தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை மீறி யாரும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது என்பதை நாமறிவோம்.ஆர்.கே.நகர் தேர்தல் மட்டும்தான் விதிவிலக்கு அதற்கு காரணம் வேறு.மதுசூதனன் வெல்லக் கூடாது என அதிமுகவிற்குள்ளே பல கோஷ்டிகள் அன்று நினைத்தார்கள்.அதை மதுசூதனனே கூட கூறியுள்ளார்.(1)
டிடிவி தினகரன் வெல்ல வேண்டுமென திமுகவும் நினைத்தது.அதுதான் அதிமுகவை பிளக்குமென்று பேருக்கு ஒரு வேட்பாளரை திமுகவும் நிறுத்தியது..டெப்பாஸிட் போகுமென நினைத்திருக்க மாட்டார்கள்.ஆனால் அதில் ஆளுங்கட்சியும் வெற்றி பெறவில்லை.இது தனி.(2)
மற்றபடி 1991 ல் இருந்து ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் வென்று வருகிறது..அந்த நிலையில் இதில் ஆளுங்கட்சி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் வித்தியாஸம் இவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது.(3)
2006 - 2011 காலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் அதிமுக மோசமான நிலையை அடைந்துள்ளது.ஆனால் அதற்கும் 2023 ற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது(4)
2006 ம் வருடம்தான் விஜய்காந்த் களத்திற்குள் வந்தார்.அவர் வருகிற போதே தன்னை 'கருப்பு எம்ஜிஆர்' என அழைத்துக் கொண்டு,எம்ஜிஆர் பிரச்சாரம் செய்த வாகனத்திலேயே அவரும் வலம் வந்தார்.அவரோடு பண்ருட்டியார் இருந்தது இன்னும் கூடுதல் பலமாக இருந்தது.(5)
விஜய்காந்த் குறி வைத்ததே அதிமுகவின் வாக்குகளைத்தான் என தெளிவாக அடையாளம் காண முடிந்தது.2006 ல் அதிமுகவின் தோல்விக்கே விஜய்காந்த் எழுச்சி ஒரு காரணமாக இருந்தது.அதையே அடுத்து வந்த இடைத்தேர்தல்களும் நிரூபித்தன.(6)
மதுரை மேற்கு - மத்திய மதுரை - பெண்ணாகரம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவின் மாற்றுசக்தி என்ற நிலையை அசைத்துப் பார்த்தது.(7)
மதுரை (மே) மற்றும் மதுரை(ம) இரண்டு இடத்திலும் 25% வாக்குகளை அதிமுகவால் தாண்ட முடியவில்லை.காரணம் தேமுதிக 19% & 18% வாக்குகளை அங்கே ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கு எதிரே பிரித்தது.பெண்ணாகரத்தில் பாமக இரண்டாம் இடத்தை அடைந்து அதிமுகவை கட்டுத்தொகையை இழக்க வைத்தது.(8)
அன்றைய நிலையில் வடமாவட்டத்தில் பல இடங்களில் அதிமுகவை விட பாமக பலமாக இருந்தது.தேமுதிக தமிழகம் முழுக்க தன் தடத்தை பதித்திருந்தது..
ஆனால் 2023 ஈரோடு கிழக்கு நிலை இப்படியில்லை.(9)
அங்கே மூன்றாவது பலமான சக்தி என்ற பேச்சிற்கே இடமில்லாமல் இருந்தது.தேர்தல் இருமுனையாகியிருந்தது. காங்கிரஸ்தான் போட்டியிட்டாலும் திமுக vs அதிமுக என்றே களம் நகர்ந்தது..(10)
ஒரு பொது வேட்பாளர்,அவர் பலமான வேட்பாளராக இருக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் சொன்னப்படியேதான் அதிமுக வேட்பாளர் தென்னரசு களமிறக்கப்பட்டார்..(11)
திமுக Vs அதிமுக,அதிலும் திமுக கூட்டணியாக காங்கிரஸ் நின்றது.கைச்சின்னம் Vs இரட்டை இலை என்கிற நிலையில் கொங்கு மண்டலத்திலேயே அதிமுக இவ்வளவு மோசமாக போயிருப்பது தவறான அறிகுறியை காட்டுகிறது..(12)
திமுக விக்கிரவாண்டியிலும்,காங்கிரஸ் நாங்குநேரியிலும் 36% வாக்குகளை தக்க வைத்தார்கள் 2019 ல்..ஆனால் அதிமுகவால் 30% வாக்குகளைக்கூட கொங்கு மண்டலத்திலேயே தக்க வைக்க முடியவில்லை என்பது அதன் தலைமைத்துவத்தின் மீது மிகப்பெரிய சிக்கலிருப்பது கண்கூடு..(13)
ஜாதி ரீதியாகவும்,மண்டலங்களாகவும் அதிமுக பிளவுறுகிறது என்பதை மிக நுணுக்கமாக பார்க்க முடிகிறது.அதிலும் செங்குந்த முதலியார்கள் அதிகம் உள்ள ஈரோடு கிழக்கில் அதிமுகவின் படுதோல்வி சமூக ரீதியான பல மாறுபாடுகளை குறிக்கிறது..(14)
EPS தலைமையிலான அதிமுகவோடு அண்ணாமலை தலைமையிலான பாஜக அதிக நெருக்கம் காட்டுவதும்,அதனோடு மட்டுமே கூட்டணி போவதும் கொங்கு மண்டலத்திலேயே கூட சாதகமாக அமையாது என்றே தோன்ற வைக்கிறது.(15)
இதை 2024 தேர்தலை மையமாக வைத்து கவனிக்கும் போது,பாஜக சில தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டும்..(16)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
விவசாய போராட்டம் என்கிற பெயரில் 2021 குடியரசு தினத்தன்று,செங்கோட்டையில் ஏற்பட்ட காலிஸ்தானிய கலவரங்களுக்கு பின்னால் இருப்பவராக குற்றஞ்சாட்டப்பட்டவர் நடிகரும்,அரசியல்வாதியுமானவர் தீப் சித்து.(1)
இந்த நபர் திடிரென பிப்ரவரி 2022 ன் போது,ஒரு கார் விபத்தில் பலியானார்.அடுத்து,அவர் உருவாக்கிய 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற சீக்கிய அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் என்பவர் நியமிக்கப்பட்டார்..(2)
தீவிர மற்றும் வெளிப்படையான காலிஸ்தான் ஆதரவாளராகவும் சீக்கிய மதபோதகராகவும் இன்று இளைஞர்களுக்கு மத்தியில் உருவாகி வருகிறார் அம்ரித்பால் சிங்..(3)
நாம் முன்பே சொன்னதுதான்..வடமாநில தொழிலாளர்கள் மீது வன்மத்தை கட்டியமைப்பது சரியான முறையல்ல.முதலில் அதை பொதுமைப்படுத்துவதே தவறு.இங்கே அதிகமாக வந்து பணி செய்பவர்கள் அஸ்ஸாம் - மேற்கு வங்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களாக உள்ளார்கள்.(1)
அதே போல பீஹார்,ராஜஸ்தான் என அங்கிருந்து வருபவர்களும் பிராமணர்களோ,பூமிகாரோ,காயஸ்தாவோ,ராஜபுத்திரர்களோ,ஜாட்டோ கிடையாது..சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலமற்ற ஏழைகளும்,பட்டியல் சமூகத்தவர்களும்தான் அதிகம் வருகிறார்கள்.(2)
இது சமூகநீதி மண் என்று பேசிக் கொண்டே இப்படி அந்த மக்கள் மீது வன்மத்தை கொட்டுவது முறையா? 'பானிப்பூரிக்காரன்' 'வடக்கன்' என்று செய்தி சேனல்களும்,யூடியூப் சேனல்களும் பரப்பும் இழிவுபடுத்தலை முதலில் நிறுத்த வேண்டும்.(3)
கொரோனா மற்றும் உக்ரைன் - ரஷ்யா யுத்தத்திற்கு பிறகு மாறி வரும் உலகில் இந்தியா பலமாக எழுந்துள்ளது.இன்னொரு நாட்டின் விருப்பு வெறுப்புகளை மேற்கு நாடுகள் ஏற்றுக் கொள்வதும்,அதை பல்லைக் கடித்துக் கொண்டு நமது சுதந்திரமாக அவர்கள் பார்க்கும் அதிசயமும் இப்போதுதான் நடக்கிறது.(1)
இந்த நேரத்தில் இந்தியா பல ராஜதந்திர அடிப்படையில் தங்களுக்கு சாதகமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது வெளிப்படையான உண்மை.அண்டை நாடான இலங்கையில் ராஜபக்ஷேக்கள் வீழ்ச்சியும்,சீனாவினுடைய ஆதிக்கமும் நாம் முக்கியமான இலக்குகளை நோக்கி நகர வேண்டிய தேவையை உணர்த்தியது.(2)
பிரதமர் நரேந்திர மோடி 'தமிழ் - தமிழர்' என்று அழுத்தமாக பேசுவதற்கு பின்னால்,இந்து மகாசமுத்திரத்தின் மீது அதிகாரம் செலுத்தும் வல்லாதிக்க சக்தி யார் என்பதை நிறுவும் ஒரு ராஜதந்திர நோக்கமும் உள்ளது.அதை வெறும் தமிழக அரசியலாக சுருக்கிப் பார்த்தால் சில்லறை அரசியல் மட்டும்தான் தெரியும்(3)
கர்நாடக பாஜக சந்தித்த அழுத்தங்களாக அறியப்படுவது இவைதான்.எடியூரப்பா ஆதரவாளர்கள் - வாக்குறுதி கொடுத்து அழைத்து வரப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் - எடியூரப்பா எதிர்ப்பாளர்கள் என இம்மூன்று தரப்பையும் திருப்திப்படுத்தும் இடத்தில் நிறைய சறுக்கல் இருந்தது.(2)
இவையில்லாமல் ஹிந்துத்துவ ஆதரவு தளத்திலும் பொம்மையின் மீதொரு அதிருப்தி வந்தது.அதாவது,தொடர்ச்சியாக ஹிந்துத்துவ தலைவர்கள் வேட்டையாடப்படுவதில் ஒரு தெளிவான முடிவெடுக்காமல் இந்த அரசு தடுமாறுகிறது என்ற பார்வையால் அது வந்தது.(3)
கர்நாடக சட்டமன்ற தேர்தல் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் வெறும் கௌரவப்பதவி இல்லை.கிட்டத்தட்ட போர்படைத் தளபதியை போல பணி செய்ய வேண்டிய நிர்பந்தமிருக்கும் பொறுப்பாகும்..(1)
கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழந்துவிடும் என்ற கடும் பிரச்சாரத்தை முறியடித்து,மிக மிக நுணுக்கமான செயல்பாடுகள் வழியே மீண்டும் அதிகாரத்தை தக்க வைக்க பாஜக எடுத்துக் கொண்ட முக்கியமான ஆயுதம் அண்ணாமலை..(2)
கல்யாண(hydrabad) கர்நாடகா - கித்தூரு(mumbai) கர்நாடகா - மத்திய கர்நாடகா - காரவளி(Coastal) கர்நாடகா - தென் கர்நாடகா - பெங்களூர் என ஆறு பிரிவுகளாகவும் 31 மாவட்டங்களாகவும் கர்நாடக மாநிலம் உள்ளது.(3)
நரேந்திர மோடி - பிரவீன் தொக்காடியா - சுனில் ஓசா இவர்கள் மூவரும் குஜராத் இந்துத்துவ அரசியலில் பலமான படைத் தளபதிகளாக இருந்தவர்கள்.போராட்டங்கள்,ஆள்திரட்டல் என கட்சியின் தார்மீக பலமாக இவர்களுடைய உழைப்பு இருந்தது..களத்திலிருந்து எழுந்து வந்த தலைவர்கள்..(1)
இதில் ஓசா இதழியல்,கருத்தியல்களை உருவாக்குபவர்.தேர்தல் அரசியலில் மிகச்சிறந்த வியூகங்களை வகுப்பவர்.இரண்டுமுறை குஜராத் MLA வாக இருந்தவர்.ஆனால் நரேந்திர மோடி குஜராத் முதல்வரான பிறகு மிகப்பெரிய ஈகோ யுத்தம் அமைப்பில் உருவானது..(2)
தங்களுக்கு இல்லாத தகுதி மோடிக்கு இருந்தது என்ன என்ற ஆற்றாமை கடுமையாக எழுந்தது.மோடியை எங்களால் முதுகில் குத்தி வெளியே தள்ள முடியும் என்ற ஆணவமும்,வெறுப்பும் சூழ்ந்தது.
அது தொக்காடியாவையும்,ஓசாவையும் நரேந்திர மோடியை விட்டு தள்ளிப்போக வைத்தது.அவருக்கு எதிராக செயல்பட வைத்தது.(3)