1. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுதல்.
கூடவே கூடாது... ஏன்?
உதாரணமாக, ஒருவர், ₹40 லட்சம் கடனுக்காக ஒரு வங்கியிடம் ₹40,000 EMI செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் ஐந்து வருடங்களில் அவர் செலுத்திய EMI எதில் போய் சேர்ந்திருக்கும்?
வட்டி: ₹21,36,000 (89%)
அசல்: ₹2,64,000
வட்டி விகிதம் அதிகரிக்கின்றது. உடனே அவர் தனது வீட்டுக்கடனை 1% வட்டி குறைப்பிற்காக வேறொரு வங்கிக்கு மாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு கடனை மாற்றுவார்?
₹37,36,000 (₹40 லட்சம் - அசல் கட்டியது ₹2,64,000)
பிரச்சனை என்னவன்றால், இந்த புதிய வங்கி, இந்த கடனை
புதிய கடனாகத்தான் எடுத்துக் கொள்ளும். அதாவது அடுத்த 5 வருடங்களில், உங்கள் EMI (₹36,000 என்று வைத்துக் கொள்வோம்) எப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கும்?
வட்டி: ₹19,22,400
அசல்: ₹2,37,600
இந்த 10 வருடங்களில் நீங்கள் கட்டிய வட்டித்தொகை மட்டும் - ₹40,58,400
10 வருடங்களில் எவ்வளவு அசலை நீங்கள் கட்டியுள்ளீர்கள்? - ₹5,01,600
பிரச்சனை என்னவென்று புரிகிறதா? நீங்கள் கட்டிய வட்டி, கட்டியதுதான். கடனை pre-close செய்யும்போதோ அல்லது வேறொரு வங்கிக்கு மாற்றும்போதோ, அந்த வட்டித்தொகை அட்ஜஸ்ட் செய்யப் பட மாட்டாது.
வேறொரு வங்கிக்கு நீங்கள் மாற்றும்போது, ஏற்கனவே நீங்கள் வட்டி கட்டி முடித்த பணத்திற்கு மீண்டும் மீண்டும் நீங்கள் வட்டியை காட்டுவீர்கள். அதுதான் நிதர்சனம்.
ஆகையால் தான் சொல்கிறேன், வட்டி குறைக்கிறேன் என்று வேறொரு வங்கிக்கு உங்கள் கடனை மாற்றுவது is not a financially right solution.
வட்டி ஏறுது, EMI ஏறுது, நாங்க என்னதான் பண்ணுறது ன்னு கேக்கலாம்.
1. கையில சேமிப்பு இருந்தா, அதுல ஒரு ₹2/₹3 லட்சம் part-payment பண்ணலாம். 2. EMI அதிகரிக்க முடிந்தால் அதிகரிக்கலாம். 3. வருடா வருடம் உங்களுக்கு வரும் போனஸ் தொகையினை கூடுதலாக கட்டிக்கொண்டு வரலாம்.
இந்த மாதிரி செய்து வந்தால், வீட்டுக்கடன் வட்டி ஏறினாலும், அதனால் ஏற்படும் impact உங்களுக்கு nullify ஆகிவிடும்.
எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களை பகிறுகிறேன். I may be wrong. Correct me if I am. Happy to take your feedback.
வங்கிகளுக்குத் தான் அது asset. ஏனென்றால், அவர்கள் கொடுத்த கடனுக்கு வட்டி வருமானம் ஈட்டிக் கொடுப்பதினால்.
₹50 லட்சம் வீட்டுக் கடன் எடுத்து ஒருவர் வீடு வாங்கியிருக்கிறேன் என்று சொன்னால் அது சரியல்ல.
அவர் வீடு வாங்கவில்லை. கடன் வாங்கியிருக்கிறார். அவ்வளவே.
அதுவே, ஒரு வீட்டை கடனில் ஒருவர் வாங்கி, அது அவருக்கு மாதா மாதம் காட்டுகிற EMI + சொத்துவரி + Maintenance இவற்றைவிட அதிகமாக வாடகை வருமானம் ஈட்டித் தந்தால், அப்பொழுது அது Asset வகையில் சேரும்.
ஆனால் வாடகை வருமானம் எப்பொழுதுமே நாம் கட்டும் EMI யில் 1/3 தான் இருக்கும். அதுதான் உண்மை.
பயன்பெறுபவை: 1. Battery electric vehicles (BEV), 2. Plug-in electric vehicles (PEV), 3. Plug-in hybrid electric vehicles (PHEV), 4. Strong hybrid electric vehicles (SHEV)
யாருக்காக: 1. OEM நிறுவனங்கள் - FAME II வழிமுறைப்படி, வாகனம் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்பவர்கள்.
2. உபயோகித்த பாட்டரிகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள். 3. சார்ஜிங் நிலையங்கள் - Public, Private, Fast & Slow charging stations. 4. பாட்டரி மாற்று நிலையங்கள் - Battery Swapping Stations. 5. மின்சார வாகன நிறுவனங்கள்/நிலையங்களின் அசையாச் சொத்துக்கள்.
1. வருமானம் வேணும்ன்னு GST வரியை ஏத்துறாங்க. 2. Input costs கூடிப்போச்சுன்னு விலையை ஏத்துறான். 3. என்ன விலை ஏறினாலும் வாங்கியே ஆகனும்ங்கிற நிலைமைக்கு மிடில் கிளாஸ் மக்கள் தள்ளப் படுகிறார்கள். 4. விலைவாசி ஏறினா பணவீக்கம் ஏறிடும். 5. பணவீக்கம் ஏறுதுன்னு வட்டியை ஏத்துறானுங்க.
6. வட்டி ஏறிட்டா, எல்லா வங்கிகளும் கடன் வட்டியை உடனே ஏத்துறாங்க. 7. கடன் வட்டி ஏறிட்டா EMI ஏறிடுது. 8. EMI ஏறுற அளவுக்கு மிடில் கிளாஸ்சுக்கு சம்பளம் எற மாட்டேங்கிது. 9. சம்பளம் பத்தலைன்னு மேலும் கடன் வாங்க நேறிடுது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு மற்றும் நிலையான வருமானம் தரும் வழிகள்.
இவை அனைத்துமே, ஒன்றிய அரசால் guarantee செய்யப்பட்டவை. முதலீடுகளுக்கு 100% பாதுகாப்பு.
உங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையங்களில் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க: ...
Senior Citizen Savings Scheme (SCSS)
முதலீடுகளின் உச்ச வரம்பு ₹30 லட்சம். ஒரு குடும்பத்தில் (கணவனும், மனைவியும்) சேர்ந்து அதிகபட்சமாக ₹60 லட்சம் முதலீடு செய்யலாம்.
5+3 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வருமானம் கிடைக்கும்.
Post Office Monthly Income Scheme (POMIS)
முதலீடுகளின் உச்ச வரம்பு ₹9 லட்சம். ஒரு குடும்பத்தில் (கணவனும், மனைவியும்) சேர்ந்து அதிகபட்சமாக ₹18 லட்சம் முதலீடு செய்யலாம்.
5 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். மாதத்திற்கு ஒருமுறை வட்டி வருமானம் கிடைக்கும்.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் 40 வயதிற்கு மேலே நீங்கள் தொடங்கும் போது, அதிக வருமானத்தை விட 'அதிகமாக சேமிப்பதில்' தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. என்ன இவ்வளவு சுலபமா என்கிற ஐயம் எழுகிறதா? தொடர்ந்து படியுங்கள்.
நம்மில் பலர் 40 வயதை எட்டும் வரை முதலீடுகளையும் சேமிப்பையும் தள்ளிப்போடுகிறோம். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும். அது அவரவர் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தது. 40 வயதை அடையும்போது கொஞ்சம் பயமும் சேர்ந்து விடுகிறது. ஐயையோ, நாம் நமது வாழ்க்கைக்கு தேவையான அளவு சேமிக்கவில்லையே என்று.