சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (2/2)
மேனாட்டார்க் குறிப்பு:
அராபியரான 'அல் இத்ரீஸ்' என்பவர் தென்னிந்தியாவில் மன்னர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்கிறார்கள்...
என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறார். இவர் பொ.பி 1100- ல் பிறந்தவர்.
அல் புரூனிக்குப் பிறகு (பொ.பி 1048) தென்னிந்தியாவைப் பற்றித் தெளிவான குறிப்புக்களை வழங்கியவர்.
இவர் சிசிலிய மன்னன் ரோஜர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வரலாற்றை எழுதியவர்.
இவர் உலகப் புவியியல் வரலாற்றை 70 பாகங்களாக எழுதினார்.
உலகநாடுகள் அனைத்தையும் 20 ஆண்டுகளுக்கு மேல் நேரில் சென்று ஒரு புதினத்தைப் போல் எழுதி வைத்துள்ளார்.
இந்நூல் அரபி மொழியில் 'கிதாப் நஸ்ஸகத்துல் முஸ்தாக் பி.இக்த தாகில் அபாக்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.
இவர் தென்னிந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் செய்திகள் பொ.பி 900 - 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகள் என்பதை வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
அவர் கூறும் செய்தியைக் கீழே தரலாம்:
தென்னிந்தியாவில் அரசர்கள் இறந்தால் புதைப்பதில்லை சுட்டு விடுகிறார்கள்.
ஒரு ஆள் படுக்கும் அளவு 2 சாண் உயரத்தில் ஒரு வண்டியை செய்கிறார்கள். இவ்வண்டிபை பூக்களால் அலங்காரம் செய்கிறார்கள்.
இறந்த மன்னனை குளிப்பாட்டி, உடைகள் ஆபரணங்கள் அணிவித்து இவ்வண்டியில் கிடத்துகிறார்கள். சிலர் இவ்வண்டியை முக்கிய வீதிகளின் வழியாக இழுத்துச் செல்கிறார்கள்.
தலைப்பாகம் தவிர ஏனைய பாகங்கள் எல்லாம் வெள்ளைத் துணியால் மூடி இருப்பார்கள்.
அரசனின் நீண்ட தலைமுடி தரையைக் கூட்டி கொண்டே வரும்.
சாலையின் இருமருங்கும் இந்த இறுதி யாத்திரையை மக்கள் நின்று மரியாதை செலுத்திச் செல்கிறார்கள்.
இவ்வாறு செல்லும் ஊர்வலத்திற்கு, மக்களின் முன்னால் ஒருவர் ஏதோ புரியாத மொழியில் சில வாக்குகளைச் சொல்லிக் கொண்டே செல்கிறார்.
அது இதுதான்: மக்களே! இதோ உங்கள் மன்னன் வருகிறார். இங்கே அரசனின் பெயர், தந்தையின் பெயர், நாடு இங்கே புகழ்ந்து உரைக்கப்படுகிறது.
வெகு நாட்கள் செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். இவருடைய ஆட்சிக்குக் கீழ்பட்டு பல அரசர்கள் தலைவணங்கினர். இன்று அந்த அரசர் நம்முடன் இல்லை.
அரசர் ஈட்டிய செல்வங்கள் எல்லாம் இன்று அவரை விட்டுப் பிரிந்து விட்டது. அவரிடம்
அரசும் இல்லை; ஆட்சியும் இல்லை.
இவர் ஈட்டிய செல்வங்களும், அரசும் தன்னோடு கொண்டு செல்வதில்லை. இனி இவர் எவர்மீதும் அதிகாரம் செலுத்தமாட்டார். எல்லாம் அஸ்தமித்து விட்டது.
இனி இவரது நற்புகழ் மட்டுமே உலகில் நிலைத்து நிற்கும்.
பிறந்தபோது என்ன கொண்டு வந்தாரோ அதை மட்டுமே தன்னுடன் கொண்டு செல்கிறார்.
அரசனுக்கு மட்டும் இந்த விதி என்று நினைக்காதீர்கள்.
'மக்களே! இது உங்களுக்கும் பொருந்தும். இதை அறிந்து நடந்து கொள்ளுங்கள்' என்று கூறிச் செல்கிறான்.
ஊர்வலம், பிணத்தை சுடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடத்தை அடைந்தவுடன் உடலைச் சிதையில் வைத்துக் கொளுத்தி விடுகிறார்கள்.
அரசன் இறந்தால் அதற்காக எவரும் வருந்துவதில்லை.
இறந்தவர் மீண்டும் வருவதில்லை என்பதை இங்கே நன்றாக அறிந்து வைத்துள்ளனர். இவ்வாறு அல் இத்ரீஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, இங்கே மறைந்துபட்ட ஒரு பண்டை மரபு இங்கே சுட்டப்படுகிறது.
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (1/2)
மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயினால் இறந்தால்...
வாளாற்படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்கவேண்டி, பிணத்தை வாளால் வெட்டிப்புதைத்தனர் (புறம்: 93).
பாடையைக் 'கால்கழி கட்டில்' என அக்காலத்தில் வழங்கி வந்தனர். இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி, மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என #ஒளவையார் குறிக்கிறார் (புறம்: 286)
இதை 'தூவெள்ளறுவை போர்த்தல்' எனப் புறநானூறு 291-ஆம் பாடல் சுட்டும்.
#பறைகொட்டுதல் - சாவில் பண்டு தொட்டுப் பறைகொட்டும் மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
#பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை 'பூசன் மயக்கம்' என்று குறிக்கிறது...
புலால் உண்ணாமை, உண்ணா நோன்பு ஆகிய வழக்கங்களைத் தமிழ்நாட்டிற்குள் சமணர்களே கொண்டுவந்தனர்.
அமாவாசை, பௌர்ணமி ஆகிய 'உவா', நாட்களில் பிச்சைக்கு வரும் சமண பௌத்தத் துறவிகளுக்கு முதல்நாள் உண்டு எஞ்சிய பழைய சோற்றை இடுவதில்லை.
இந்த இருநாட்களிலும் பழைய சோற்றை விலக்கும் வழக்கமும் இப்படித்தான் பிறந்தது.
இதுவே பௌத்தத் துறவிகளுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்தது.
நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும், உண்ணும்போது பேசக் கூடாது என்பன போன்ற சமணத் துறவியர்களின் வழக்கத்தை அப்பர் தம் தேவாரத்தில்...
கண்டித்திருக்கிறார்.
பழந்தமிழ்ச் சமூகம் பிற நாகரிகங்களிலிருந்து வந்த உணவு வகைகளை 'பிட்ஸாவும் கோக்கும்' போலப் போலித் தனமாக வரவு வைக்கவில்லை. மாறாகத் தன்மயமாக்கியே
எடுத்துக்கொண்டது.
புலாலை மையமிட்ட குஸ்கா, கைமா, பாயா, கோளா போன்ற உணவு வகைகள் உருது பேசிய நவாபின் படையினரோடு...
விழாக்கால உணவுகளில் குறிப்பிடத்தக்கன தைப் பொங்கலன்று சமைக்கப்பெறும் பால்பொங்கலும், படைக்கப்பெறும் கிழங்கு வகைகளும் ஆகும்.
இதுவன்றித் திருக்கார்த்திகைக்குச்
செய்யப்பெறும் அரிசிப் பொரிக்குக் 'கார்த்திகைப் பொரி' என்றே பெயர்.
சித்திரை மாதம் புதுமணப் பெண்ணுக்கு அரிசி அவலும், கருப்புக்கட்டியும் சீர்வரிசையாகத் தருவது மரபு. இவையனைத்தும் வைதீக எழுச்சிக்கு முன் உருவான வழக்கங்கள்.
'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது மார்கழித் திருவாதிரையில் (சிவனுக்குரிய நாள்மீன்) சைவர்கள் ஆக்கும் உணவாகும்.
பிள்ளையார் சதுர்த்தியில் (ஆவணி) செய்யப்பெறும் கொழுக்கட்டையும், தீபாவளிக்கான எண்ணெய்ப் பலகாரங்களும், மார்கழி 27ஆம் நாள் செய்யப்பெறும் அக்கார அடிசிலும் வைதீக எழுச்சியில் பிறந்த உணவு வகைகளாகும்.
ஆடி ‘அறுதியில்' (இறுதி நாளில்) 'புலால் சோறு' உண்பது இன்றளவும் தமிழ்நாடு...