காலன் வழிபட்ட சிவலிங்கமும், ஆசியாவிலே மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி என்று பல்வேறு புகழினை உடையது #கோவில்பாளையம்_காலகாலேஸ்வரர் ஆலயம். கோவையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் எழிலுறத் திகழ்கிறார் ஈசன். இத்தலத்தில் மூலவர் மணலும் நுரையும் கலந்த லிங்க
வடிவில் அருளுகிறார் என்கின்றனர் பக்தர்கள். பொதுவாக மணலால் ஆன லிங்கம் காலத்தில் நிலைத்து நிற்பது என்பது அபூர்வம். ஆனால் இத்தல இறைவன் சுமார் 1300 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் பேறு பெற்றவர் என்பது நம்பிக்கை. மிருகண்டு முனிவருக்கும் மருத்துவவதிக்கும் திருமணம் ஆகி நீண்ட நாள்கள் ஆகியும்
குழந்தை பாக்கியம் இல்லை என்ற ஏக்கம் இருந்தது. எனவே, அவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டி சிவபெருமானை மனதார வழிபட, அத்தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு #மார்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயன் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டு ஒழுகினான்.
மார்கண்டேயனின் 16 வயதிலேயே ஆயுள் முடிய வேண்டும் என்று விதி இருந்தது. ஆயுள் முடியும் நாளில் யமதர்மனின் தூதுவர்கள் அவனது உயிரை எடுக்க வந்தனர். மார்க்கண்டேயன் திருக்கடையூர் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரரை இறுகப் பற்றிக் கொண்டு சரணாகதி அடைந்தான். இதனால் கோபமடைந்த யமன்
பாசக்கயிறை சுழற்றி வீச, அக்கயிறு ஈஸ்வரன் மீது விழுந்தது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், யமனை சூலத்தால் குத்தி இடது காலால் எட்டி உதைத்து சம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார். யமனின் யமலோகப் பதவி பறிக்கப்பட்டு மானிடனாக பூலோகத்தில் உலாவினார். மீண்டும் யமபதவி வேண்டி கௌசிகாபுரி தலம்
சென்று (தற்போதய கோவில் பாளையம்) அங்குள்ள நதியில் நீராடி சிவபூஜை செய்ய எண்ணினான். சிவபூஜை செய்ய லிங்கம், விபூதி, வில்வம், ருத்ராட்சம் என ஏதும் கிடைக்கவில்லை. எனவே, செய்வதறியாது அங்கு கிடந்த குச்சியை எடுத்து மண் குவிந்த இடத்தில் குத்தினான். அதன் உள்ளிருந்து நுரை பொங்கி வந்தது.
மணலுடன் நுரையைச் சேர்த்து அழகிய சிவலிங்கம் வடித்துப் பூஜை செய்தான். யமனுக்கு அருகில் கௌசிக முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். முனிவரிடம் பாவ விமோசனம் கேட்டு யமன் இறைஞ்சினான். பரம்பொருள் யமனின் முன்பு தோன்றி, சாப விமோசனம் அளித்து மீண்டும் யமபதவி வழங்கி அனுக்கிரக மூர்த்தியாக
அருளினார். இதனால் யமதர்மன் மகிழ்ந்து யமலோகம் நோக்கிச் சென்றான். யமன் வழிபாடு செய்த மணலும் நுரையும் சேர்ந்த சிவலிங்கமே #காலகாலேஸ்வரர் என்கிறது தலவரலாறு. கரிகாலச்சோழன் தன்னை வருத்திய பிணி நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்கள் எழுப்பினான் என்பது வரலாறு. அவ்வகையில்,
காலகாலேஸ்வரருக்கு சிவாலயம் எழுப்பி வழிபட்டான். உள் நுழைந்தவுடன், கன்னி மூல கணபதி எழுந்தருளியுள்ளார். கணபதியை வணங்கி விட்டு வலதுபுறம் திருப்பினால் தட்சிணாமூர்த்தி அருளுகிறார். இடது புறம் திரும்பிச் சிறிது தூரம் சென்றால் நஞ்சுண்டேசுவரர் அருள் பாலிக்கிறார்.
மூலவருக்கு இடப் புறத்தில்
கருணாகரவல்லி அம்மன் அழகுற காட்சி அளிக்கிறார். சிவனுக்கும், அம்பிகைக்கும் இடையே கால சுப்பிரமணியர் வீற்றிருப்பதால் இத்தலம் சோமஸ்கந்த அமைப்பு கொண்ட கோவிலாக விளங்குகிறது. தல விருட்சமாக வில்வ மரமும் தலதீர்த்தமாக காலபொய்கை நதியும் உள்ளது. யமனுக்கு அருள் செய்த தலம் என்பதால் இத்தலத்தில்
ஆயுள் ஹோமம், உக்கிரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் பூர்ணாபிஷேகம் போன்ற ஹோமங்கள் செய்வது சிறப்பு. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெறுகிறது. நெய், பஞ்சாம்ருதம், தயிர் மட்டும் சுவாமி
அபிஷேகத்தில் சேர்ப்பதில்லை. இந்த அபிஷேகத் தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இப்பிரசாதத்தை உண்போருக்கு உடலை வருத்திய பிணி நீங்கும் என்பது நம்பிக்கை. சூரசம்ஹாரம் இத்தலத்தில் விமர்சையாக நடைபெறுகிறது. மரகதத்திற்குரிய குணங்களைக் கொண்ட பச்சை நிற நந்திக்கு பிரதோஷ பூஜை
சிறப்பாக நடைபெறும். அனைவரும் வாழ்வில் ஒரு முறையேனும் காலகாலேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் ஆயுளும் ஆரோக்கியமும் பெறலாம்.
இடம்: சர்கார் சாமகுளம், கோவில்பாளையம் #அன்பேசிவம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருச்சி அடுத்த #பிச்சாண்டார்கோவிலில்#உத்தமர்_கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும்
லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப் பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன.
வைணவ புராணத்தின்படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன்
வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது. சிவபெருமானின் புராண வரலாற்றின் படி அவருக்குரிய 63 மூர்த்தங்களில் (வடிவங்களில்) ‘பிச்சாடனர்’ அதிமுக்கியமானது. உலகில் நன்னெறி போதிக்க வந்த முனிவர்களும் அவர்தம் மனைவியரும்
#சந்தோஷம்
ஒரு ஸ்ரீ கிருஷ்ண பக்தி சொற்பொழிவு கூட்டத்தில் ஒரு பெண்மணியை பார்த்து சொற்பொழிவாளர் கேட்டார். “உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"
அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர்
சந்தோஷமாகவே இருந்தார். ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார். “என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் ஸ்ரீ கிருஷ்ணன் அருளால்
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது என் கணவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன்
#மகாபெரியவா
மார்ச் 20,2020,தினமலர்-திருப்பூர் கிருஷ்ணன்.
காஞ்சி மகாசுவாமிகளை வேத பண்டிதர்கள் சிலர் தரிசிக்க வந்தனர்.
இளைஞன் ஒருவனும் அவர்களுடன் வந்திருந்தான். அவன் முகம் சற்று வாட்டமாக இருந்தது. அனைவரும் வேதங்களைப் பாராயணம் செய்ய சுவாமிகள் ஆர்வமுடன் கேட்டார். ஆளுக்கொரு ஆரஞ்சுப்
பழம், குங்குமப் பிரசாதமும் கொடுத்து ஆசியளித்தார். அவர்கள் விடைபெற்ற போது இளைஞனிடம் “நீ மட்டும் இங்கேயிரு. பிறகு போகலாம்!” என சொன்னார். சிறிது நேரத்தில் பக்தர் ஒருவர் சுவாமிகளை தரிசிக்க வந்தார். சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்த அவர், 'சுவாமி! காதுவலியால் நான் மிகவும் சிரமப்பட்டேன்.
அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். மருந்திலேயே குணம் பெற வேண்டும் என்றும், விருப்பம் நிறைவேறினால் கடுக்கன்களை தங்களிடம் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டேன். அடுத்த முறை பரிசோதித்த போது மருந்திலேயே குணப்படுத்தலாம் என மருத்துவரும் தெரிவித்தார். அதன்படி
#Gotra_in_Hinduism#Gene_Mapping
Every time we sit for a Puja, the temple priest asks you for our Gotra. The Science behind Gotra (Genetics), is nothing but what is today popularly known as Gene mapping. Why do we consider the knowledge of one's Gotra to be so important to decide
marriages?
Why should only Sons carry the Gotra of father, why not Daughters?
How/Why does Gotra of a Daughter change after she gets married? What is the logic?
In fact, this is an amazing and ancient genetic science that we follow. The word Gotra is formed from two Sanskrit
words, Gau (meaning Cow) and Trahi (meaning Shed). Gotra means Cow-shed. Gotra is like a cowshed protecting a particular male lineage. We identify our male lineage / Gotra by considering to be descendants of the 8 great Rishi (Sapta Rishi + Bharadwaj Rishi). All the other Gotra
#சிவராத்திரி_ஸ்பெஷல்
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும் போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது “சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக் கொள். சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறி விட்டான். இறை வழிபாடு
என்றால் என்ன என்று தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள் ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஒரு நாள் திடீரெனப் பெய்த மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும் கரைந்து விட்டது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம்
செய்யச் சாம்பல் இல்லையே என வருந்திய அவனும் வறட்டிகளை அடுக்கித் தீயை மூட்டி விட்டுத் தனது மனைவியிடம், “நான் இந்தத் தீயில் விழுகிறேன். என் உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்” என்று கூறினான். ஆனால் மனைவியோ ”நீங்கள் அப்படி இறந்து விட்டால் இங்கு
இன்று #சிவராதிரி 18.02.23
சிவராத்திரியன்று இரவு இதை படித்தால் எல்லா வளமும் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ராமபிரான் வனவாசம் செய்த தண்டகாரண்யம் காட்டுக்குப் பக்கத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் கமாலபுரம் என்று ஓர் ஊர் இருந்தது. அங்கு இருந்த பொய்கையின் பெயர் கலசரஸ்.
அந்த குளத்தின் கரையில் நிறைய முனிவர்கள் ஆசிரமம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களில் ஒருவர் வித்வஜிஹ்மர். அவரைப் பார்க்க கௌஸ்திமதி ரிஷி வந்தார். வித்வஜிஹ்மர் அவரை மனம் மகிழ வரவேற்று உபசரித்தார். “இந்தச் சின்ன வயதில் நீங்கள் துறவியாக இருப்பது கொஞ்சம் கூட சரியில்ல. குழந்தை
பாக்கியம் இல்லாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா! முன்னோர்களோட சாபமும் வந்து சேரும். அதனால் தானே அகஸ்தியர் லோபமுத்திரையை உருவாக்கி மணந்து கொண்டார். அதனால் நீங்கள் என் மகள் வசுமதியை மணந்து கொள்ளுங்கள்” என்று வித்வஜிஹ்மர் இடம் சொன்னார்.