சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (1/2)
மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயினால் இறந்தால்...
வாளாற்படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்கவேண்டி, பிணத்தை வாளால் வெட்டிப்புதைத்தனர் (புறம்: 93).
பாடையைக் 'கால்கழி கட்டில்' என அக்காலத்தில் வழங்கி வந்தனர். இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி, மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என #ஒளவையார் குறிக்கிறார் (புறம்: 286)
இதை 'தூவெள்ளறுவை போர்த்தல்' எனப் புறநானூறு 291-ஆம் பாடல் சுட்டும்.
#பறைகொட்டுதல் - சாவில் பண்டு தொட்டுப் பறைகொட்டும் மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
#பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை 'பூசன் மயக்கம்' என்று குறிக்கிறது...
'இரவலர் வம்மினென விசைத்த துடி' எனத் தகடூர் யாத்திரை பாடல் சுட்டுகிறது.
#சாப்பண்பாடுதல் - சிறுவர்களும், துடியர்களும் பிணத்தைச் சுற்றி வந்து பறை கொட்டுவார்கள். அப்போது சாப்பண்ணைப் பாடினர் என்பதை (புறம்: 291) சுட்டும்.
கனல் முழங்கி விளரிப்பண் கண்ணினார் பாணர் எனப் புறப்பொருள்...
வெண்பாமாலை மேற்கோள் பாடல் சுட்டுவதால் இக்காலத்து விளரிப் பண்ணில் பாட்டிசைத்தனர் எனத் தெரிகிறது.
#அழகு_பார்த்தனர் - இறந்த மன்னனின் பிணத்திற்குப் பொன்னும் மணியும் அணிவித்து இறுதியாக அழகு பார்த்திருக்கிறார்கள்.
மணிமருள் மாலையையும், ஒற்றைவட மாலையையும் ஒரு அரசனுக்கு...
சூட்டியதாகப் புறம் 291-ஆம் பாடல் காட்டுகிறது.
'மார்பில் அறைந்து கொள்ளுதல்'
இக்காலத்து யாரேனும் ஒருவர் இறந்தால், பெண்கள் மார்பில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைப்பதைக் காண்கிறோம்.
அரசன் இறந்தஞான்று மகளிர் மாரடித்துக் கொண்டனர் என்பதை புறநானூறு - 237 ஆம் பாடல் சுட்டும்.
கைகளில் அணிந்திருந்த வளையல்கள் உடைந்து 'வாழைப் பூ' போல் சிதறி விழும்படியாக மார்பில் அறைந்து கொண்டனர்.
அரசனின் பிணத்தைக் குளிப்பாட்டிப் பாடையில் (வெள்ளில்) வைத்துப் பின், சுடுகாட்டிற்கோ அல்லது இடுகாட்டிற்கோ எடுத்துச் சென்றனர் (புறம்: 380).
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (2/2)
மேனாட்டார்க் குறிப்பு:
அராபியரான 'அல் இத்ரீஸ்' என்பவர் தென்னிந்தியாவில் மன்னர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்கிறார்கள்...
என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறார். இவர் பொ.பி 1100- ல் பிறந்தவர்.
அல் புரூனிக்குப் பிறகு (பொ.பி 1048) தென்னிந்தியாவைப் பற்றித் தெளிவான குறிப்புக்களை வழங்கியவர்.
இவர் சிசிலிய மன்னன் ரோஜர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வரலாற்றை எழுதியவர்.
இவர் உலகப் புவியியல் வரலாற்றை 70 பாகங்களாக எழுதினார்.
உலகநாடுகள் அனைத்தையும் 20 ஆண்டுகளுக்கு மேல் நேரில் சென்று ஒரு புதினத்தைப் போல் எழுதி வைத்துள்ளார்.
இந்நூல் அரபி மொழியில் 'கிதாப் நஸ்ஸகத்துல் முஸ்தாக் பி.இக்த தாகில் அபாக்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.
புலால் உண்ணாமை, உண்ணா நோன்பு ஆகிய வழக்கங்களைத் தமிழ்நாட்டிற்குள் சமணர்களே கொண்டுவந்தனர்.
அமாவாசை, பௌர்ணமி ஆகிய 'உவா', நாட்களில் பிச்சைக்கு வரும் சமண பௌத்தத் துறவிகளுக்கு முதல்நாள் உண்டு எஞ்சிய பழைய சோற்றை இடுவதில்லை.
இந்த இருநாட்களிலும் பழைய சோற்றை விலக்கும் வழக்கமும் இப்படித்தான் பிறந்தது.
இதுவே பௌத்தத் துறவிகளுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்தது.
நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும், உண்ணும்போது பேசக் கூடாது என்பன போன்ற சமணத் துறவியர்களின் வழக்கத்தை அப்பர் தம் தேவாரத்தில்...
கண்டித்திருக்கிறார்.
பழந்தமிழ்ச் சமூகம் பிற நாகரிகங்களிலிருந்து வந்த உணவு வகைகளை 'பிட்ஸாவும் கோக்கும்' போலப் போலித் தனமாக வரவு வைக்கவில்லை. மாறாகத் தன்மயமாக்கியே
எடுத்துக்கொண்டது.
புலாலை மையமிட்ட குஸ்கா, கைமா, பாயா, கோளா போன்ற உணவு வகைகள் உருது பேசிய நவாபின் படையினரோடு...
விழாக்கால உணவுகளில் குறிப்பிடத்தக்கன தைப் பொங்கலன்று சமைக்கப்பெறும் பால்பொங்கலும், படைக்கப்பெறும் கிழங்கு வகைகளும் ஆகும்.
இதுவன்றித் திருக்கார்த்திகைக்குச்
செய்யப்பெறும் அரிசிப் பொரிக்குக் 'கார்த்திகைப் பொரி' என்றே பெயர்.
சித்திரை மாதம் புதுமணப் பெண்ணுக்கு அரிசி அவலும், கருப்புக்கட்டியும் சீர்வரிசையாகத் தருவது மரபு. இவையனைத்தும் வைதீக எழுச்சிக்கு முன் உருவான வழக்கங்கள்.
'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது மார்கழித் திருவாதிரையில் (சிவனுக்குரிய நாள்மீன்) சைவர்கள் ஆக்கும் உணவாகும்.
பிள்ளையார் சதுர்த்தியில் (ஆவணி) செய்யப்பெறும் கொழுக்கட்டையும், தீபாவளிக்கான எண்ணெய்ப் பலகாரங்களும், மார்கழி 27ஆம் நாள் செய்யப்பெறும் அக்கார அடிசிலும் வைதீக எழுச்சியில் பிறந்த உணவு வகைகளாகும்.
ஆடி ‘அறுதியில்' (இறுதி நாளில்) 'புலால் சோறு' உண்பது இன்றளவும் தமிழ்நாடு...