#நற்சிந்தனை நம் மனித ஆத்மா கீழ்நிலை உயிரினத்திலிருந்து தொடங்குகிறது. நீர்வாழ் உயிரினத்தில் தொடங்கி, தாவரம், கிருமி, பறவை, மனிதன் என பரிணமித்து, இறுதியில் மனித வாழ்வை அடைகிறது. நாம் மனித வாழ்வை அடைந்திருப்பது நம் அதிர்ஷ்டம். இந்த மனித வாழ்வில் நாம் என்ன செய்கிறோம்? உணவு, உறக்கம்,
தற்காத்தல், மற்றும் இன விருத்திக்காக மட்டும் இந்த கிடைத்தற்கரிய வாழ்க்கையை பயன்படுத்தி, தன்னை பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளதை உணர மறந்து விடுகிறோம். ஆன்மீகப் பக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பள்ளியில் மாணவர்கள் கீழ்
வகுப்புகளிலிருந்து உயர் வகுப்புகளுக்கு உயர்ந்து, இறுதி வகுப்பிற்கு வரும்போது, அதில் தேர்ச்சி பெறாவிடில் அந்த வகுப்பு நெரிசல் மிக்கதாகி விடும். அது போலவே, மக்கள் மேன்மையான வாழ்விற்கு உயர்த்தப்படாத காரணத்தினால், தற்போதைய நாகரிகத்தில் அவ்வப்போது மக்கள் பெருக்கம் அதிகமாக உள்ளது.
ஆத்மா இறைவனடியை அடையாமல் மனித வாழ்வில் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. அச்சமயத்தில், மக்கள்தொகையைக் குறைக்க இயற்கையின் ஏற்பாட்டில், ஏதேனும் ஓர் உயிர்கொல்லி தொற்றுநோய் அல்லது போர் ஏற்படுகிறது. எனவே, மக்கள் மிகவும் பெருமையுடன் வாழும் போதிலும், அவர்களிடம் உண்மையான புத்தியோ அறிவோ இல்லை
ஸ்ரீ கிருஷ்ணன் உண்மையான அறிவைத் தருகிறார். புத்திர் ஞானம் அஸம்மோஹ, புத்தி, அறிவு, மயக்கத்திலிருந்து விடுதலை—இவையாவும் ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு தந்த பரிசு. நாம் அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும். பகவான் கொடுக்கும் பக்தி எனும் பரிசைப் பயன் படுத்துவதற்காகவே இந்த மனிதப் பிறவி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணன் நமக்கு நல்ல உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார். நல்ல புத்திசாலித்தனத்தை வழங்கியுள்ளார், அறிவளிக்கும் நூல்களை வழங்கியுள்ளார். அவர் தாமே நேரடியாக பகவத் கீதையை வழங்கியுள்ளார். இவற்றை பயன்படுத்தி, அவர் அறிவுரை படி நடந்தால் இந்த வாழ்க்கை முழுமை
அடையும். பிறவிப் பயனை அடைவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சமித்து
வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்லி அக்னி குண்டத்தில் இடும் குச்சிகளுக்கு சமித்து என்று பெயர். ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து: நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து: சுக்கிரனுக்குப்
#மேல்மலையனூர்_அங்காளம்மன் திருக்கோவில்
மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது. அம்பாளுக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே
அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர் கருதுகின்றனர். தட்சனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயினியன் அம்சமே அங்காளி என்பதால், மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத் தான் பிரசாதமாக தருகிறார்கள். மலையனூரில் அங்காளம்மன் வடக்கு நோக்கி
இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனைஉன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரிய வரும்.
மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அவள் திருவண்ணாமலை
#மயானக்கொள்ளை
மாசி மாத அமாவாசை நாளில் (20.02.23) அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வு. அப்போது பிரம்மாவுக்கும் ஈசனைப் போல ஐந்து தலைகள் இருந்தன. எனவே, சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும்
என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்து விட்டார் சிவபெருமான். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே
வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்” என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
A Rig Veda teacher came with his five pupils. He told the boys to chant a portion of the lesson they had learnt, in Periyava’s presence. The tone was
almost unmusical. That apart, the boys had very poor knowledge of Sanskrit, as was evident from their recitation. The teacher said, “It is very difficult to teach Veda to these children. It is better to send them to an English school”.
Periyava asked the teacher to sit down.
“Ganapatigale, everything in the world is difficult. Cooking is difficult. You have to light the stove. Boil the water. Drain the starch after the rice is cooked. Vegetables have to be sliced and boiled. Washing clothes is difficult. One has to wash, rinse and wring out the water
ஒரு வைஷ்ணவருக்குப் பரமேஸ்வரனிடம் எல்லையில்லாத பக்தி. திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். என்று ஆசை. ருத்ராக்ஷ மாலை அணிந்து கொள்ள வேண்டும் என்ற அவா! அவ்வப்போது பெரியவா
தரிசனத்துக்கு வருவார் அவர். ஒரு தடவை வந்தபோது பெரியவாளிடம் பிரார்த்தித்துக் கொண்டார்.
"ஒரு மகா பிரதோஷத்தன்னிக்கு நான் பஸ்ம தாரணம் பண்ணிக்கணும். நிறைய ருத்ராக்ஷ மாலை போட்டுக்கணும். ஸ்ரீருத்ர சமகம் சொல்லி ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யணும். நானோ வைஷ்ணவன் நான் இப்படியெல்லாம் செய்யலாமா”
என்று பெரியவாதான் சொல்லணும்.
அவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் பெரியவா.
"பிரதோஷ காலத்திலே உங்கள் வழக்கப்படி பன்னிரண்டு திருமண் இட்டுக்கோ. அனுஷ்டானம் செய். லக்ஷ்மி ந்ருஸிம்மன் விக்ரஹம் அல்லது சாளக்ராமத்துக்கு விசேஷமாகத் திருமஞ்சனம், திருவாராதனம் செய். அதுவே
#தேவதானம்_ரங்கநாதப்_பெருமாள் கோவில். திருவள்ளூர் ஜில்லா, பொன்னேரி தாலுக்காவில், தேவதானம் என்ற கிராமம் வட ஸ்ரீரங்கம் என பெயர் பெற்றது. இங்கே ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் இருப்பவரை விட அரை அடி நீளம் அதிகமானவர். ஆகிருதியாக சேஷன் மேல் படுத்துக் கொண்டிருக்கிறார். இயற்கை சூழலில் நெல்
அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு ஆனந்தமாக சயனித்திருக்கிறார். தேவதானம் பெருமாள் 1000 வருஷங்களுக்கு மேல் பழமையானவர். சாளுக்கிய ராஜாவால் கட்டப்பட்ட சிறிய ஆலயம். கோவில் வயல்கள் நடுவே ஒரு மணல் திட்டில் அமைந்திருக்கிறது. கோவிலையடுத்து பெரிய
வயதான மரங்கள் உள்ளன. சிறிய சாதாரண நுழைவாயில், அதை தொடர்ந்து பலி பீடம், கொடிமரம், எதிரே பெருமாளை தொழுதபடி கருடாழ்வார். பிரம்மாண்டமான ரங்கநாதர். ஐந்து தலை ஆதிசேஷன். மூன்று மடிப்புகளாக தனது உடலை படுக்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறார். தலைகள் தான் குடை. கிழக்கு நோக்கிய திருமுகம்.