ஒருவரது ஜென்ம நட்சத்திர தினத்தன்று திருமணம், சீமந்தம், காது குத்துதல், முடி இறக்குதல், எண்ணை குளியல், மருந்து சாப்பிடுவது, அறுவை சிகிச்சை செய்தல், தாம்பத்திய உறவு போன்றவற்றை வைத்துக் கொள்ளக் கூடாது.
அதற்கு பதில் இதர சுப காரியங்கள் செய்ய வேண்டும்.
அதாவது குல தெய்வ வழிபாடு,இஷ்ட தெய்வ வழிபாடு, அன்னதானம், தான தர்மம் செய்தல், பதவி ஏற்பு, சொத்துக்கள் வாங்குதல் போன்றவற்றை
செய்யலாம்.
குறிப்பாக ஆலய வழிபாட்டுக்குமிக உகந்த தினமாக
ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து
பிரிந்து மாங்காட்டில் தவம்
இருந்த பார்வதி தேவி,
இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது.
இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஜென்ம
நட்சத்திரம் எந்த தேதியில்
வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு
வேலை இருந்தாலும்
சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை
சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.
27 நட்சத்திரங்களும் பெண் தேவதைகளாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது.
நாம் நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யும் போது,
அந்த நட்சத்திரத்துக்குரிய பெண்
தேவதை மனம் குளிர்ந்து உங்களுக்கு ஆற்றலை அள்ளி, அள்ளி தருவாள்.
ஆலய வழிபாட்டின் போது கருவறை மூலவர் முன் நிற்கும் போது ஒரு நிமிடம் நாம்மனதை ஒருமுகப் படுத்தி வழிபடுவோம்.
அந்த சமயத்தில் நமது ஜென்ம நட்சத்திரத்தையும்
மனதில் நினைத்துக்
கொள்வது நல்லது.
சிலருக்கு அவர்களது ஜென்ம நட்சத்திரம் தெரியாமல் இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்கள் அவர்கள் பெயர் ராசிக்கு உரிய நட்சத்திரத்தின் தேவதையை வழிபடலாம்.
ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் அவரை கண் திருஷ்டி நெருங்காது.
தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது.
வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால்
கூடுதல் பலனை பெற முடியும்.
ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப் படும் வழிபாட்டால்,
எந்த ஒரு தெய்வமும் அருள்
செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.
ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான்.
எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு
போதும் தவற விட்டு விடாதீர்கள்.
குறைந்த பட்சம் ஆலயத்தில்
ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று,
எந்த கடவுளை வழிபட
வேண்டும் என்று தெரிந்து
வைத்து கொண்டு வழிபாடு
செய்தால் கர்ம வினைகள்
தீரும் என்பது குறிபிடத் தக்கது.
ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.
நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள்.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.
முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
*அர்ச்சனையில் வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம் கண்டிப்பாக பயன்படுத்துவது ஏன்?*
கோவிலுக்கு கொண்டு செல்லும் பூஜை பொருட்களில் நமது வசதிக்கு ஏற்றபடி எத்தனையோ பொருட்களை எடுத்துச் செல்கிறோம்.
இவற்றில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை - பாக்கிற்கு முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்வதற்கு எதுமே இல்லை என்றாலும் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து பூஜையை நிறைவு செய்து விடலாம்.
அப்படி இந்த 3 பொருட்களுக்கு என்ன சிறப்பு உள்ளது, எதற்காக இந்த 3 பொருட்கள் கண்டிப்பாக அர்ச்சனைக்கு கொண்டு செல்கிறோம், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
கருட பட்சிகள் மோட்சம் பெற்ற நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம்:
கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.
இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.
இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.
*மார்பில் சிவலிங்கம் தாங்கிய 16 அடி உயர ஆஞ்சநேயர்- துன்பங்களை தீர்க்கும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர்*
சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார்.
*திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.*
அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது.
அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது.
அதைச் சாப்பிட்ட கேசரி அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
ராமனை காப்பாற்ற வேண்டிய ராமனை 14 ஆண்டு வனவாசம் அனுப்பிய கைகேயி.
தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி.
இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.
இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில்
பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்.
விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி,
ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை சூரியோதய வேளையில் ஒரு கிண்ணம் அல்லது அகன்ற பாத்திரத்தில் சுத்தமான நீர் எடுத்துக் கொண்டு
சூரிய வெளிச்சம் தன் மேல் படும்படிக் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.
அந்தப் பாத்திரத்தில் தெரியும் தன் முகத்தைப் பார்த்தபடியே "#ஓம்_ஹ்ரீம்_சூர்யாய_நமஹ" என்று 108 தடவை ஜெபிக்கவும்.
ஜபத்திற்கு எந்த மாலையையும் பயன்படுத்தலாம்.
அதன் பின்னர் வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர அருள் செய்யுமாறு சூரிய பகவானை வேண்டிய பின் அந்த நீரை ஏதேனும் மரம் அல்லது செடியின் வேர் பாகத்தில் ஊற்றி விடவும். (அரச மர வேரில் ஊற்றினால் மிகவும் சிறப்பு).