ஓபிஎஸ் தீர்ப்பு - முக்குலத்தோர் முதுகில் குத்திய பாஜக! #ADMK #ops#eps
ஓபிஎஸ் - இபிஎஸ் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இது அதிமுக தலைமைகளுக்கிடையில் நடந்த சண்டையாக தெரியலாம். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய இடைநிலை சாதிகளான 1/n
கவுண்டர் - முக்குலத்தோருக்கு இடையே நடந்த அதிகார போட்டியே இது.
இப்பொழுது வந்திருப்பது நீதிமன்ற தீர்ப்பென்றாலும் பாஜக வின் அரசியல் லாப-நட்ட கணக்கின் அடிப்படையில் தான் தீர்ப்புகள் செல்லப்படுகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே.
2/n
ஆக, கவுண்டர் - முக்குலத்தோர் சண்டையில் பாஜக கவுண்டர்கள் ஜெயிக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்திருக்கிறது. ஏன் பாஜக முக்குலத்தோரை கை கழுவ வேண்டும்?
கவுண்டர்களையும் முக்குலத்தோரையும் அவர்களின் நிலம், வரலாறு, பொருளியல் சார்ந்து பார்த்தால் எவ்வளவு தந்திரமாக
3/n
பாஜக முக்குலத்தோரை ஏமாற்றி இருக்கிறது என்று புரியும்.
வரலாற்று ரீதியாக பார்த்தால் மூவேந்தர்களுள் சோழர் மற்றும் பாண்டியர்களின் ஆளுகையில் முக்குலத்தோர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். விசயநகர ஆட்சியிலும் இதுதான் நிலைமை. அதனால் இங்கு வாழந்த் முக்குலத்தோர், வெள்ளாளர்,
4/n
நாயக்கர்கள் சமூகங்கள் செழுமையாய் இருந்தன.
கொங்கு பகுதியை எடுத்துக் கொண்டால் சங்க கால சேரர்கள் வலிமையாய் இருந்திருந்தாலும் இடைக்காலத்தில் சமஸ்கிருத கலப்பாலும் மலையாளம் பிரிந்து சென்றதாலும் சோழ, பாண்டிய பேரரசுகளை போல் சேர பேரரசு எதுவும் உருவாகவில்லை!
5/n
பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் டெல்டா பகுதிகளில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெற் பயிருக்கு இணையாக கொங்கு பகுதிகளில் ஏற்றுமதிக்காக பருத்தி பயிரிடப்பட்டு பல டெக்ஸ்டைல் மில் கள் முளைக்கின்றன. மில் லில் எந்திரங்கள் பழுதாகவே அதை சரி செய்ய சிறுசிறு பட்டறைகள் உருவாகி கோவை பகுதி
6/n
நாளடைவில் மதராஸ் மாகாணத்தின் மிகப் பெரிய உற்பத்தி நகரமாக மாறுகிறது. இதனால் தான் திருப்பூர்,கோவை,ஈரோடு,கரூர் பகுதிகள் அனைத்துமே டெக்ஸ்டைல் துறையில் கொடி கட்டிப் பறக்கின்றன. இந்த பகுதியில் வாழும் மக்கள் குறிப்பாக கவுண்டர், நாயுடு சமுதாயங்களில் பல பெரு முதலாளிகள் உருவாகினார்கள்.
7/n
முக்குலத்தோர் பரவிக்கிடக்கும் பகுதிகளில் இப்படியான சூழ்நிலை எதுவும் இல்லாத காரணத்தாலும் மானாவாரி நிலங்கள் அதிகமுள்ளதாலும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய இடைநிலை சாதியாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் சந்தித்த பஞ்சத்தை பார்த்து தான் பென்னி குவிக்
8/n
முல்லை பெரியாறு அணையை கட்டியது வரலாறு. பஞ்சத்தினால் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் அவர்கள் இலங்கைக்கு தேயிலை பறிக்க அழைத்து செல்லப்பட்டனர். தென் கிழக்கு நாடுகளில் பரவிக் கிடக்கும் தமிழர்களில் முக்குலத்தோர் அதிகம் இருப்பதே இதற்கு சான்று. 9/n
உற்பத்தியோ உபரியோ சேர வழியே இல்லாததால் முக்குலத்தோர் சமுதாயத்தில் சொல்லிக் கொள்ளும் படியான பெரு முதலாளிகள் உருவாகவில்லை.
திராவிட பெருந்தலைவர்களின் காலம் முடிந்து தமிழக அரசியலில் தலைமைக்காக அடுத்த தலைமுறை அதிகார போட்டி இப்பொழுது உச்சத்தை எட்டி இருக்கிறது.
10/n
அழகிரியை பின்னால் தள்ளி ஸ்டாலின் நிலைத்துவிட்டார் திமுக வில். எதிர் தலைமையாக யார் இருக்க போகிறார்கள் என்ற போட்டியின் முடிவில் தான் எந்தவித பெரிய பொருளாதார பின்னனி அல்லது பெரு முதலாளிகள் இல்லாத முக்குலத்து சமூகத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டு
11/n
பெரும் பொருளாதார பின்னனியும், பெரு முதலாளிகள் பலருமுள்ள கொங்கு பகுதியின் பெரும்பான்மை இடைநிலை சாதியான கவுண்டர் சாதியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்துள்ளது பாஜக.
இன்னொரு முக்கியமான விடயம் பாஜக தலைவர் அண்ணாமலையும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்.
12/n
ஆக, இவ்வளவு காலமும் பாஜக பின்னால் வந்த ஓபிஎஸ் சையும் அவர் சார்ந்த முக்குலத்து சமுதாயத்தையும் முதுகில் குத்தி நடுத்தெருவில் விட்டுள்ளது பாஜக. முக்குலத்து சமுதாயத்தை சேர்ந்த சசிகலாவையும் நம்ப வைத்து ஏமாற்றியது நினைவிருக்கலாம்.
13/n
இப்பொழுது மட்டுமல்ல வரலாற்று ரீதியாகவே இந்துத்துவ அரசியல் முக்குலத்தோருக்கு எதிராகத் தான் இருந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நேதாஜி படை திரட்டி பிரிட்டீஷ் காரர்களுக்கு எதிராக சண்டையிட்ட போது முக்குலத்தோர் அதிகமிருந்த நேதாஜி படைக்கு எதிராக
14/n
பிரிட்டீஷ் காரர்களுக்கு ஆதரவாய் படை திரட்டி ஆர்.எஸ்.எஸ் சின் தாய் அமைப்பான இந்து மகா சபா, முக்குலத்தோரை முதுகில் குத்தியது வரலாறு. இதைப்பற்றி தோழர் திருமுருகன் காந்தி ஒரு காணொளியில் விரிவாக பேசி இருப்பார்.
அடுத்து கவனிக்கபட வேண்டியது இரு சமுதாயங்களின் தேவைகள் தான்.
15/n
கவுண்டர் சமுதாயம் தொழிற்துறையில் முன்னேறிய சமூகம் என்பதால் தொழில் முன்னேற்றத்திற்காக பல உதவிகளை அவர்களுக்கு செய்யும். அதற்கு கைமாறாக அவர்களும் பெருமளவில் பாஜக வுக்கு நன்கொடை கொடுத்து உதவுவார்கள். முக்குலத்தோரை பொருத்தவரை பாஜக வுக்கு எந்த சிரமமும் இருக்காது.
16/n
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை வைத்துவிட்டால் இன்னுமொரு 20 ஆண்டுகளுக்கு பாஜக எவ்வளவு ஏமாற்றினாலும் எந்த கவலையுமின்றி அடியாள் வேலை பார்த்துக் கொண்டிருப்பர்.
உதாரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மலா சீதாராமன் கோவை வந்தபோது
17/n
தமிழ்நாட்டில் அமையவிருக்கும் டிபன்ஸ் காரிடார்(Defense corridor) மூலம் வரும் தொழில் வாய்ப்புகளை கோவையை சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று சந்தித்து பேசியுள்ளனர்.(எப்படியும் முக்கியமான வேலைகள் மார்வாடிகளுக்கு தான் கொடுப்பார்கள்.
18/n
அது போக சில்லறை வேலைகளை தான் கவுண்டர்களுக்கு கொடுக்கப்போகிறது பாஜக)
ஆனால் முக்குலத்து சமுதாயம் சமீபத்தில் நடத்திய மிகப்பெரிய அரசியல் நகர்வு மதுரை விமானநிலைய பெயருக்காக பேரணி நடத்தியது தான்.
19/n
அரசியல் தலைமையற்ற, பொருளாதார பலமில்லாத முக்குலத்தோர் தான் தென் தமிழ்நாட்டின் பிரதான இடைநிலை சாதி. வரலாற்று ரீதியாக அவர்களுக்கு துரோகம் செய்யும் இந்துத்துவ பாஜக இதோ மீண்டுமொரு துரோகத்தை நிகழ்த்தி ஓபிஎஸ் சையும், சசிகலாவையும் அப்புறப்படுத்தி
20/n
அடுத்த 20 வருடங்களுக்கு தமிழ்நாட்டு அரசியலில் முக்குலத்தோர் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்துள்ள இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ், பாஜக பின்னர் செல்வதை முக்குலத்து இளைஞர்கள் இனியாவது நிறுத்த வேண்டும்.
n/n
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திமுக ஐடி விங்கின் தோல்வியும் பாஜக வின் வளர்ச்சியும்!
2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து இதற்கு காராணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஸ்டாலின். 1/n
முகம் தெரியாத பலர் சமூக வலைதளங்கள் மூலம் அதிமுக/பாஜக வுக்கு நெருக்கடி ஏற்படுத்தியதை(திமுகவுக்கு அது சாதகமாய் அமைந்ததை) குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.எந்தக் கட்சியும் சாராது சமூக வலைதளங்களில் உள்ள சாமானியர்கள் பாஜகவின் அடிமை அதிமுகவை எப்படியேனும் துரத்தி விட வேண்டும் 2/n
என்ற முடிவில் தமிழ்நாட்டு சமூக ஊடகம் முழுவதும் பாஜக/அதிமுக எதிர்ப்பை மையப்படுத்தி செயல்பட்டனர். ஆனால் சந்தடிசாக்கில் எந்த உழைப்பையும் செலுத்தாது திமுக வெற்றி பெற செய்த மொத்த சமூக ஊடக பிரச்சாரமும் தாங்கள் தான் செய்தோம் என்கிற பரப்புரையை உருவாக்கி உதயநிதி ஸ்டாலினை
3/n
திமுக இலங்கையில் நடந்த போரை நிறுத்தவில்லைனு திருமுருகன் காந்தியோ மே 17 இயக்கமோ சொல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் இரண்டு அரசியல் கும்பல் தொடர்ந்து பேசி வருகிறது.
1. நாம் தமிழர்/சங்கிகள் 2. 2.0 கிறுக்கர் கும்பல்.
1/n
இப்படி அவதூறை வைப்பதால் இவர்களுக்கு என்ன லாபம்?
ஈழம் தொடர்பான விடயத்தில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் இனப்படுகொலை நடந்திருக்கும் என்பதே மே 17 இயக்க நிலைப்பாடு.
2/n
காரணம் கட்சிகள் தாண்டி சர்வதேச நாடுகளின் பொருளாதார நலன் சார்ந்த கொள்கைகளும் அதை அச்செடுத்து வைத்திருக்கும் இந்திய பார்ப்பனிய வெளியுறவுக் கொள்கையும் தான் போரை நடத்தியது.
3/n