#மஹாபெரியவா
சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி
மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம். ஒரு முறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சி மடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக் கொண்டு இருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால்,
காஞ்சி மடத்தில் பாட வேண்டி இருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு 20 நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலை விழாவில் முதல் நாள் பாடவேண்டிய பாலக்காடு
கே.வி. நாராயண சுவாமிக்கு வர முடியவில்லை. அவர் மூன்றாம் நாள் பாட வருவதாக ஒத்துக் கொண்டார். அதனால் முதல் நாள் நிகழ்ச்சியில் அவசியம் பாடும்படி கேட்டுக் கொண்டு இருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் திருவனந்தபுரம் கிளம்பினர். முதல்நாள்
நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மூன்றாம் நாள் காஞ்சிபுரம் புறப்பட்டனர். அப்போது கனமழை பிடித்துக் கொண்டது. காஞ்சிபுரம் செல்ல முடியுமோ முடியாதோ என்ற வருத்தம் உண்டானது. பெரியவரை வேண்டிக் கொண்டு மழையோடு மழையாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தனர். சென்னைக்குக் கிளம்பும் விரைவு பஸ் கிளம்பிக்
கொண்டிருந்த சமயம். இவர்கள் பஸ்சில் இடம் இருக்கிறதா என பார்த்தனர். சொல்லி வைத்தது போல் இரண்டு இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன. மூன்றாம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை பத்து மணிக்கு பூஜை ஆரம்பம். பூஜையில்
சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார்கள். பிரசாதம் வழங்கும் நேரம், சங்கீத சகோதரர்கள் பெரியவர் முன் நின்றார்கள்.
பெரியவர் அவர்களிடம், “என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?”
திருவனந்தபுரம் சென்று வந்த விஷயம்
பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று சகோதரர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “பெரியவா அனுகிரஹத்தாலே திருவனந்தபுரத்திலேயும், காஞ்சியிலேயும் பாடும் வாய்ப்பு கிடைச்சுது!” என்று பணிவுடன் சொன்னார்கள்.
“அப்படி ஒன்றும் இல்லை! அம்பிகை தான் ஒரே
கல்லடிச்சு உங்களுக்கு இரண்டு மாம்பழம் கொடுத்துட்டான்னு சொல்லு!” என்று வாழ்த்தினார். பெரியவரின் வாழ்த்தைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
மகாபெரியவர் தன்னை நேரில் வந்து தரிசித்து வேண்டுவோருக்கு மட்டுமல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தன்னை நினைத்துப் பிரார்த்திப்பவர்களுக்கும் அனுகிரஹம் செய்யத் தவறுவதில்லை. பல காலத்துக்கு முன் சிதம்பரத்தில் பிரபலமான
ஆடிட்டராக இருந்தார் பாலசுப்ரமணியம் என்பவர். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் பரம்பரையில் வந்தவர். அவருக்கு காஞ்சி மகாபெரியவர் மீது, இயல்பாகவே மிகுந்த பக்தி இருந்தது.
அடிக்கடி காஞ்சிபுரத்துக்குச் சென்று மகானை தரிசிக்க அவருக்கு நேரம் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம்
காஞ்சி சென்று மகானை தரிசித்து விடுவார் அவர். ஒவ்வொரு நாளின் விடியலும் மகாபெரியவா படத்தின் முன் நின்று சிறிதுநேரம் 'சந்திரசேகரா ஈசா' என்று காஞ்சி மகானின் திருப் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பதில் தான் தொடங்கும். அதுபோலவே தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பும் மகாபெரியவா திருநாமத்தைச்
#எது_பக்தி_? ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத் கீதையும் பாராயணம் செய்வது வழக்கம். எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார். அதன்பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார். இது தினமும் நடந்தேறும்.
பலரும் இவரின் காதுபடவே எடுத்து உரைப்பார்கள். இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார். ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது. ஒரு நாள் அவ்விடத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக செய்தி வந்தது. உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள். மஹாப்பிரபு வரும் போது இந்த
பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத் கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள். ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரிடம் சென்று ஐயா சைத்தன்ய மஹாபிரபு வரும் நாள் அன்று மட்டும் இங்கு அமர்ந்து நீங்க பாராயணம் செய்ய வேண்டாம். குளக்கரையில் அமர்ந்து வழக்கம் போல
#FoodForThought There was a woman named Subhadra who lived with her hunter husband in the forest. They did not have children for many years. They offered a lot of prayers and did austere penance and finally they were blessed with a son. They brought him up with so much love and
care. Unfortunately one day a snake stung their son and he was struggling for his life. The wife was distraught and called to her husband. The husband searched for the snake which stung his child, brought it and told his wife that he would slay its head immediately. The wife said
That is not going to bring back our son’s life. But the hunter said, by killing this I can prevent it from stinging others and killing them. The wife said but there are so many other snakes in the forest, what are you going to do about them. As they were arguing the snake said
#இராமன்_மகிமை#சஹஸ்ரநாமம்
வனவாசம் சென்ற ராமன் 14 வருடஙகளுக்குப் பின் பட்டாபிஷேகம் செய்து கொண்டான் என்பது நாம் அறிந்ததே. பட்டாபிஷேகம் நிறைவடைந்த பின், அயோத்தியில் வாழ்ந்த சில பண்டிதர்கள் வசிஷ்டரிடம் சென்று, “14 வருடங்களுக்கு முன் தசரதச் சக்கரவர்த்தி ஏற்பாடு செய்த பட்டாபிஷேகம் ஏன்
நின்று போனது?” என்று கேட்டார்கள். அதற்கு வசிஷ்டர், “அப்போது ‘ராம பட்டாபிஷேகம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்தார்கள். அதனால் நின்று போனது. இப்போது ‘சீதா ராம பட்டாபிஷேகம்’ என்று பெயரிட்டு நடத்தியபடியால், வெகு சிறப்பாக நடந்தேறி விட்டது. வெறும் பெருமாளை விடப் பிராட்டியோடு கூடிய
பெருமாளுக்கே ஏற்றம் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளுங்கள்!” என்றார். வசிஷ்டரின் இந்த விளக்கத்தின் ஒரு பகுதியை அந்தப் பண்டிதர்கள் ஏற்றபோதும், அவர்கள் மனத்தில் மற்றோர் ஐயம் இருந்தது. அதை வசிஷ்டரிடமே அவர்கள் கேட்டார்கள் “மாமுனியே! எங்களது ஐயம் இன்னும் தீரவில்லை. இளவரசுப்
#மகாபெரியவா#காரடையான்_நோம்பு_ஸ்பெஷல்
ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் பெரியவா முகாமிட்டிருந்தார்.
ஒருநாள் கோவில் வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக் கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே
பார்த்துக் கொண்டு இருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை
சுழல விட்டாள். பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்! அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய ஊர் மருத்துவரோ அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.
பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ
#அத்வேஷி
விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும்
துவேஷம் (வெறுப்பு) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி #அனுகூலன்
அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்து கொள்வது, பெருமாள் கோவிலுக்கு செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களை போற்றுவது, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது
இவை அனைத்தையும் விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன். #நாமதாரி
முன்சொன்ன குணங்களோடு மஹா விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்து இருப்பவன். #சக்ராங்கி
மேலே சொன்ன மூன்றோடு, வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹா விஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்கர சின்னங்களை ஆசார்யன்