#சமயபுரம்_மாரியம்மன்
தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். திருச்சிக்கு வடக்கே காவிரியின் வடகரையிலிருந்து சுமார் 15கிமீ தூரத்திலுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோவில் இதிகாச, புராண காலத்தில் உருவானதாக கூறப்பட்டாலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு
முன்பாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இதன் மூல கோவிலான ஆதி மாரியம்மன் கோவில் விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட திருத்தலம் என்ற பெருமைக்குரியது. தற்போது உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தோற்றுவிக்கப் பட்டது. சமயபுரம்
மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப் படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடம். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை
அழிந்து வேம்புக்காடாக மாறி, பின் அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப் படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின்
சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்து விட்டுச் சென்றனர். அப்போது,
காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு #கண்ணனூர்_மாரியம்மன் என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டனர்
அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் 1706-ல் அம்மனுக்கு தனியாக கோயில் அமைத்தார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்
தோற்றுவிக்கப் பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, #சமயபுரம்மாரியம்மன் கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது. மூலவரான மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி
இருக்கிறார். பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் (தெப்பக்குளம்) இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும். கோவிலில் உள்ள மாரியம்மன் உற்சவர் சிலை விஜயநகரத்து மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டது ஆகும். விஜயநகர பேரரசிற்கு ஆபத்து ஏற்பட்டபோது
உற்சவர் அம்மன் சிலையை பல்லக்கில் தூக்கி வந்தனராம். பல்லக்கை தூக்கி வந்தவர்கள் அந்த காலத்தில் வேம்பு மரங்கள் வளர்ந்த அடர்காடாக காட்சியளித்த சமயபுரத்தில் இறக்கி வைத்துவிட்டு உணவு உண்டனர். உணவு உண்ட பின் பல்லக்கை தூக்க முற்பட்டபோது தூக்க முடியாமல் போனதால் அங்கேயே விட்டு விட்டு
சென்றிருக்கின்றனர். பின்னர் பொ.யு 1706 முதல் 1732 வரை திருச்சி பகுதியை ஆண்ட விஜயரெங்க சொக்கநாதர் காலத்தில் அம்மனுக்கு தனி கோவில் அமைத்து பிரதிஷ்டை செய்தார்கள். அதுவே நாம் இப்போது வழிபட்டு வரும் சமயபுரம் மாரியம்மன் கோவில் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. வேப்ப மர காட்டில் உருவான
கோவில் என்பதால் தான் இப்போதும் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் வேப்பமரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத்
தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அம்மன் மிக வரப்பிரசாதி. சமயத்தில்
வந்துதவும் அம்மன் என்பதால் சமயபுரம் அம்மன் எனவும் வழங்கப்படுகிறாள்.
ஓம் சக்தி!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நற்சிந்தனை கபிலபுரத்தில், சங்கமன் என்ற வியாபாரி இருந்தான். வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிப்பவன். அவனது மனைவி நீலி. கணவன் சொல் தட்டாத பதிவிரதை. அருகிலுள்ள சிங்கபுரம் என்ற ஊருக்கு வியாபாரிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை இருந்தது. சங்கமன் அங்கு வியாபாரத்திற்கு சென்ற போது, போட்டி
வியாபாரியான பரதன் பார்த்தான். அரசரிடம் சென்று, சங்கமன் என்ற ஒற்றன் கபிலபுரத்திலிருந்து வேவு பார்க்க வந்துள்ளான். அவனைப் பிடியுங்கள், என்றான். அரசனும் விசாரியாமல், சங்கமனைக் கொன்று விட்டான். நீலிக்கு அதிர்ச்சி. புலம்பியழுதாள். நீதி தவறி யார் எனக்கு துன்பம் செய்தார்களோ, அவர்கள்
அடுத்த பிறவியில் இதே துன்பத்தை அடைவார்களாக! என சாபமிட்டு இறந்து போனாள். மறுபிறப்பில் சங்கமனின் மரணத்துக்கு காரணமான பரதன் கோவலனாகவும், அவன் மனைவி கண்ணகியாகவும் பிறந்தனர். கோவலன் கொல்லப்பட்டான். கண்ணகி தத்தளித்தாள். தவறாகத் தீர்ப்பளித்த மன்னன் நெடுஞ்செழியனாகவும், அவன் மனைவி
#FoodForThought a Krishna devotee, a very poor girl went to Dwaraka to see Krishna. She told Him, I just want to do your bidding, nothing else gives me happiness, please tell me what I should do for you. Krishna immediately gave her a heavy old sack and told her you carry this
with me wherever I go. The sack will not be visible to anyone else. The girl did not expect this. She thought He will ask her to do something else. But she did what He told her, though grumbling all the way, as the sack was heavy. Sometimes Krishna helped her carry it when she
was too tired to do so. Then one
fine day Krishna told her, you can now unburden the sack and open and see what is inside. He Himself opened it for her which was filled with gold and diamonds. For being patient all this time, this is my gift to you, He said smilingly. With tears
#வடசென்னிமலை_பாலசுப்பிரமணியசாமி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஸ்ரீ முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகன் என்றாலே மலை மீது அமர்ந்து அருள்பாலிப்பவர். கோயில் 500 - 1000 வருடம் பழமையானது. முருகன் தண்டாயுதபாணியாகவும், சிறுவனாகவும், தம்பதி சமேதராகவும் என 3 வடிவங்களில் காட்சி தருகிறார்.
இந்த ஆலயம் குழந்தை வரம் அருளும் திருத்தலமாக விளங்குகிறது. மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லும் வழியில், மலை அடிவாரத்தில் வரசக்தி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வணங்கி விட்டுதான், நாம் மலை மீது ஏற வேண்டும். முன்னதாக நம்மை வரவேற்கும் விதமாக, மலை அடிவாரத்தில் வடசென்னிமலை கோவிலுக்கான
நுழைவு வாசல் வளைவு இருக்கிறது. இதன் பின்புறத்தில் வட சென்னிமலையின் அழகிய தோற்றத்தை காணலாம். வரசக்தி விநாயகரை தரிசித்து விட்டு, படிக்கட்டுகள் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்லலாம். சாலைமார்க்கமாக செல்லும் போது 5க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி
Dr Anand Ranganathan explains how we celebrate people who killed and converted thousands of Hindus. Listen to the speech, it is extraordinary. A true eye opener for us to realise our mistakes and change the coming future in the right direction. It is 13 minutes long but do listen
Babar Road still exists in an important place in Delhi who butchered Hindus.
#நீடாமங்கலம்_ஸ்ரீசந்தான_ராமசாமி ஆலயம்.
பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர் அர்ச்சாவதார திருக்கோலத்தில் சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம்
காட்சி தருகிறார். பக்தர்களுக்கு சந்தானப் பிராப்தியை அளிப்பதால் இவர் சந்தானராமன்.
தீர்த்தம்: சாகேத புஷ்கரணி ஆலயத்தின் எதிரிலேயே உள்ளது. தஞ்சையை ஆண்ட #சரபோஜிமன்னர் தன் மனைவி #யமுனாம்பாளுடன் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாளை அணுகி ராமநாம தீட்சை பெற்றார். அவர்கள் இருவரும் சதாசர்வ
காலமும் ராம நாமத்தை ஜபித்து வந்தனர். யமுனாம்பாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது இவ்வூரில் அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்த மாமரத்தில் இரண்டறக் கலந்துவிட்டார். அவர்கள் வழியில் வந்த பிற்கால மன்னர்கள் அம்மரத்தையே இறைவனாகத் தம் வம்சங்களில் புத்திர தோஷம் நீங்க வழிபட்டனர்.
2023 மார்ச் 6/7 #மாசிபௌர்ணமி
கஜேந்திர மோக்ஷம் மாசி பௌர்ணமியுடன் தொடர்புடையது. மதுரை மாநகருக்கு அருகில் உள்ள திருமோகூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மாசிப் பெளர்ணமி அன்று இத்திருக்கோயிலில் கஜேந்திர மோக்ஷம் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. கஜேந்திர மோக்ஷம் நிகழ்வைக் கதையாகக்
கேட்டால், பகவான் மோக்ஷ சித்தியை அளிப்பார் என்பது ஐதீகம். கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகள், குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது. அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள்
பயந்து ஓட, மற்ற சிறிய மிருகங்களான மான், முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டு இருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது. உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத் தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து