#சம்பவம் போனவருடம் நடந்தது.திசையன்விளையில் ஒரு பர்சனல் லோன் வெரிஃபிகேஷன் பணி. லோக்கல் ஏரியா என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அதுவும் வாடிக்கையாளர் வெளிஊரில் இருப்பதால்,அவரின் நிரந்தர முகவரியில் அவருக்கு சொந்தமாக ஏதேனும் இருக்கிறதா என பார்த்து சொல்லவேண்டும். அந்த முகவரியில்
யாரு இருக்கிறார்கள், அவர் குடும்பத்தினரா? இல்லை வேறு யாருமா? எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்க்கு கடன் கிடைக்கும். பணிமுடியும் தருவாயில் இறுதியாக பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவெடுத்து வாடிக்கையாளரை அழைத்து,வங்கியில் இருந்து அட்ரஸ் வெரிஃபிகேஷன்க்காக செல்கிறேன்.வீட்டில்
தெரியப்படுத்திவிடவும் என கூறினேன்.எதிர்முனையில் பேசிய நபர் சார் வீட்டுக்கு போகவேண்டாம் போனா பிரச்சனை ஆய்டும் என சொல்ல ஏன் சார் அது உங்க வீடு தானே,யார்கிட்டயும் வித்துட்டீங்களா?என நான் கேட்க இல்லை சார் என் வீடு தான். ஒசூர்ல ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பெயரை சொல்லி அந்த கம்பெனியில்
வேலை பார்ப்பதாகவும். ஊரில் வேறு சாதியில் உள்ள பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து அழைத்துகொண்டு வந்ததால் வீட்டில் கொலைவெறியில் எல்லாரும் தேடிட்டு இருக்கிறாங்க.இப்போ நீங்க அங்க போனீங்கன்னா பிரச்சனை ஆகிவிடும் சார்.இங்கயே ஒரு இடம் பார்த்து இருக்கேன் சார்.இந்த லோன நம்பித்தான் இருக்கேன்
தயவுசெஞ்சு help பண்ணுங்க என சொல்லிய அவர் குரலில் பதட்டம் அதிகமாகவே தெரிந்தது.சரி சார் கல்யாணம் முடிஞ்சு எவ்ளோ நாள் ஆச்சுன்னு கேட்டேன். ஒரு வருடம் ஆச்சு சார்.ஊருக்கு அதிகமா வரமாட்டேன் lockdown நேரம் என்பதால் ஊருக்கு போயிருந்தேன்.அந்த timeல எல்லாமே நடந்துருச்சு என அவர் சொல்லவும்.
உண்மை காதல் என்றால் உயிரும் கொடுப்போம் என சசிகுமார் எனக்குள் பேசிக்கொண்டு இருந்தார்.சரி சார் கண்டிப்பா உங்களுக்கு உதவி செய்றேன் கண்டிப்பா உங்களுக்கு லோன் கிடைக்கும் கவலைப்படவேண்டாம் என சொல்லி அழைப்பை துண்டித்தேன்.வங்கியினை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட எல்லாமே சரியாக இருந்தால் மட்டுமே
லோன் அடுத்த கட்டத்திற்கு நகரும். எனவே அவர் சென்று அவரின் வீட்டை புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்புகையில் ஒரு வயதான அம்மா கண்ணில் பட்டார். மனதுக்குள் இயக்குனர் விக்ரமன் இப்போது பிரிந்த குடும்பத்தை சேர்ப்பதே சிறப்பாக இருக்கும் என பேசிக்கொண்டு இருந்தார்.எனவே தைரியமாக வீட்டுக்குள்
நுழைந்து அந்த அம்மாவை பார்த்து லோன் கேட்டவரின் பெயர் சொல்லி இது அவர் வீடுதானா என கேட்க அவங்களும் இது அவன் வீடுதான்யா நீங்க யார்னு கேட்க bankல இருந்து வந்துருக்கேன் உங்ககிட்ட உங்க பையன பற்றி பேசணும்ன்னு சொல்ல.தம்பி அவனை பற்றி பேசவேண்டாம்.அவன் என்னைக்கு அந்த சிறுக்கிய இழுத்துட்டு
அப்பவே எல்லாம் முடிஞ்சுடுச்சு என சொல்லி கொண்டு இருக்கையில் வீட்டுக்குள் இருந்து ஒரு இளம்பெண் வந்தார். என்ன சார் என்ன விஷயம் அவர ஏன் கேட்கிறீங்க என கேட்க. லோன் கேட்டு இருந்தார். அப்டியே அவர் ஜ வீட்டில் பிரச்சனை ன்னும் சொல்லி இருந்தார். அதான் விசாரிக்க
வந்தேன் என சொல்லி நீங்க யாருன்னு கேட்க அவனோட பொண்டாட்டி என சொல்ல எனக்கு தூக்குவாரிப்போட்டது.ஆத்தி என்னக்கா சொல்றிங்க என கேட்க ஆமாங்க. Lockdown time ல ஊருக்கு வந்த நாய் வேற ஒருத்தன் பொண்டாட்டிய இழுத்துட்டு போய்டுச்சு எங்க இருக்கான்னும் தெரியல.பழைய கம்பெனி ல விசாரிச்சோம். அங்க வேலை
விட்டு போய்ட்டதா சொன்னாங்க. போலீஸ் கம்பளைண்ட் பண்ணுனா மனவிருப்பபடி யார்கூட வேணும்னாலும் யாரும் வாழலாம்.ன்னு கேஸ் எடுக்க மாட்டேங்கிறாங்க.அவ புருஷனும் ஊரைவிட்டு அவமானம் தாங்காம போய்ட்டான் நான்தான் என் ரெண்டு புள்ளையோட இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்னு என அந்த பெண் சொல்ல,
நான் வியர்த்து தொப்பலாக நனைந்து இருந்தேன்.அதற்குள் அங்கு அருகில் இருந்தோரும் வந்து உங்களுக்கு மனசாட்சி இருந்தா அட்ரஸ் உங்களுக்கு தெரியும்ன்னா கொடுத்துட்டு போங்க சார் மீதியை நாங்க பார்த்துகிறோம் என சொல்ல நான் அவனின் ஓசூர் அட்ரஸ் மற்றும் அலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு அங்கு இருந்து
கதை 1960களில் பிரான்சில் நடக்கிறது.நாயகன் கட்டிட தொழிலாளியாக இருந்துகொண்டே அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் எதிராக செயல்படும் அமைப்பில் ஒருவனாக செயல்படுகிறான்.அமெரிக்காவை ஒழிக்க வேண்டுமெனில் அதன் பொருளாதாரத்தில் கை வைக்க வேண்டும்.எனவே அவன் அந்த அமைப்பில் உள்ள ஒருவரோடு இணைந்து வங்கி
கொள்ளையில் ஈடுபடுகிறான். அதில் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.இதற்கு இடையில் இதே உணர்வோடு செயல்படும் பெண்ணோடு காதல் உருவாகிறது.வங்கிகொள்ளையில் இவனோடு ஈடுபடும் நபர் கொள்ளை முயற்சியில் இறக்கிறார்.இவன் அடுத்தகட்டமாக கள்ளநோட்டு அச்சடிக்கிறான்.அமெரிக்காவின் திட்டத்தை எதிர்க்கும் இவன்
திட்டத்தை சேகுவாராவிடம் தெரிவிக்க விமானநிலையத்துக்கு கள்ளபணத்தோடு செல்கிறான் அங்கு காவல்துறை அவனை பிடிக்க முயற்சிசெய்கிறது. அதன்பின் அதில் இருந்து தப்பி அடுத்த முயற்சியில் இறங்குகிறான். காவல்துறை தீவிரமாக கண்காணிக்கிறது. இந்த முறை city பேங்க் காசோலை போலியாக தயாரிக்கிறான். அதை
கந்தாரா இந்த படத்தை பற்றி பேசிட்டு இருந்தாங்க.. நம்ம ஆளுங்க நிறைய பேர் விமர்சனமும் எழுதுனாங்க.கழுவியும் ஊத்துனாங்க.அது அவரவர் ரசனை சார்ந்தது. வழிபாடு பற்றியும் பேசிட்டு இருந்தாங்க அல்லது விவாதம் பண்ணிட்டு இருந்தாங்க. இங்க எத்தனை பேருக்கு குலதெய்வ வழிபாடு நாட்டார் கோவில் வழிபாடு
பற்றி தெரியும்னு எனக்கு தெரியல. எங்க ஆச்சி ஒரு சாமிக்கு கோழி சுட்டு சுருட்டு, மது வச்சு படையல் போடுவாங்க. அதுவும் பனைமரத்து மூட்டுக்குள்ள. முதலில் பதநீர் இறக்கியதும் முனீஸ்வரனுக்கோ இல்லை ன்னா பேச்சிக்கோ படைச்சுட்டு சாலையில் நடந்து போறவங்களுக்கு பனை ஓலை பட்டைல கொடுப்பாங்க.
எங்க சுடலைமாடனுக்கு கொடை கொடுத்தா சீனிக்கிழங்கு, எண்ணெய் புண்ணாக்கு, பயிறு, சுருட்டு, மது,கிடா வெட்டிட்டு பீடத்துல ரத்தம் தெளிச்சு கறி படைக்காம எடுத்து வைப்பேன். அப்புறம் பூச முடிஞ்சதும் கறி பங்கு போட்டு கொடுத்து விட்டுவிடுவோம். அங்க சமைக்க முடியாது.அதுவே அதே சுடலைமாடன்
ஒரு சில திரைப்படங்கள் பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது, பார்த்து முடித்தபின் இரண்டு மூன்று நாட்கள் அதன் பாதிப்பு மனதில் இருந்து கொண்டே இருக்கும்.பதின்வயதுகளில் எல்லாருக்கும் வயதில் மூத்த பெண்ஒருத்தி தேவதையாக, காதலியாக இருந்திருப்பாள்.அப்படிபட்ட நாயகன்களுக்கான கதை இது
நிச்சயமா இந்த படம் எல்லாருக்கும் 🔞 படமாக தான் அறிமுகம் ஆகியிருக்கும். எனக்கும் அப்படித்தான் இந்த படம் அறிமுகம் ஆனது.ஆனால் படம் பார்த்தபின் இந்த படத்தை எவன்டா பிட்டு படம் என சொன்னது என கேட்க தோன்றியது.ஒரு பதின்வயது சிறுவன் தன்னை அந்த பெண்ணுக்கு நாயகனாக நினைத்துகொண்டு கற்பனையில்
அவன் செய்யும் காரியங்கள், நிஜத்தில் அந்த பெண்ணுக்கு பிரச்சனை ஏற்படுகையில் வேடிக்கை மட்டுமே காண்கிறான். எல்லாரும் கொண்டாடும் பெண், அவளின் அழகில் மயங்கி அவளை தன் வசப்படுத்திய ஆண்களும் வேடிக்கை பார்க்கயில் இவனால் மட்டும் என்ன செய்ய முடியும்? அவன் சூழ்நிலை அதுவே.
இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி 2004யில் எழுதப்பட்டு பின் படமாக 2017இல் வெளியான தரமான ஒரு money heist திரில்லர் படம். Attila வறுமையின் பிடியில் இருக்கும் வாலிபன். ஒரு விளையாட்டு அகாடமில கோல் டென்டர் ah வேலை பார்த்துட்டு இருக்கிறான். அவனுக்கும் மற்றவர்கள் போல் செலவு செய்து சந்தோசமா
வாழ ஆசை.அதனால் திருட ஆரம்பிக்கிறான். திருட செல்லும்முன் பயமில்லாமல் செயல்பட whisky குடித்துவிட்டு செல்கிறான். அதனால் திருடிவிட்டு செல்லும் இடங்களில் அந்த மதுவின் வாசனை அதிகமாக இருக்கிறது. இதனால் whisky திருடன் என அழைக்கப்படுகிறான்.அவன் தேவைக்காக திருட்டை ஆரம்பித்தவன். இப்போது
திருடும் போது கிடைக்கும் கிளர்ச்சிக்காக திருட தொடங்குகிறான்.1993 முதல் 1999வரை 29 கொள்ளை சம்பவங்கள் எங்கும் உயிர் சேதமில்லாத வெற்றிகரமான திருட்டு சம்பவங்கள்🔥🔥.காவல் துறையால் கண்டுபிடிக்கமுடியா சூழ்நிலையில் அவன் கூட்டாளி காவல்துறையில் சிக்கியதால் சிக்குகிறான்.இருப்பினும் அதில்
#சம்பவம் 2014-ஆம் வருடம்,சென்னையில் ஆபீஸ் மீட்டிங் மாதத்தில் ஒருநாள் கண்டிப்பா இருக்கும்.உடன்குடியில் இருந்து சென்னை சென்று வருவதற்கு அலுவலகமே டிக்கெட் போட்டு தருவதால்,நமக்கும் ஊர் சுற்ற பிடிக்கும் என்பதாலும் சந்தோசமாக சென்னைக்கு சென்று வருவேன்.சனிக்கிழமை மீட்டிங் இருக்கும்.
ஞாயிறு நண்பர்களோடு ஊர் சுற்றிவிட்டு அப்டியே மாலை வேளையில் கோயம்பேட்டில் இருந்து உடன்குடிக்கு பயணத்தை தொடங்கிவிடுவேன். எப்போதும் தனிமைதான். முக்கியமா ஜன்னல் சீட். ஜன்னல் சீட் கிடைக்கலைன்னா அடுத்த bus இப்டியே ஒரு நான்கு மாதங்கள் சென்றது. ஜோடியா எவனாவது வண்டியில் ஏறுனா. கொஞ்சம்
மனசுக்கு கடுப்பாகவே இருக்கும். வழக்கம்போல் மீட்டிங் முடித்து ஊர் சுற்றிவிட்டு பேருந்தில் ஏறினேன். ஜன்னல் சீட் என்பதால் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன்.பேருந்து பெருங்களத்தூரில் நின்றது. நம் பக்கத்துல ஒரு பொண்ணு அமருவாள் அவகிட்ட அப்டியே பேசி நம்பர் வாங்கி கடலை போடணும்ன்னு ரொம்ப
கதை 1935யில் நடக்கிறது. நாயகன் green mile எனும் சிறைச்சாலையில் சிறை அதிகாரியாக பணி செய்கிறான். அவனுடன் இன்னும் சில அதிகாரிகள் பணி செய்கிறார்கள். அவனுக்கு மேல் வார்டனும் உண்டு.சிறையில் நடக்கும் சம்பவங்களை அவருடன் நாயகன் பகிர்ந்துகொள்வான்.இந்த சிறைசாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட
கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருப்பர். அதில் ஒருவன்தான் ஜான் coffey. இரண்டு பெண் பிள்ளைகளை கொடூரமான முறையில் கொன்ற காரணத்திற்காய் மரண தண்டனை பெற்றவன். இவனுடன்.. ஒரு psycho, எலி வளர்க்கும் வயதான கைதி. இன்னும் சிலர். நாயகனுக்கு ஒரு யூரின் செல்கயில் தீவிரமான வலி ஏற்படும். அதனால்
அவன் வேதனையில் துடிப்பான். இதை உணர்ந்த John Coffey அந்த வலியினை நீக்கி நாயகனை குணமாக்குவான்.கிறுக்கு சிறை அதிகாரியால் கொல்லப்படும் எலிக்கு உயிர் கொடுப்பான் ஜான் coffey. முரட்டுதனமா உடல் இருந்தாலும்,மற்றவர்கள் வலி உணர்ந்து அவர்களுக்கு உதவிசெய்து குணமாக்கும் சக்தி,John Coffeyக்கு