை கவனிக்க தவறிவிட்டது.
விளைவு?
மோடி என்ற மூடன் மாபெரும் அவதார புருஷனாக குஜராத் பரிசோதனை சாலையில் கட்டமைக்கப்பட்டது.
அண்ணா ஹசாரே, போபால் என்ற ஓரங்க நாடகம் டெல்லியில் நிகழ்ந்தது.
மன்மோகன் சிங் செய்த
தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப் புற, ஊரக வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்ப புரட்சி உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடம், மாநிலங்களுக்கு இடையான சமூக கூட்டாட்சி எண்ணற்ற சாதனைகளை மறைத்து வினோத்ராய் கண்டுபிடித்த 2ஜி அலைக்கற்ற ஏலம் ஊழல் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது
பி.பி. சி விஷயத்தை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.
பாசிஸ்டுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்க கூடாது
உலகின் மிக முக்கியமான ஊடகம் குசராத் படுகொலையில் மோடிக்கு இருக்கும் #ButcherofGujarat
தொடர்பை அம்பலப்படுத்தி இருக்கிறது, பயந்த பாரதிய ஜனதா இந்தியாவில் அதை தடை செய்திருக்கிறது
இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் எதிர்க்கட்சிகள் இதை கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்த விஷயத்தை பேசுகிறார்கள் அவர்கள் பலம் பெற்று இருக்கக்கூடிய #ButcherofGujarat
கேரளாவில் மட்டுமே இந்த தடைக்கு எதிரான நிகழ்ச்சி நடக்குது
பாசிச எதிர்ப்பில் காங்கிரஸ் தொடங்கி பிற எல்லா மாநில கட்சிகளின் எல்லை என்ன என்பதை இந்த விஷயத்தில் இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், எவ்வளவு முரண்கள் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தவிர்க்க #ButcherofGujarat