செப்டம்பர் 1, 2014 தேதியன்று நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராக இருந்திருந்தால், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியம் (ஓய்வு பெற்ற பிறகு) பெறுவதற்கு உங்கள் நிறுவனம் உங்களுக்கு அதற்கான தெரிவை தெரிவிக்க சொல்லியிருப்பார்கள்.
மாதா மாதம் உங்களுக்கு PF தொகை (நிறுவனத்தின் contribution - 12% of Basic) உங்கள் நிறுவனம் செலுத்தும் அல்லவா? நிறுவனம் செலுத்தும் தொகையை நீங்கள் கவனித்து இருந்தீர்களானால், அது உங்களின் contribution ஐ விட சற்றே குறைவாக இருக்கும்
ஏனென்றால், நிறுவனம் செலுத்தும் தொகை இரண்டு பிரிவாக செலுத்தப்படும்.
EPF - Employee Provident Fund
EPS - Employee Pension Scheme
இதில் EPS க்கு செலுத்தும் தொகை எப்பொழுதுமே ஒரே தொகையாக இருக்கும் (8.33% of ₹15,000 = ₹1,250). ஏனென்றால், இதுவரை, இதன் சம்பள உச்சவரம்பு ₹15,000 ஆக
இருந்தது. அதாவது, உங்களது basic component எத்தனை லட்சமாக இருந்தாலும், உங்கள் நிறுவனத்தின் EPS contribution, எப்பொழுதுமே ₹1,250 தான்.
உதாரணம்: படத்தில் காண்க
தற்பொழுது, பல்வேறு இயக்கங்கள் இந்த ₹15,000 உச்சவரம்பை உயர்த்திக் கொடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக, அவர்களுக்கு
சாதகமாக தீர்ப்பு அளிக்கப் பட்டது. அதாவது, புதிய தீர்ப்பின் படி, ₹15,000 உச்சவரம்பு அறவே நீக்கப் பட்டாசு. தற்பொழுது, உங்கள் basic salary யில் 8.33%, நீங்கள் விருப்பப்பட்டால், உங்கள் நிறுவனம் அந்த தொகையை EPS கணக்கில் செலுத்தும்.
ஆஹா, சூப்பர். higher contribution from company
என்று நீங்கள் துள்ளி குதிக்கும் முன்னர், இந்த calculation ஐ பாருங்கள் (படம்).
உங்களது contribution லோ அல்லது உங்கள் நிறுவனத்தின் மொத்த contribution லோ எந்தவொரு மாற்றமும் இல்லை.
ஆனால், உங்கள் நிறுவனம் செலுத்தும் தொகையின் split (EPS/EPF share) மாறுபடும். அவ்வளவே.
இதனால், என்னென்ன நன்மை/தீமைகள்?
ஓய்வுக்குப் பின்னர் உங்களுக்கு வரும்
1. பென்ஷன் தொகை அதிகரிக்கும். உங்களுக்குத் பின்னர், உங்கள் கணவன்/மனைவிக்கும்/குழந்தைகளுக்கும் பென்ஷன் வழங்கப்படும். (நன்மை) 2. EPF corpus வெகுவாக குறையும் (தீமை) 3. EPS உங்களால் withdraw செய்ய முடியாது.(தீமை)
மேலே சொன்ன calculation ஐ உங்களது சம்பளத்தில் போட்டு பார்த்து எவ்வளவு பென்ஷன் உங்களுக்கு வருமென்று பாருங்கள்.
மிக முக்கியமான ஒன்று, இந்த பென்ஷன், மார்க்கெட் நிலவரப்படி ஏறி/இறங்காது.
சந்தை எப்படி போனாலும், உங்களுக்குரிய பென்ஷன், குறைவில்லாமல் வழங்கப்படும். அது ஒரு பெரிய நன்மை.
மேலும், உங்களுக்குத் பிறகு உங்கள் மனைவி/கணவனுக்கும் (50%) உங்கள் இருவருக்குப் பின் உங்கள் குழந்தைகளுக்கும் (25 வயது வரை) (25%) வழங்கப்படும். இது, இன்னொரு நன்மை.
அதே, நீங்கள் EPS க்கு அதிகமாக contribute செய்யாமல் இருந்தால், உங்களது EPF corpus அதிகமாக வரும். நீங்கள் அதனை 100% withdraw செய்யலாம், நல்ல வாய்ப்புகளில் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலே அனைத்து நன்மை/தீமைகளையும் பட்டியலிட்டுள்ளேன். அதனை ஆராய்ந்து, உங்களுக்கு/உங்கள் குடும்பத்திற்கு எது சிறந்ததோ, அதனை தேர்ந்தெடுங்கள்.
நானாக இருந்தால், அதிக EPS பங்களிப்பு தேர்வு செய்ய மாட்டேன். ஏனெனில், அதிக EPF கார்பஸ் தான் எனக்கு நன்மை. எனக்கு நிறைய தேர்வுகளைத் தருகிறது.
மேலும் சந்தேகங்கள் இருந்தால், TL ல் கேட்கவும். உங்கள் கேள்வியும், அதற்கான எனது பதிலும் அனைவருக்கும் பயன்படட்டும்.
வங்கிகளுக்குத் தான் அது asset. ஏனென்றால், அவர்கள் கொடுத்த கடனுக்கு வட்டி வருமானம் ஈட்டிக் கொடுப்பதினால்.
₹50 லட்சம் வீட்டுக் கடன் எடுத்து ஒருவர் வீடு வாங்கியிருக்கிறேன் என்று சொன்னால் அது சரியல்ல.
அவர் வீடு வாங்கவில்லை. கடன் வாங்கியிருக்கிறார். அவ்வளவே.
அதுவே, ஒரு வீட்டை கடனில் ஒருவர் வாங்கி, அது அவருக்கு மாதா மாதம் காட்டுகிற EMI + சொத்துவரி + Maintenance இவற்றைவிட அதிகமாக வாடகை வருமானம் ஈட்டித் தந்தால், அப்பொழுது அது Asset வகையில் சேரும்.
ஆனால் வாடகை வருமானம் எப்பொழுதுமே நாம் கட்டும் EMI யில் 1/3 தான் இருக்கும். அதுதான் உண்மை.
1. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுதல்.
கூடவே கூடாது... ஏன்?
உதாரணமாக, ஒருவர், ₹40 லட்சம் கடனுக்காக ஒரு வங்கியிடம் ₹40,000 EMI செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் ஐந்து வருடங்களில் அவர் செலுத்திய EMI எதில் போய் சேர்ந்திருக்கும்?
வட்டி: ₹21,36,000 (89%)
அசல்: ₹2,64,000
வட்டி விகிதம் அதிகரிக்கின்றது. உடனே அவர் தனது வீட்டுக்கடனை 1% வட்டி குறைப்பிற்காக வேறொரு வங்கிக்கு மாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு கடனை மாற்றுவார்?
பயன்பெறுபவை: 1. Battery electric vehicles (BEV), 2. Plug-in electric vehicles (PEV), 3. Plug-in hybrid electric vehicles (PHEV), 4. Strong hybrid electric vehicles (SHEV)
யாருக்காக: 1. OEM நிறுவனங்கள் - FAME II வழிமுறைப்படி, வாகனம் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்பவர்கள்.
2. உபயோகித்த பாட்டரிகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள். 3. சார்ஜிங் நிலையங்கள் - Public, Private, Fast & Slow charging stations. 4. பாட்டரி மாற்று நிலையங்கள் - Battery Swapping Stations. 5. மின்சார வாகன நிறுவனங்கள்/நிலையங்களின் அசையாச் சொத்துக்கள்.
1. வருமானம் வேணும்ன்னு GST வரியை ஏத்துறாங்க. 2. Input costs கூடிப்போச்சுன்னு விலையை ஏத்துறான். 3. என்ன விலை ஏறினாலும் வாங்கியே ஆகனும்ங்கிற நிலைமைக்கு மிடில் கிளாஸ் மக்கள் தள்ளப் படுகிறார்கள். 4. விலைவாசி ஏறினா பணவீக்கம் ஏறிடும். 5. பணவீக்கம் ஏறுதுன்னு வட்டியை ஏத்துறானுங்க.
6. வட்டி ஏறிட்டா, எல்லா வங்கிகளும் கடன் வட்டியை உடனே ஏத்துறாங்க. 7. கடன் வட்டி ஏறிட்டா EMI ஏறிடுது. 8. EMI ஏறுற அளவுக்கு மிடில் கிளாஸ்சுக்கு சம்பளம் எற மாட்டேங்கிது. 9. சம்பளம் பத்தலைன்னு மேலும் கடன் வாங்க நேறிடுது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு மற்றும் நிலையான வருமானம் தரும் வழிகள்.
இவை அனைத்துமே, ஒன்றிய அரசால் guarantee செய்யப்பட்டவை. முதலீடுகளுக்கு 100% பாதுகாப்பு.
உங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையங்களில் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க: ...
Senior Citizen Savings Scheme (SCSS)
முதலீடுகளின் உச்ச வரம்பு ₹30 லட்சம். ஒரு குடும்பத்தில் (கணவனும், மனைவியும்) சேர்ந்து அதிகபட்சமாக ₹60 லட்சம் முதலீடு செய்யலாம்.
5+3 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வருமானம் கிடைக்கும்.
Post Office Monthly Income Scheme (POMIS)
முதலீடுகளின் உச்ச வரம்பு ₹9 லட்சம். ஒரு குடும்பத்தில் (கணவனும், மனைவியும்) சேர்ந்து அதிகபட்சமாக ₹18 லட்சம் முதலீடு செய்யலாம்.
5 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். மாதத்திற்கு ஒருமுறை வட்டி வருமானம் கிடைக்கும்.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் 40 வயதிற்கு மேலே நீங்கள் தொடங்கும் போது, அதிக வருமானத்தை விட 'அதிகமாக சேமிப்பதில்' தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. என்ன இவ்வளவு சுலபமா என்கிற ஐயம் எழுகிறதா? தொடர்ந்து படியுங்கள்.
நம்மில் பலர் 40 வயதை எட்டும் வரை முதலீடுகளையும் சேமிப்பையும் தள்ளிப்போடுகிறோம். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும். அது அவரவர் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தது. 40 வயதை அடையும்போது கொஞ்சம் பயமும் சேர்ந்து விடுகிறது. ஐயையோ, நாம் நமது வாழ்க்கைக்கு தேவையான அளவு சேமிக்கவில்லையே என்று.