01. वन्दे बृन्दा - वन - चरम् वल्लवी - जन - वल्लभम्
जयन्ती - संभवम् धाम - वैजयन्ती विभूषणम्
जयन्ती ஸ்ரீ ஜயந்தி அன்று
संभवम् அவதரித்தவனும் ,
बृन्दा - वन பிருந்தாவனத்தில்
चरम् திரிந்தவனும் ,
वल्लवी - जन இடைப் பெண்களுக்கு
वल्लभम् பிரியமானவனும் ,
वैजयन्ती வைஜயந்தீ எனும் வன மாலையை
विभूषणम् அலங்காரமாக உடையவனுமான
धाम கண்ணன் எனும் ஜோதியை
वन्दे வணங்குகிறேன்
இந்த ஸ்லோகத்தில்
கிருஷ்ணன் பெயரையே ஸ்வாமி தேசிகன் குறிப்பிடாமல் அவரது பண்புகளை மட்டுமே குறிப்பிடுகிறார்.
பிருந்தாவன சரம் - வாத்ஸல்யம்
வல்லவீ ஜன வல்லபம் - ஸௌசீல்யம்
ஜெயந்தீ சம்பவம் - ஸௌலப்யம்
வைஜயந்தி விபூஷணம் - ஸ்வாமித்வம்
கண்ணன்! ‘பிருந்தாவனசரம் வல்லவீ ஜன வல்லபம்!’ பிருந்தாவனத்தில்
வாழ்ந்தவன்! அவனிடம் அன்பு கொண்டிருந்த அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்தவர்கள் மேல் அன்பு கொண்டவன்! அடுத்த வரியில் ஆசாரியரின் மொழி விளையாட்டு தொடங்குகிறது. ஜயந்தீ என்று ஒரு பொருளிலும் வைஜயந்தீ என்று வேறொரு பொருளிலும் சொல் அமைய அடுத்த வரியைப் பாடியிருக்கிறார். சஹஸ்ரநாமம் என்றால் அது
விஷ்ணு சஹஸ்ரநாமம் தான். அது போல் ஜயந்தி என்றால் அது கிருஷ்ண ஜயந்தி தான்! வேறு எத்தனையோ ஜயந்திகள் இருந்தாலும் ஜயந்தி என்ற சொல் கிருஷ்ண ஜயந்திக்கே விதப்பான (சிறப்பான) ஒன்று.
ஜயந்தீ ஸம்பவம்! குமாரஸம்பவம் என்று சிவகுமாரனின் பிறப்பைக் கூறும் காவியத்தைப் படைத்தானே காளிதாசன்! அங்கே
வரும் அதே பொருளில் தான் இங்கேயும் ஸம்பவம் என்ற சொல் அமைகிறது! கிருஷ்ணன் பிறந்த தினம் கிருஷ்ண ஜயந்தி.
‘தாம வைஜயந்தீ விபூஷணம்!’ மாலைகளில் எல்லாம் சிறந்த மாலை காட்டுப்பூக்களால் ஆன பல வண்ணப் பூக்கள் நிறைந்த மணமுள்ள மலர்கள் சிலவும் மணமில்லா மலர்கள் சிலவும் ஆன வைஜயந்தீ என்னும் மலர்
மாலை! காட்டில் இந்த யாதவன் கன்றுகள் மேய்க்கச் செல்லும் போது அங்கு மலர்ந்திருக்கும் பலவண்ண மலர்களைக் கொய்து மாலையாக்கி அணிந்து கொள்வானாம். அப்படிப்பட்ட வைஜயந்தீ மாலையை மிக அழகான அணிகலனாக அணிந்து கொண்டு இருக்கும் எளிமையானவன் எங்கள் கண்ணன்! அந்த முழுமுதற்பொருளான ஸ்ரீ கண்ணனின்
நீர்மையின் தீரத்தை 'வந்தே' என்று பலமுறை போற்றி வணங்குவோம்!
ஶ்ரீ சுவாமி தேசிகன் திருவடிகளே சரணம்🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா#காரடையான்_நோம்பு_ஸ்பெஷல்
ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் பெரியவா முகாமிட்டிருந்தார்.
ஒருநாள் கோவில் வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக் கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே
பார்த்துக் கொண்டு இருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை
சுழல விட்டாள். பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்! அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய ஊர் மருத்துவரோ அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.
பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ
#அத்வேஷி
விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும்
துவேஷம் (வெறுப்பு) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி #அனுகூலன்
அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்து கொள்வது, பெருமாள் கோவிலுக்கு செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களை போற்றுவது, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது
இவை அனைத்தையும் விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன். #நாமதாரி
முன்சொன்ன குணங்களோடு மஹா விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்து இருப்பவன். #சக்ராங்கி
மேலே சொன்ன மூன்றோடு, வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹா விஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்கர சின்னங்களை ஆசார்யன்
#மஹாபெரியவா
சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி
மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம். ஒரு முறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சி மடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக் கொண்டு இருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால்,
காஞ்சி மடத்தில் பாட வேண்டி இருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு 20 நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலை விழாவில் முதல் நாள் பாடவேண்டிய பாலக்காடு
3. பூமித்தாய்க்கு வணக்கம்!
வாழ்க்கை முழுவதும் நம்மைச் சுமந்து காப்பவள் பூமித்தாய். அவளுக்கு நன்றி செலுத்தவும் நம் கால்கள் பூமியை ஸ்பரிசிக்க அனுமதி வேண்டியும் சொல்லி வணங்குவது
#சுயம்புவேலவன்
திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் #வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் இங்கு
லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள். இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும்
அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப் பெருமான் அமர்ந்து நித்யம் சிவபூஜை செய்கிறார். 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்து
#மகாபெரியவா இந்து முன்னணி ஸ்தாபகர் திரு ராம கோபாலன் சொன்னது.
சங்கராம்ருதம் - 438
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்
ஐம்பது ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறேன், அவருடைய மறைவு என் மனதில் எவ்வித வெற்றிடத்தையும் ஏற்படுத்தவில்லை.
மாறாக அவர் இப்போதும் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன். ஆஸ்பத்ரியில் டிஸ்சார்ஜ் ஆகி காஞ்சி மடத்துக்குப் போனபோது பாலப் பெரியவாளுக்கு யாக சாலையில் வைத்துப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவர் என்னை உட்காரச் சொன்னார். பாடம் முடிந்தவுடன் என் உடல் நிலை பற்றி விஜாரித்தார். என்னைச் சுற்றி
மூன்று சக்கரங்கள் போட்டார்.எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை. ஜயேந்த்ர பெரியவாளும், பாலப் பெரியவாளும் என்னிடம் “இதுபோல் யாரிடமும் அக்கறை எடுத்துக் கொண்டதில்லை” என்றார்கள். ஏதோ உயர்ந்த நோக்கத்தில் தான் அவ்வாறு சக்ரம் போட்டிருப்பார்கள் எனத் தோன்றியது. பற்றற்ற நிலைக்கு அவர் ஓர்