#தெய்வ_நம்பிக்கை ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்கு பகவான் நாரயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார். நாரதர், ஸ்ரீமன் நாராயணனை சந்திக்க சென்று கொண்டிருப்பதை அறிந்த அவர், நாரதரை வணங்கி, “தாங்கள்  பகவான் ஸ்ரீமன்
நாராயணனைப் பார்க்கும்போது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?” என்று விண்ணப்பம் வைத்தார். நிச்சயமாக என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார். சற்று தொலைவில், ஒரு ஆலமரத்தடியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார்
நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்மதித்து அங்கிருந்து வைகுந்தம் போனார். வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடு
பேறு அடைவார்கள் என வினவினார். சற்றும் யோசிக்காமல் பகவான், “செருப்பு தைக்கும் தொழிலாளி இப்பிறவி முடிந்ததும் பிறவிக் கடலை நீந்தியவராவர், அந்த அந்தணர் இப்போதைக்கு வீடு பேரு பெறும் சாத்தியம் இல்லை, இன்னும் பல பிறவிகள் காத்திருக்க வேண்டும்” என்றார். இதைக் கேட்ட நாரதருக்கு அதிர்ச்சி
கலந்த வியப்பு! பகவானை நோக்கி, " ஓ பிரபு, வேதங்களை நன்கு கற்றறிந்த பண்டிதன், ஆச்சாரமாக வாழும் ஒருவனை விட ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி விரைவாக பிறவிக்கடல் தாண்டி வீடு பேரு அடைவது எப்படி என்று எனக்குப் புரியவில்லை, சற்றே என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா?” என்றார். அதைக் கேட்டு
புன்னகைத்த பகவான், ஒரு ஊசியை நாரதரிடம் கொடுத்து, “நீ நேராக சென்று அவர்களை சந்திப்பாயாக, அவர்கள் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் எனக் கேட்டால், இந்த ஊசியின் காது வழியாக ஒரு யானையை நுழைக்க முயன்று கொண்டு இருந்தேன் என்று சொல், அதற்கு அவர்கள் எந்த பதில் தருகிறார்கள் என்று பார், உன்
சந்தேகம் தீரும்” என அனுப்பி வைத்தார். நாரதரும் அவ்வாறே திரும்ப வந்து, வழியில் சந்தித்த அந்தணரை மீண்டும் கண்டார். அவரைக் கண்டதும் மகிழ்ந்த அந்தணர், “நாராயணரைச், சந்தித்தீர்களா? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” என வினவினார். நாரதர் பகவான் சொன்னபடி, ”ஊசியின் காது வழியாக ஒரு யானையை
நுழைக்க முயன்று கொண்டிருந்தார்” என்றார். அதற்கு அந்தணர், "மாமுனிவரே தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை, ஊசியின் காதில் எப்படி யானை நுழையும்?" என்றார். புன்னகைத்த நாரதர், அடுத்து செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்து அதையே சொன்னார்.
அதைக் கேட்டதும், "ஆஹா, என் இறைவன் எல்லாம் செய்ய வல்லவன், அவனால் இது நிச்சயம் முடியும்” என்று துள்ளிக் குதித்தார். இதைப் பார்த்த நாரதருக்கோ பெருத்த ஆச்சரியம். “ஐயா, நான் சொல்வதை அப்படியே நம்புவதா? எதை வைத்து யானையை ஊசியின் காதில் நுழைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?” என்று
வினவினார். அதைக் கேட்ட அந்த தொழிலாளி, “ஐயா யானை என்ன பெரிய யானை, அதை விட பல மடங்கு பெரியதைக் கூட ஊசியின் காதை விட சிறிய துளையிலும் என் இறைவனால் நுழைக்க முடியும்” என்றார். மேலும் வியந்துபோன நாரதர் எப்படி என வினவினார். கீழே குனிந்து அங்கே கொட்டிக் கிடந்த ஆயிரக்கணக்கான ஆலமரத்தின்
பழங்களில் ஒன்றை எடுத்து அதிலிருந்த கடுகினும் சிறிய விதையைக் காண்பித்த அந்த தொழிலாளி “இதோ நான் தினமும் வந்து உட்காரும் இந்த இடத்திலுள்ள ஆலமரத்தைப் பாருங்கள், இவ்வளவு பெரிய மரத்தையே இவ்வளவு சிறிய விதையினுள் வைக்க முடிந்த இறைவனுக்கு, யானையை ஊசியின் காதில் நுழைப்பதென்ன பெரிய விஷயமா?”
என்று கேட்டார். இதைக் கேட்ட நாரதரின் சந்தேகம் தற்போது முற்றிலும் தீர்ந்தது. ஆம் நம்பிக்கையற்றவன் வைகுணடத்தில் ஶ்ரீமன் நாராயணனின் பக்தித் தொண்டினை அடைய முடியாது.
ஶ்ரீமத் பகவத் கீதை 9.3
அஷ்ரத்ததானா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யு–ஸம்ஸார–வர்த்மனி
“எதிரிகளை வெல்வோனே, இந்த பக்தித் தொண்டில் நம்பிக்கையற்றவர்கள் என்னை அடைய முடியாது. எனவே, அவர்கள் இந்த பௌதிக உலகின் பிறப்பு இறப்பு பாதைக்கே திரும்பி வருகின்றனர். (பகவத் கீதை 9.3)

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 16
கிரேஸி மோகன் சகோதரர் மாது பாலாஜி அவரின் குழுவினர் பலரும் #சபரிமலை சென்ற அனுபவத்தை பதிவிட்டுள்ளார் மாது பாலாஜி.

“சபரிமலைக்கு 88ம் ஆண்டு சென்றேன். அதுதான் நான் முதன் முதலாகச் சென்றது. ஐயப்பனின் அருள் இல்லாமல் மலையேற முடியாது. எங்களுக்கு குரு சாமியாக இருந்தவர் என்னை விட இளம் வயது. Image
அவருக்கு அப்போது 25 வயது. எனக்கு 30 வயது. சபரிமலையில் படிபூஜை செய்வதற்கு ஐயாயிரம் ரூபாய் பணம் கட்டினோம். 89ம் ஆண்டு, படிபூஜை செய்வதற்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. எங்கள் சித்தப்பாவுடன் கிரேஸி மோகன் சபரிமலைக்குச் சென்று கொண்டு இருந்தான். அந்த வருடம் எங்களுடன் வந்தான். படி பூஜை
என்பதும் அதற்கு பணம் கட்டியதும் பக்தியாகப் பார்க்கத் தெரியவில்லை. மாறாக அதனால் ஒரு மமதை வந்தது எங்களுக்கு. படி பூஜையோ நெய் அபிஷேகமோ தரிசனமோ எதுவாக இருந்தாலும் ஐயப்பன் நினைத்தால் தான் எதுவுமே நடக்கும். நாங்கள் விபூதி, சூடம் எல்லாம் எடுத்துச் செல்வோம். கோயிலில் சேர்ப்பித்து
Read 13 tweets
Feb 16
#MahaPeriyava
Source: Maha Periyavalh Virundhu by Raa. Ganapathi

Even during the 1920’s Paramacharya hosted a dinner for the Muslims, whose sense of unity and patriotism ran high in those days. Two hundred Muslim youths from an Islamic Youth Forum performed an exemplary service Image
in the Mahamaham festival of 1921 in Kumbakonam. Paramacharya, who was camping at Patteeswaram nearby, heard about it and sent some Matham officials to bring the Muslim youths to Him. The youths were very happy that Shankaracharya had called them to His presence. They stood
before Him showing utmost reverence. Maha Periyava praised their seva and heard the details about their Forum. He inquired their personal details such as native place, education, occupation and family of all the two hundred youths individually and made everyone of them immensely
Read 11 tweets
Feb 16
#குளிகை நாம் பஞ்சாங்கத்திலும் தினசரி காலண்டரிலும் குளிகை என்று குறிப்பிட்டு அன்னன்னிக்கான நேரம் சொல்லப்பட்டிருக்கும். குளிகை என்றால் என்ன?
இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டும் ஆனாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தன் Image
குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான். யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன், அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்.
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார்,
“கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்”என்று யோசனை கூறினார். உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன். ஒரே அறையில்
Read 16 tweets
Feb 15
nationalreview.com/news/whered-yo… Elon Musk, exposed how Dr. Martin Kulldorff, a Harvard-educated epidemiologist, once tweeted, "COVID vaccines are important for high-risk people and their caretakers. Those with prior natural infection do not need it nor children."
The Twitter Files showed
that his tweet was deemed false information because it ran contrary to the CDC.
"Where did you go to medical school?" Mace asked Gadde, the former chief legal officer of Twitter.
Gadde and three other former Twitter executives testified before the hearing on Twitter’s censorship
of the New York Post's reporting on President Joe Biden's family’s business dealings ahead of the 2020 election, based on information obtained from the abandoned laptop of Biden's son, Hunter Biden.
"I did not go to medical school," Gadde said.
"I’m sorry?" Mace asked. Gadde
Read 4 tweets
Feb 15
#அனுமர்_தாகம்_தீர்த்த_அருள்குமரன்
கோயம்புத்தூர் அருகே அமைந்துள்ளது, #அனுவாவி மலை. இதன் அடிவாரத்தில் முருகப் பெருமானுக்கு திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. வடக்கே குருவிருட்ச மலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட திருக்கோவில் இது. மூர்த்தி, ImageImage
தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டதாக இந்த ஆலயம் விளங்குகிறது. ராமாயண காலத்திலேயே முருகப்பெருமான் வழிபாடு இருந்ததை, இந்த ஆலயத்தின் தல புராணம் நமக்கு எடுத்துரைக்கிறது. இலங்கையை அரசாண்ட ராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போய் சிறை வைத்திருந்தான். தனது மனைவியை மீட்பதற்காக, Image
ராவணனுடன் போர் புரிந்தார் ராமபிரான்.அவருக்கு பக்கபலமாக வானரப் படைகள் இருந்தன. ராவணப் படையோடு போரிட்ட வேளையில், ராவணனின் மகனால் விடப்பட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையாகிப் போனான். அவனைக் காப்பாற்ற வேண்டும் என்றால், சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகைகள் தேவைப்பட்டது. அதைக் Image
Read 13 tweets
Feb 15
#மகாபெரியவா
ரமணி அண்ணா அவர்களின் சொந்த அனுபவம்.
சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டு, நிர்மாணப் பணிகள் நடைபெற்று வந்த சமயம். 1993-ம் வருட ஆரம்பம்.
தரிசனத்துக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். அப்போது ஒரு நாள் காஞ்சி மகா ஸ்வாமிகளைத் Image
தரிசித்து ஆசி பெறச் சென்றிருந்தேன். ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தேன். ஸ்வாமிகளுக்கு என்னையும் ஆஞ்சநேயர் ஆலய நிர்மாண விஷயமும் நன்றாகவே
தெரியும், ஆதலால், "க்ஷேமமா இரு. இப்பவே நெறய கூட்டம் வரதா இங்கே வரவாள்ளாம் சொல்லிண்டிருக்கா. பெரிய ஆஞ்சநேயரோன்னோ அதான் அப்படி ஒரு
ஆகர்ஷண சக்தி Image
அத்தனை இருக்கு!" என்று ஆசீர்வத்த்துவிட்டு
"பெரிய ஸ்வாமி ஆச்சே, அவர் சாப்பிடறதுக்கு தினமும் நெறய நிவேதனம் பண்ணணுமே?" என்று கவலையுடன் கேட்டார்.
உடனே நான், "தினமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு நிவேதிக்கிறோம்" என்றேன்.
"சுத்த அன்னமாகவா?"
"இல்லே பெரியவா சித்ரான்னங்களா [கலந்த சாத வகைகள்]
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(