மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு பதிவு..
கடந்த முறை சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.
மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது...
அடியார்கள், சிவாச்சாரியார்கள், கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரியவில்லை,
உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.
உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.
கோவில் என்ன சிற்றுண்டி கடையா? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது. கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.
மகா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு?
மேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி
மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.
சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.
ஆனால் பக்தர்களின் ஆரவாரம், கேளிக்கைகள், சப்தம் கோவிலை பிளக்கிறது. சிவராத்திரி
விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது.
ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு,
மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.
மனதில் சொல்லவேண்டிய மந்திரம்
'சிவாய நம ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்'
இப்படி செய்வது ஒரு விதம்,
மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது ஒரு விதம்,
சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.
தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.
இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை.
சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.
நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம்.
ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் மாற்றுதலும் செய்யவேண்டாம்.
ஒரு மிகப்பெரிய பிசினஸ்மேன்.
சின்னதாக ஒரு மளிகைக்கடையில் ஆரம்பித்த தொழில், ஜுவல்லரி ஷாப், ஹோட்டல், துணிக்கடை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்... என விரிந்திருந்தது.
நகரத்தில் பெரும் செல்வந்தர்,
கௌரவத்துக்குரியவர் என்ற பெயரையெல்லாம் பெற்றுவிட்டார்.
அன்பான மனைவி, இரு ஆண் மகன்கள்.
ஆனாலும்,
அவருக்கு நேரமில்லை.
யாரையும் நம்பி பிசினஸை ஒப்படைக்க மனமில்லை.
விடிவதற்கு முன் தொடங்கிவிடும் ஒரு நாள் பொழுது, நள்ளிரவில்தான் அவருக்கு முடிகிறது.
மனைவி, பிள்ளைகளுடன் உரையாடவோ, பல நேரங்களில் சேர்ந்து சாப்பிடவோகூட நேரமில்லாமல் தான் அவர் `பிசினஸ், பிசினஸ்...’ என்று அலைந்துகொண்டிருந்தார்.
நீங்கள் இந்த பழைய பஞ்சாங்கத்தைப் பாடுவதை விடுத்து இன்றைய நவீன யுகத்துக்குத் தக்கவாறு எதாவது உபயோகமான பதிவுகளைத் தாருங்கள் என்று சில நண்பர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
பஞ்சாங்கம் என்றால் என்னவென்று தெரிந்தால் அவர்கள் அப்படிக் கூறியிருக்க மாட்டார்கள். பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களின் வானியல் ஞானத்தை உலகுக்கு பறை சாற்றும் விண் ஞான சாஸ்திரமாகும்.
நம் பாரத கண்டத்தைச் சேர்ந்த ரிஷிகளும், சித்தர்களும், கணித மேதைகளும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு விஞ்ஞானத் துறைகளில் ஞானம் பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். அதில் கணிதமும், வானியலும் அடங்கும்.
இன்று தமிழின் தொன்மை என்று நாம் பெருமிதம் கொள்ளும் பல நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து மக்கி மண்ணுக்குப் போகாமல் அச்சுக்கு மாற்றி அவற்றை அழியாமல் காத்தவர் உ.வே. சுவாமிநாதையர் அவர்கள்.
அதற்காக அவர் செலவழித்த நேரம், பொருள், பயணம் , உழைப்பு இவற்றுக்கு ஈடாக எதைக் கொடுத்தாலும் நிறைவு செய்ய முடியாது. அதை எதிர்பார்த்தும் அவர்
உழைக்கவில்லை. தமிழ் மீது கொண்ட ஆர்வம்.... காதல்....
ஒரு காலகட்டத்தின் தேவையை ஒரு மனிதரைக்கொண்டு காலம் நிறைவேற்றிக்கொண்டது. ஒரு பல்கலைக்கழகம் கூட அந்த தனி மனித உழைப்புக்கு ஈடாக பணியாற்றமுடியுமா என்பது சந்தேகமே.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
1
இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் வைரவன்பட்டி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் முன்னர் வடுகநாதபுரம் என்றழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது..
2
*இறைவன், இறைவி:*
இக்கோயிலின் மூலவராக வைரவன் சுவாமி உள்ளார். அவர் வளரொளிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வடிவுடை அம்பாள் ஆவார். கோயிலின் தல மரங்கள் ஏர் மற்றும் அளிஞ்சி ஆகியவை ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக வைரவர் தீர்த்தம் உள்ளது.
1000 ஆண்டுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிகு குமரி சிவாலய ஆன்மிக திருத்தல தரிசன ஓட்டம். கன்னியாகுமரி மாவட்ட ஆலய விழாக்களில் எத்தனையோ சிறப்புகள். அவற்றில் குறிப்பிடத்தக்கது, சிவாலய ஓட்டம்.
மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 90 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பன்னிரண்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது.
இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே ஓட்டம்!