இன்றைய நாகரிகத்தின் தாக்குதலினால் நம்முடைய பண்டையப் பண்பாடுகளும், சிறப்புகளும் அதிகமாக அழிந்துவிடாமல்,
இன்றைய தினம் தமிழகத்தில் எஞ்சி உள்ள பகுதிகளில் #தருமபுரி மாவட்டம் ஒன்றாகும்.
அம்மாவட்ட மகளிர்களால் கொண்டாடப்பட்டு, சிறுகச் சிறுகச் செல்வாக்கிழந்துவரும் ஓர் அறிய பண்டிகையாகும்.
இப்பண்டிகை, உழவர் திருநாளை உவகையுடன் தை மாதம் கொண்டாடி முடித்து உடன் நடக்கும் ஓர் பண்டிகை.
தை மாதம் ஆறாம் தேதி இரவே இப்பண்டிகை ஆரம்பித்துவிடும்.
அன்று இரவே பெண்கள் அனைவரும் விரதம் இருக்கத் தொடங்கிடுவர்.
தை ஏழாம் தேதி காலை மகளிர் தங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்தி குளித்து முடித்து மயில் பண்டிகையினை துவக்கிவிடுவர்.
இத்துவக்கத்தில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி மயிலை வணங்கத் துவங்குவர்.
அவர்கள் எப்படி எப்படி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பதை, ஓர் அழகான நாட்டுப்புறப் பாடலாக பின்வருமாறு பாடி வணங்குவர்.
இவ்வாறு அவர்களுக்கு கடுமையான விரதங்கள் விதிக்கப்படுகிறது.
பின் ஒவ்வோர் வீட்டிலும் மணக்கும் சமையல் துவங்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் இருபத்தோரு வகையான காய்கள் சமையல் செய்யப்படும்.
அன்று ஒரு நாள் மட்டும் பெண்கள் யார் தோட்டத்தில் காய்கள் இருந்தாலும், யாரையும் கேட்காமல் பறித்துக் கொள்ளலாம் என்பது இன்றளவும் வழக்கில் உள்ள ஓர் நிகழ்ச்சி ஆகும்.
சமையல் வேலை முடிந்த உடன் அனைத்துப் பெண்களும் ஓர் இடத்தில் கூடி ஓர் வெள்ளைச் சுவற்றில் மயில்களை வண்ணத்தில் வரைவர்.
சில ஊர்களில் வரைந்து வைக்கப்பட்டுள்ள வண்ணத் திரைச் சீலைகளைத் தொங்கவிடவும் செய்கின்றனர்.
இந்நிகழ்ச்சி முடிந்த உடன் கட்டு உடைப்பு (அ) பண்டிகையின் இறுதி நிகழ்ச்சிகள் துவங்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கப்பட்ட விதவிதமான காய்கறிகளுடன், சித்திரம் எழுதப்பட்ட இடத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் எனத் தனியோரப் படையல்கள் போடப்படும்.
படையல் போடுதல் முடிந்த உடன் 'கட்டு உடைப்புப் பாடல்' பாடப்படும்.
அதன்பின் ஒவ்வொரு வீட்டின் படையலில் இருந்தும் சிறிது சோறு எடுத்து, படையல் உருண்டை ஆக்கி மயிலுக்கு படையல் கூரையில் வைக்கப்படுகிறது.
இப்படையலை உண்பதற்காக மயில் ஏழு நாட்கள் உண்ணா நோன்பு இருக்குமாம்.
மயிலுக்குப் படையல் வைத்தபின் மகளிர் ஏழைகளுக்கு அன்னமிட்டபின் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் உண்டு மகிழ்வர். இப்பண்டிகையை முழுக்க முழுக்கப் பெண்களே செய்வர்.
ஒரு பெண் கட்டுப் போடப்படும் இடைக்காலத்தில் ஏதாவது மேற்சொன்ன பொருளில் ஒன்றைச் சாப்பிட்டாலும் மயில்
பண்டிகையில்...
கலந்து கொள்வதில் இருந்து நீக்கப்படுவாள்.
ஒரு பெண்ணோ அவள் குடும்பத்தைச் சேர்ந்த யாரோ, மயிலுக்குத் துன்பம் விளைவித்ததாகவோ (அ) மயில் மாமிசம் உண்டதாகவோ தெரியவந்தால் அவரும், அக்குடும்பமும் அக்குடும்பத்தின் வழிவருபவர்களும் மயில் பண்டிகையில் இருந்து விலக்கப்படுவார்கள்
குடும்பத்தில் ஒருவேளை மயில் பண்டிகை செய்யாத இருந்து,
மயில் பண்டிகை செய்யும் குடும்பத்தில் ஒரு பெண் மனைவியாக வருவாளானால்,
அவள் நாக்கிலும் கைகளிலும் கற்பூர தீபம் ஏற்றப்பட்டு, அவளைப் புனிதப்படுத்தி மயில் பண்டிகையில் சேர்த்துக் கொள்வர்.
அதேபோல் மயில் பண்டிகை செய்யும் ஓர் குடும்பத்தில் பிறந்த பெண், மயில் பண்டிகை இல்லாத குடும்பத்தில் மணமுடிக்கப்படுவாளானால்
அவள் பண்டிகைச் செய்யும் தகுதியையே இழந்து விடுவாள். இவ்வாறு மயில் பண்டிகையைச் செய்வதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
#தருமபுரி மாவட்டத்துப் பெண்டிர் இன்றும் #கொல்லாமை, #நோன்பு முதலியவற்றை எவ்வாறு கடுமையாகக் கடைபிடித்து வருகின்றனர் என்பதற்கு இது ஓர் சான்றாகும்.
அதே நேரத்தில் சிறுகச் சிறுக இப்பண்டிகை முக்கியத்துவத்தை நாளுக்குநாள் இழந்து வருகின்றது என்பதும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (2/2)
மேனாட்டார்க் குறிப்பு:
அராபியரான 'அல் இத்ரீஸ்' என்பவர் தென்னிந்தியாவில் மன்னர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்கிறார்கள்...
என்பதைப் படம் பிடித்துக்காட்டுகிறார். இவர் பொ.பி 1100- ல் பிறந்தவர்.
அல் புரூனிக்குப் பிறகு (பொ.பி 1048) தென்னிந்தியாவைப் பற்றித் தெளிவான குறிப்புக்களை வழங்கியவர்.
இவர் சிசிலிய மன்னன் ரோஜர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வரலாற்றை எழுதியவர்.
இவர் உலகப் புவியியல் வரலாற்றை 70 பாகங்களாக எழுதினார்.
உலகநாடுகள் அனைத்தையும் 20 ஆண்டுகளுக்கு மேல் நேரில் சென்று ஒரு புதினத்தைப் போல் எழுதி வைத்துள்ளார்.
இந்நூல் அரபி மொழியில் 'கிதாப் நஸ்ஸகத்துல் முஸ்தாக் பி.இக்த தாகில் அபாக்' என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.
சங்ககாலத்தில் மன்னர்கள் இறந்தால் எவ்வாறு அடக்கம் செய்தார்கள்; இறுதிச் சடங்குகள் எப்படி நடந்தது என்பதைப்பற்றி இலக்கியங்கள்வழி ஆய்கிறது இக்கட்டுரை..! (1/2)
மன்னர்கள் போரில் புண்பட்டு இறப்பதையே பெரும் பேறாகக் கருதினர். போரில் இறக்காது வீரக்கழலினையுடைய அரசர்கள் நோயினால் இறந்தால்...
வாளாற்படாத குற்றம் அவர்களிடம் இருந்து நீங்கவேண்டி, பிணத்தை வாளால் வெட்டிப்புதைத்தனர் (புறம்: 93).
பாடையைக் 'கால்கழி கட்டில்' என அக்காலத்தில் வழங்கி வந்தனர். இறந்தவர்களை இப்பாடையில் கிடத்தி, மிக வெண்மையான ஆடையைக் கொண்டு போர்த்தி விடுவார்கள் என #ஒளவையார் குறிக்கிறார் (புறம்: 286)
இதை 'தூவெள்ளறுவை போர்த்தல்' எனப் புறநானூறு 291-ஆம் பாடல் சுட்டும்.
#பறைகொட்டுதல் - சாவில் பண்டு தொட்டுப் பறைகொட்டும் மரபு இருந்ததென்பதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
#பெருந்தொகை 710-ஆம் பாடல் இதை 'பூசன் மயக்கம்' என்று குறிக்கிறது...
புலால் உண்ணாமை, உண்ணா நோன்பு ஆகிய வழக்கங்களைத் தமிழ்நாட்டிற்குள் சமணர்களே கொண்டுவந்தனர்.
அமாவாசை, பௌர்ணமி ஆகிய 'உவா', நாட்களில் பிச்சைக்கு வரும் சமண பௌத்தத் துறவிகளுக்கு முதல்நாள் உண்டு எஞ்சிய பழைய சோற்றை இடுவதில்லை.
இந்த இருநாட்களிலும் பழைய சோற்றை விலக்கும் வழக்கமும் இப்படித்தான் பிறந்தது.
இதுவே பௌத்தத் துறவிகளுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்தது.
நின்றுகொண்டுதான் உண்ண வேண்டும், உண்ணும்போது பேசக் கூடாது என்பன போன்ற சமணத் துறவியர்களின் வழக்கத்தை அப்பர் தம் தேவாரத்தில்...
கண்டித்திருக்கிறார்.
பழந்தமிழ்ச் சமூகம் பிற நாகரிகங்களிலிருந்து வந்த உணவு வகைகளை 'பிட்ஸாவும் கோக்கும்' போலப் போலித் தனமாக வரவு வைக்கவில்லை. மாறாகத் தன்மயமாக்கியே
எடுத்துக்கொண்டது.
புலாலை மையமிட்ட குஸ்கா, கைமா, பாயா, கோளா போன்ற உணவு வகைகள் உருது பேசிய நவாபின் படையினரோடு...
விழாக்கால உணவுகளில் குறிப்பிடத்தக்கன தைப் பொங்கலன்று சமைக்கப்பெறும் பால்பொங்கலும், படைக்கப்பெறும் கிழங்கு வகைகளும் ஆகும்.
இதுவன்றித் திருக்கார்த்திகைக்குச்
செய்யப்பெறும் அரிசிப் பொரிக்குக் 'கார்த்திகைப் பொரி' என்றே பெயர்.
சித்திரை மாதம் புதுமணப் பெண்ணுக்கு அரிசி அவலும், கருப்புக்கட்டியும் சீர்வரிசையாகத் தருவது மரபு. இவையனைத்தும் வைதீக எழுச்சிக்கு முன் உருவான வழக்கங்கள்.
'திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி' என்பது மார்கழித் திருவாதிரையில் (சிவனுக்குரிய நாள்மீன்) சைவர்கள் ஆக்கும் உணவாகும்.
பிள்ளையார் சதுர்த்தியில் (ஆவணி) செய்யப்பெறும் கொழுக்கட்டையும், தீபாவளிக்கான எண்ணெய்ப் பலகாரங்களும், மார்கழி 27ஆம் நாள் செய்யப்பெறும் அக்கார அடிசிலும் வைதீக எழுச்சியில் பிறந்த உணவு வகைகளாகும்.
ஆடி ‘அறுதியில்' (இறுதி நாளில்) 'புலால் சோறு' உண்பது இன்றளவும் தமிழ்நாடு...