M.SivaRajan Profile picture
Mar 3 52 tweets 7 min read
ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும்
ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!

சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று
நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது.

அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்.
பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும்.

ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை,

திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர்.

திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர்.
பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார்.

அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது.

ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம்.

இங்கு பெருமாளும்,
தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.
தல சிறப்பு:

இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம்.

இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி

நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.
இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம்.

நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது.

உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில்.

இரண்டாவது தான் திருப்பதி!
திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார்.

பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம் இது.

இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு.

ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம்.
திருப்பதி கோவிலை காட்டிலும் இந்த கோவில் மிக பழமையானது.

இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது.

சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும்
இந்த நாராயணவனம் க்ஷேத்ரத்தை ஒருமுறை தரிசித்தால் திருப்பதிக்கு 100 முறை சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்.

கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர்.

திருப்பதியில் ஸ்ரீநிவாசப்பெருமானை
தரிசனம் செய்ய அருகில் செல்லும் போதே
ஜருகண்டி,
ஜருகண்டி என்று சொல்லி நம்மை நிம்மதியாக தரிசனம் செய்ய விடமாட்டார்கள்.

ஆனால் இந்த நாராயணவனத்தில் இப்படிபட்ட ஜருகண்டி, ஜருகண்டி என்கிற வார்த்தைகளின்றி நாம் நிம்மதியாக பெருமாள் மற்றும் தாயாரின் தரிசனத்தை பெற முடிகிறது.
திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசித்து மகிழலாம்
உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றை பார்க்கலாம்!

இப்போதெல்லாம் இது போன்ற கையால் மாவு அரைக்கின்ற இயந்திரம் எங்கே இருக்கிறது?
என்று தேடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.
தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அருமையான
ருசியோ ருசியான கோயில் பிரசாதம் புளியோதரையை சிந்தாமல் சிதறாமல்
தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள்.

பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது.

மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகின்றார்கள்.
பெயர்ப்பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது.

திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது

இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது.
பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள்.

திரு வெங்கடேசப்பெருமானின் திருமணம் இந்த இடத்தில்தான் நடந்தது.

அந்த திருமணத்தை காண
33 கோடி கடவுள்களும் அணிவகுத்து நின்றார்களாம் .

வெங்கடேசப்பெருமான் மற்றும் பத்மாவதி தேவி அவர்கள் திருமணம் முடிந்த பின்பு
திருப்பதிக்கு செல்லும் வழியில் அப்பலயகுண்ட என்ற ஊரில் ஓய்வெடுத்துவிட்டு சென்றுள்ளார்கள்.

இந்த ஊர் திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

திருப்பதிக்கு செல்லும் வழியில் இது அமைந்திருப்பதால் இதை மறக்காமல்
இதை மறக்காமல் பார்த்து விட்டு செல்ல வேண்டும்.

இது மிக அழகான முறையில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாகும் இந்தக் கோவிலில் உள்ள தெய்வங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றார்கள்.

இந்த கோவிலில் மிக முக்கியமான இரண்டு கடவுள் யார் என்றால் பத்மாவதியும் ஆண்டாளும் ஆவார்கள்.
இந்தக் கோவிலில் தரிசனம் பெறுவது மிக சுலபமான ஒன்றாகும்.

பத்மாவதி தாயாருக்கும் சீனிவாச பெருமாளுக்கும் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்பட்டார்.
அப்போது மணமக்கள் இருவரும் வேங்கட மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.

அவர்களுக்கு அகத்தியர் தடபுடலாக விருந்தளித்தார்.

அப்போது அகத்தியர், ‘திருமணமான தம்பதிகள்
ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது’ என கூறிவிட்டார்.
மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாளும், பத்மாவதி தாயாரும் திருமலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.

அப்படி பெருமாள் தங்கிய தலம்தான் இப்போதைய
சீனிவாசமங்காபுரம் என்று கூறப்படுகிறது.
சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படுகிறது.

புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.
தனக்கு திருமணம் நடந்த நாராயண வனத்தில் 5அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமான வாலிப வடிவத்திலும்,
திருமலையில் 6அடி உயரத்தில் குடும்பதலைவர் கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார்.
இம்மூன்று முர்த்திகளும் சீனிவாச பெருமாளின் ஒரே வடிவங்களே.

சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும்,
வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும்,
இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார்.
நாராயண வனம் எங்கு இருக்கிறது?

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

திருச்சானூரிலிருந்து
31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம்.
இத்தலத்திற்கு 7கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம்.

இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
நாராயணவனத்தில் தரிசனம் முடித்து அப்படியே அருகில் நாகலாபுரத்தில் இருக்கின்ற வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கு சென்றால் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல, ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் பெற்ற மகிழ்ச்சியுடன்
ஆயிரம் அத்திவரதர் தரிசனத்திற்கு சமமான
ஸ்ரீ வேதநாராயண பெருமாளின் தரிசனத்தையும் நாம் பெறலாம்.

பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம் நாகலாபுரம் தலமாகும்.
வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமம் கேட்ட உடனே வேதத்திற்கும் இத்தலத்திற்கு சம்பந்தம் உண்டு என்று தெரிகின்றது.

நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே!
காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும்,

அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே!
‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது.

அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றார் .
இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற
மஹா விஷ்ணு எடுத்த அவதாரமாகும் .

ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது.

அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளி வந்து விழுந்தன .
அவற்றை அசுரரான சோமகுரு என்ற அசுரன் அதை திருடி எடுத்து சென்றுவிட்டான் .

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும் அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார் .
மத்திய புராணத்தில் இந்த
மச்ச அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள்.

விஷ்ணுவின் பக்தரான சத்தியவரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார் .
பகவான் தன் மச்ச அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார் . அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் .

பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார்
முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம்.

இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று.

பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும்.
மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர்.

16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது.
மூலவர் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி
ஸமேதராக காட்சி தருகிறார்.

திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.

இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.
இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான்
ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.

திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.
இந்த ஆலயத்தின் கோபுரம் பார்க்கும் போதே நமக்கு

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு

என பல்லாண்டு பாடத் தோன்றுகிறது ..
வேதநாராயணப் பெருமாள் கோவிலின் அறிவிப்பு பதாகை நம்மை வரவேற்கின்றது,

பெருமாள் மச்சாவதார கோலத்தில் அதுவும் சுயம்பு மூர்த்தமாக இவர் இருக்கும் அந்த அழகு இங்கே கிடைக்கும் தெய்வீக அதிர்வலையை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை.
பெருமாள் கோவிலில் சுற்று பிரகாரத்தில் சிவன் சந்நிதியை பார்ப்பது என்பது மிக, மிக அபூர்வம் இங்கே சுற்று பிரகாரத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியை பார்க்கலாம்.

இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும்.
இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும்.

இந்த கோயிலானது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது ஆகும் .

இவ்வூரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகமா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார் .
இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம் . இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது .சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6 .15 மணி வரை இறைவனின் மீது படும் .
அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும் ,இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும் ,மூன்றாம் நாள் இறைவனின் தலை பகுதியில் படும் .

இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .
திறந்திருக்கும் நேரம் :

காலை 6 .00 -12 .00 ,மாலை 4 .00 -8 .00

செல்லும் வழி:

இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது .
சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது . சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 km தொலைவில் இக்கோயில் உள்ளது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Mar 3
#தாம்பூல_தானம்

தாம்பூலம் தானம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் :*

களத்திர, மாங்கல்ய தோஷம் பெற்றவர்களும், செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்களும்,

கன்னி பெண்கள் சிறந்த கணவரை அடையவும் தாம்பூல தானம் செய்யலாம்.
வெற்றிலையும் பாக்கும் இணைந்ததே தாம்பூலம் ஆகும்.

வெற்றிலையில் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என மூன்று தேவியும் இருப்பதால் அதை தானம் செய்வோருக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.
என்ன தானம் செய்தாலும் அந்த தானத்துடன் தாம்பூலமும் இணைத்து கொடுப்பது உத்தம பலனை தரும்.

வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

குறைந்த பட்சம் குங்குமமாவது கொடுக்க வேண்டும்.
Read 7 tweets
Mar 2
#அபிஷேகம்_செ‌ய்வது_ஏ‌ன்

சாமி சிலைகள், விக்ரகங்களுக்கு, லிங்கங்களுக்கு பல்வேறாக அபிஷேகங்கள் செய்வதற்கான காரணம் என்ன?

சிற்பங்களை காலமெல்லாம் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மனிதர்களில் ஆண், பெண், அலி என்று இருப்பது போலவே கற்களிலும் ஆண் கல், பெண் கல், அலி கல் என்றெல்லாம் உண்டு.

அலி கல் அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது.

பதுமை செய்வது போன்ற ஒரு சிலவற்றிற்கு மட்டுமே இந்த அலி கல்லைப் பயன்படுத்துவார்கள்.
ஆண் கல்தான் முக்கியமாக எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தக் கற்களுக்கு செதுக்கி செதுக்கி உயிரூட்டம் கொடுக்கிறார்கள்.

இந்தக் கற்கள் என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு வஸ்து.

இதற்கு இயற்கையோடு இயற்கை, கல் என்பதும் இயற்கை, தர்பை என்பதும் இயற்கை.
Read 30 tweets
Mar 1
#கண்ணன்_உண்ணும்_கணக்கு.

பாரதப் போர் தொடங்கும் சமயம்.

பாரதத்திலுள்ள சில அரசர்கள் பாண்டவர் பக்கமும் சிலர் கெளரவர் பக்கமும் சென்றார்கள்.

உடுப்பி தேச ராஜா," நான் எந்தப் பக்கமும் சேரப் போவதில்லை.

எல்லா போர் வீரர்களுக்கும் உணவு அளிப்பதை என் கடமையாக எடுத்துக் கொள்கிறேன்.
மகாபாரதப் போரில் பங்கெடுத்த கெளரவ, பாண்டவ சேனை வீரர்களுக்கு உணவு ஒன்றாக பரிமாறப்பட்டது.

தர்மருக்கும் கிருஷ்ணனுக்கும் உணவை பரிமாறுவது தனது கடமையென நினைத்தார் உடுப்பி தேசத்து ராஜா.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேருக்கு உணவு தயாரிக்க வேண்டும் என்பதை உடுப்பி ராஜாவே கணக்கிட்டு சொல்வார்.
அதன் படியே (பிரசாதம்) உணவு பொருட்கள் தயாரிக்கப் படும்.

கூடுதலாகவோ குறைவாகவோ என்றும் இருந்ததில்லை.

கெளரவச் சேனை வீரர்கள் எல்லோரும் உணவு உண்ட பின் நேரே துரியோதனனிடம் சென்று ," நமது வீரர்கள் அனைவரும் உணவு உண்டு விட்டனர்" என்று சொல்வார்கள்.
Read 15 tweets
Mar 1
#கான்பூர்_ஜெகன்நாதர்_ஆலயம்

அமானுஷ்ய கோவில் - கான்பூர் பகவான் ஜெகன்நாதர் ஆலயம்.

வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை கூறும்... அமானுஷ்ய கோவில் !!

மழையின் அளவை முன்பே கூறும் அமானுஷ்ய கோவில் !!

அதிசயங்கள் நிறைந்த உலகம் இது.
இன்னும் பல அமானுஷ்ய, அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத அதிசயம் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தை பார்த்து அறிவதுதான் வழக்கம்.

ஆனால், ஒரே ஒரு ஊரில் உள்ள மக்கள் மட்டும் வானத்தை பார்க்கமாட்டார்கள்.

மாறாக அங்குள்ள கோவிலிற்கு சென்று அறிவார்கள்.
Read 10 tweets
Mar 1
#சித்தர்கள்_தரிசனம்_பெற

சித்தர் தரிசனம் பெற அகத்தியர் காட்டும் வழி

அகத்திய பூரண சூத்திரம்:

"அதிகமாய் சித்தர்களை நீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"
- அகத்தியர் -
விளக்கம்

சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....

"#ஓம்_கிலீம்_சிவாய_நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும்
Read 4 tweets
Feb 28
#கோனேரிராஜபுரம்_நடராஜர்

மனித ரூபம் கொண்டுள்ள அதிசய நடராஜர் ...!

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு இறைவன் சிலை வடிவமாக காட்சியளிப்பார்.

ஆனால் நாகப்பட்டினத்தில் மனித வடிவில் காட்சியளிக்கிறார் இறைவன். Image
இத்தல இறைவனை பூமிநாதர் என்றும், அம்பாளை அங்கவளநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிலை வடிவமாக செதுக்கப்பட்டு வைக்கப்படுகிறது.
ஆனால் நாகப்பட்டினம் மாவட்ட கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவருக்கு மட்டும் ஒரு தனிச் சிறப்புள்ளது.

மனித தோற்றம் :

இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரைப் போலவே காட்சியளிக்கும். நரம்பு, மச்சம், ரேகை, நகம் போன்றவை தெள்ளத் தெளிவாக காணப்படுவது சிறப்பாகும்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(