#இராமன்_மகிமை#சஹஸ்ரநாமம்
வனவாசம் சென்ற ராமன் 14 வருடஙகளுக்குப் பின் பட்டாபிஷேகம் செய்து கொண்டான் என்பது நாம் அறிந்ததே. பட்டாபிஷேகம் நிறைவடைந்த பின், அயோத்தியில் வாழ்ந்த சில பண்டிதர்கள் வசிஷ்டரிடம் சென்று, “14 வருடங்களுக்கு முன் தசரதச் சக்கரவர்த்தி ஏற்பாடு செய்த பட்டாபிஷேகம் ஏன்
நின்று போனது?” என்று கேட்டார்கள். அதற்கு வசிஷ்டர், “அப்போது ‘ராம பட்டாபிஷேகம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்தார்கள். அதனால் நின்று போனது. இப்போது ‘சீதா ராம பட்டாபிஷேகம்’ என்று பெயரிட்டு நடத்தியபடியால், வெகு சிறப்பாக நடந்தேறி விட்டது. வெறும் பெருமாளை விடப் பிராட்டியோடு கூடிய
பெருமாளுக்கே ஏற்றம் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளுங்கள்!” என்றார். வசிஷ்டரின் இந்த விளக்கத்தின் ஒரு பகுதியை அந்தப் பண்டிதர்கள் ஏற்றபோதும், அவர்கள் மனத்தில் மற்றோர் ஐயம் இருந்தது. அதை வசிஷ்டரிடமே அவர்கள் கேட்டார்கள் “மாமுனியே! எங்களது ஐயம் இன்னும் தீரவில்லை. இளவரசுப்
பட்டத்துக்கு ராமனைக் காட்டிலும் தகுதி வாய்ந்த வேறொரு நபர் இருக்க வாய்ப்பே இல்லை. தீர்மானித்த தசரதனை மிஞ்சிய சக்கரவர்த்தி எவருமில்லை. நாள் குறித்த உங்களை மிஞ்சிய ஒரு முனிவரோ ஞானியோ இல்லை. ஏற்பாடுகளைச் செய்த சுமந்திரனைப் போன்ற கூர்மதி கொண்ட மந்திரி எவருமில்லை. பொது மக்களின்
ஆதரவுக்கும் குறையில்லை.
பட்டாபிஷேகம் நன்கு நடைபெற வேண்டி ராமனும் சீதையும் பிரார்த்தனை செய்த ரங்கநாதனை மிஞ்சிய தெய்வமில்லை. இப்படிப்பட்ட நிலையில் கூனி என்ற ஒரு பெண்ணின் சூழ்ச்சியால் எப்படி முறியடித்து பட்டாபிஷேகத்தை நிறுத்த முடிந்தது? அதற்கு விடை கூறுங்கள்” என்று பிரார்த்தித்தனர்.
நம்மில் பலரின் மனங்களில் ஓடிக் கொண்டிருக்கும் இக்கேள்விக்கு வசிஷ்டர் அருமையான ஒரு விளக்கத்தை அளித்தார்.
“பண்டிதர்களே பட்டாபிஷேக விஷயத்தில் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை விட இறைவனாகிய ராமன் என்ன நினைக்கிறான் என்பதே முக்கியம். பட்டாபிஷேக ம் நடைபெற வேண்டுமென்று தசரதனும், நானும்,
சுமந்திரனும், பொதுமக்களும் நினைத்தோம். பட்டாபிஷேகம் நடைபெறக் கூடாது என்று கூனியும் கைகேயியும் நினைத்தார்கள். ஆனால் ராமன் என்ன நினைத்தான் தெரியுமா? 14 ஆண்டுகளுக்குப் பின் பட்டாபிஷேகம் நடைபெறட்டும் என்று நினைத்தான்!” என்றார் வசிஷ்டர்.
“அவ்வாறு நினைக்க என்ன காரணம்?” என்றனர்
பண்டிதர்கள். அதற்கு வசிஷ்டர், “ராமன் தான் ஒருவன் மட்டும் வளர்வதை விரும்ப மட்டான். தன்னைச் சார்ந்த அனைவரும் தன்னுடன் வளரவேண்டும் என்று கருதுவான். அதனால் முதலில் தன் நண்பர்களுக்கும், தன்னை வந்த அண்டுவோர்க்கும் பட்டம் கட்டிவிட்டு அதன்பின் தான் பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்
என்று நினைத்தான். அதனால் தான் தனது பட்டாபிஷேகத்தைப் 14 ஆண்டுகள் தள்ளி வைத்து விட்டு, தனது திருவடிகளுக்குத் தொண்டு செய்துவந்த பாதுகைக்கு முதலில் பட்டாபிஷேகம் நடக்கும்படிச் செய்தான். அடுத்தபடியாகத் தன் நண்பனான குகனுக்கு வேடுவர் தலைவனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அடுத்து, தனக்கு
நண்பனாக வந்த சுக்ரீவனுக்குக் கிஷ்கிந்தையின் அரசனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அதன்பின் தன்னைச் சரணடைந்த விபீஷணனைக் கடற்கரையிலேயே வைத்து இலங்கையின் மன்னன் என்று சொல்லி, அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தான். இப்படித் தன்னைச் சார்ந்தவர்களான பாதுகை, குகன், சுக்ரீவன், விபீஷணன்
போன்றோர்க்கெல்லாம் முடிசூட்டி விடு, நிறைவாக ராமன் முடிசூடிக் கொண்டான்!” என்றார்.
‘வர்தமான:’ என்றால் தான் வளர்வதோடு மட்டுமின்றித் தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்ப்பவர் என்று பொருள். திருமால் தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரையும் தன்னோடு சேர்ந்து வளரச் செய்வதால் ‘வர்தமான:’ என்றழைக்கப்
படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 263-வது திருநாமம். “வர்தமானாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மேன்மேலும் வளர்ச்சிகளை அடையும்படித் திருமால் அருள் புரிவார்.
(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)
ஶ்ரீராம ஜயம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா பெரியவா சொல்படி வாழும் முறை: 1. காலை ஸூர்யோதயத்துக்கு முன்னால் வீட்டில் உள்ள குழந்தைகள், வ்யாதியஸ்தர்கள், மிகவும் வயஸானவர்கள் தவிர, மற்ற அனைவரும் எழுந்துவிட வேண்டும். 2. ஆண், பெண் இருவருமே எப்போதுமே நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டும். 3. வீட்டில் காலை, மாலை விளக்கேற்ற
வேண்டும். நல்லெண்ணெய், நெய் இவற்றால் ஏற்றலாம். வீட்டு வாஸலில் விளக்கு வைப்பது, துர்ஶக்திகள் வீட்டுக்குள் வராமல் ரக்ஷிக்கும். 4. பெண் குழந்தைகள், கன்யா பெண்கள், ஸுமங்கலிகள் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும். கருப்பு பொட்டு
அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வைத்துக் கொள்வதும், வைத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான். 5. பெண் குழந்தைகள், கல்யாணமான பெண்கள் தோடு, வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது. தங்கத்தில் பண்ணிய மெட்டி, கொலுஸு இவைகளை பெண்கள் காலில் அணியக்கூடாது. தங்கத்தில் மஹாலக்ஷ்மி
#ஶ்ரீவைஷ்ணவம்#மகாபாரதம்#கண்ணன்
கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான். வீதியெங்கும் அலங்கார வளைவுகள். பூரணகும்பம் கொண்டு வரவேற்பு. பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான். கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!கண்ணன் கேட்கிறான், "பச்சை வர்ணம் பூசப்
பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே, அது யாருடைய வீடு?”
“அச்சுதா அது என்னுடைய வீடு" என்கிறார் துரோணர்.
கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"
கிருபர்: ''மாதவா! அது என்னுடைய வீடு.''
கண்ணன்: "மஞ்சள்
வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா அது என்னுடைய வீடு''
கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப்
#MahaPeriyava
Narratator: Sashikala
Maha Periyava Darshana Anubavangal
“I heard the name of Sri Chandrashekharendra Saraswathi Swami belonging to Kanchi for the first time in 1961. My grandfather late Dr.Harihar Gangadhar Moghe’s disciple late Keshavaram, wrote him informing
that he needs Shri Sankaracharyal Swamiji’s and Shri Dakshinamoorthy’s hand-drawn pictures. “Shashi is studying in Art school. Would she draw the pictures?” he had enquired. Along with the letter he had sent the photos of Swami and Dakshinamurthy. My grandfather Dr. Moghe was
well versed in music. He had taught music to Prof Keshavaram and to me also. As per the desire of my grandfather and also the brother disciple, I drew the pictures and sent them to Shri Keshavaram. He put those pictures before the Mahaswami. Swami touched those pictures with his
மகாபெரியவர் தன்னை நேரில் வந்து தரிசித்து வேண்டுவோருக்கு மட்டுமல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தன்னை நினைத்துப் பிரார்த்திப்பவர்களுக்கும் அனுகிரஹம் செய்யத் தவறுவதில்லை. பல காலத்துக்கு முன் சிதம்பரத்தில் பிரபலமான
ஆடிட்டராக இருந்தார் பாலசுப்ரமணியம் என்பவர். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் பரம்பரையில் வந்தவர். அவருக்கு காஞ்சி மகாபெரியவர் மீது, இயல்பாகவே மிகுந்த பக்தி இருந்தது.
அடிக்கடி காஞ்சிபுரத்துக்குச் சென்று மகானை தரிசிக்க அவருக்கு நேரம் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம்
காஞ்சி சென்று மகானை தரிசித்து விடுவார் அவர். ஒவ்வொரு நாளின் விடியலும் மகாபெரியவா படத்தின் முன் நின்று சிறிதுநேரம் 'சந்திரசேகரா ஈசா' என்று காஞ்சி மகானின் திருப் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பதில் தான் தொடங்கும். அதுபோலவே தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பும் மகாபெரியவா திருநாமத்தைச்
#எது_பக்தி_? ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத் கீதையும் பாராயணம் செய்வது வழக்கம். எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார். அதன்பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார். இது தினமும் நடந்தேறும்.
பலரும் இவரின் காதுபடவே எடுத்து உரைப்பார்கள். இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார். ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது. ஒரு நாள் அவ்விடத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக செய்தி வந்தது. உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள். மஹாப்பிரபு வரும் போது இந்த
பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத் கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள். ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரிடம் சென்று ஐயா சைத்தன்ய மஹாபிரபு வரும் நாள் அன்று மட்டும் இங்கு அமர்ந்து நீங்க பாராயணம் செய்ய வேண்டாம். குளக்கரையில் அமர்ந்து வழக்கம் போல
#FoodForThought There was a woman named Subhadra who lived with her hunter husband in the forest. They did not have children for many years. They offered a lot of prayers and did austere penance and finally they were blessed with a son. They brought him up with so much love and
care. Unfortunately one day a snake stung their son and he was struggling for his life. The wife was distraught and called to her husband. The husband searched for the snake which stung his child, brought it and told his wife that he would slay its head immediately. The wife said
That is not going to bring back our son’s life. But the hunter said, by killing this I can prevent it from stinging others and killing them. The wife said but there are so many other snakes in the forest, what are you going to do about them. As they were arguing the snake said