#எது_பக்தி_? ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத் கீதையும் பாராயணம் செய்வது வழக்கம். எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார். அதன்பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார். இது தினமும் நடந்தேறும்.
பலரும் இவரின் காதுபடவே எடுத்து உரைப்பார்கள். இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார். ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது. ஒரு நாள் அவ்விடத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக செய்தி வந்தது. உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள். மஹாப்பிரபு வரும் போது இந்த
பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத் கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள். ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரிடம் சென்று ஐயா சைத்தன்ய மஹாபிரபு வரும் நாள் அன்று மட்டும் இங்கு அமர்ந்து நீங்க பாராயணம் செய்ய வேண்டாம். குளக்கரையில் அமர்ந்து வழக்கம் போல
பாராயணம் செய்யுங்கள் என வேண்டிக் கொண்டார்கள். அவரும் அதை ஏற்றுக் கொண்டு மஹாபிரபு வரும் நாள் அன்று குளக்கரையில் அமர்ந்து பாராயணம் செய்ய முடிவு செய்தார். அன்றைய நாளும் வந்தது சைத்தன்ய மஹா பிரபுவும் வருகை தந்தார். ஊர் மக்கள் வேத கோஷமும் மங்கல வாத்தியமும் முழங்க வரவேற்பு அளித்தார்கள்
அதை மகிழ்ச்சியுடன் ஏற்ற மஹாபிரபு சில நொடிகளில் தம் காதுகளில் பாய்ந்த விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஒலிப்பது கேட்டு கூர்ந்து கவனித்து அந்த திசை நோக்கி சென்றார். உடனே ஊர் பெரியவர்கள் கவலை கொண்டார்கள். எது நடக்கக் கூடாது என எண்ணினார்களோ அது நடந்தேறியது. மஹாபிரபு பாராயணம் ஒலிவரும் திசை
நோக்கி சென்று அப்பெரிவரை கண்டார். அப்போது அப்பெரியவர் வழக்கம் போல் விஷ்ணு சகஸ்ரநாமம் முடித்து பகவத் கீதை பாராயணம் தப்பும் தவறுமாக சொல்ல ஆரம்பித்து இருந்தார். அப்பெரியவர் சைத்தன்யர் வந்ததை அறியவில்லை. உடனே சைத்தன்ய மஹாப்பிரபு சாஷ்டாங்கமாக அப்பெரியவர் காலில் விழுந்து வணங்கினார்.
அப்போதும் அப்பெரியவர் கவனிக்கவில்லை. உடனே சைத்தன்யர் அப்பெரியவரின் தோள்களை தொட்டு தட்டினார். உடனே அப்பெரியவர் நிமிர்ந்து பார்த்தார். தன்னைச் சுற்றி ஊர் மக்கள் அனைவரும் கூடி இருப்பதைப் பார்த்து, சைத்தன்ய மஹாபிரபு இவராகத்தான் இருக்க வேண்டும் என எண்ணி பிரபுவின் கால்களில் விழுந்து
நமஸ்காரம் செய்ய முற்பட்டார். உடனே மஹாப்பிரபு அப்பெரியவரை தடுத்து அப்பெரியவரிடம் தங்கள் பாராயணத்தை இடையூறு செய்தமைக்கு முதலில் மன்னிக்க வேண்டிக் கொண்டு அப்பெரியவரிடம் பேசத் தொடங்கினார். தங்கள் பாராயணம் செய்யும் ஒலி எம்மை இங்கு ஈர்த்து வந்தது. ஊரார் அனைவருக்கும் மிகுந்த சந்தேகம்
தாங்கள் தினமும் பகவத் கீதை பாராயணம் செய்யும் போது மட்டும் ஏன் தப்பும் தவறுமாக பாராயணம் செய்கிறீர்கள் என வினவுகிறார்கள் எனக் கேட்டார். உடனே அப்பெரியவர் கூறினார் தான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து விட்டு பகவத் கீதை பாராயணம் செய்ய ஆரம்பித்து முதல் ஸ்லோகம் ஆரம்பித்து உடனே
கண்முன் குருக்ஷேத்திர பாரத போர் கண் முன் தெரிகிறது, இரண்டாவது ஸ்லோகம் ஆரம்பித்த உடன் கௌரவ சேனையும் பாண்டவ சேனையும் கண்முன் வருகிறது, இப்படியே ஒவ்வொரு ஸ்லோகம் ஆரம்பித்து உடனே அந்த ஸ்லோகத்திற்கான காட்சிகள் கண்முன் தோன்றுகிறது. கடைசியாக அந்த புருஷோத்தமன் பாகவத ஸ்ரீகிருஷ்ணர் கண்களில்
தெரிய ஆரம்பித்தவுடன் என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோடுகிறது. அதனால் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை ஆகவே தப்பும் தவறுமாக பாராயணம் செய்கிறேன் எனக்கூறி சரி நாளை இத்தவறை திருத்தி கொள்ள வேண்டும் என நினைப்பேன் ஆனால் வழக்கம் போல் வாசுதேவ ஸ்ரீகிருஷ்ணரை கண்களில் கண்டவுடன்
என் கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை அதனால் தினம் தோறும் தப்பும் தவறுமாக பாராயணம் செய்ய நேறுகிறது என வருத்தத்துடன் கூறினார். உடனே சைத்தன்ய மஹாபிரபு அப்பெரியவரை சாஸ்டாங்கமாக வணங்கி ஊர் மக்கள் அனைவரையும் அர்த்த புன்னகையுடன் பார்த்தார். அவர்கள் அனைவரும் வெட்கி தலை
குனிந்து அப்பெரியவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்கள்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்று (05/03/2023)மாசி ஆயில்யம். #பிள்ளை_உறங்காவில்லி_தாசர் திருநட்சத்திரம்.
ஒரு முறை எம்பெருமானார் விபீஷண சரணாகதி பற்றி காலட்சேபம் செய்து
அருளினார். கோஷ்டியில் கடைசி வரிசையிலிருந்த தாசர் எழுந்து, வெளியே செல்ல முற்பட்டார். எம்பெருமானார் ஆச்சரியப்பட்டு, தாசரே ஏன் வெளியே செல்கிறீர்
என்று கேட்க, ஸ்ரீராமர் விபீஷண ஆழ்வாரை ஏற்றுக் கொள்வதற்கே, சுக்ரீவனுடனும், ஜாம்பவானுடனும் விவாதம் செய்ய வேண்டியிருந்த போது, தன்னைப் போன்ற தாழ்ந்தவர்களுக்கு, மோக்ஷம் கிட்ட வாய்ப்பில்லை என்று வருத்தத்துடன் செல்வதாகச் சொன்னார். எம்பெருமானார், “நமக்கு மோக்ஷம் கிட்டினால், உமக்கும்
மோக்ஷம் கிட்டும், பெரிய நம்பிக்கு மோக்ஷம் கிட்டினால், தமக்கு அது கிட்டும், ஆளவந்தார் மோகம் அடைந்தால் பெரிய நம்பிக்கு அது கிட்டும்; இது சங்கிலித்தொடர் போல் பரம்பரையில் மேற்செல்லும்; மேலும் நம்மாழ்வார் தமக்கு மோக்ஷம் கிட்டியதென்று அறிவித்ததைப் போலவும், பெரிய பிராட்டியாரும் நாம்
#மகாபெரியவா பெரியவா சொல்படி வாழும் முறை: 1. காலை ஸூர்யோதயத்துக்கு முன்னால் வீட்டில் உள்ள குழந்தைகள், வ்யாதியஸ்தர்கள், மிகவும் வயஸானவர்கள் தவிர, மற்ற அனைவரும் எழுந்துவிட வேண்டும். 2. ஆண், பெண் இருவருமே எப்போதுமே நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டும். 3. வீட்டில் காலை, மாலை விளக்கேற்ற
வேண்டும். நல்லெண்ணெய், நெய் இவற்றால் ஏற்றலாம். வீட்டு வாஸலில் விளக்கு வைப்பது, துர்ஶக்திகள் வீட்டுக்குள் வராமல் ரக்ஷிக்கும். 4. பெண் குழந்தைகள், கன்யா பெண்கள், ஸுமங்கலிகள் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும். கருப்பு பொட்டு
அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வைத்துக் கொள்வதும், வைத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான். 5. பெண் குழந்தைகள், கல்யாணமான பெண்கள் தோடு, வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது. தங்கத்தில் பண்ணிய மெட்டி, கொலுஸு இவைகளை பெண்கள் காலில் அணியக்கூடாது. தங்கத்தில் மஹாலக்ஷ்மி
#ஶ்ரீவைஷ்ணவம்#மகாபாரதம்#கண்ணன்
கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான். வீதியெங்கும் அலங்கார வளைவுகள். பூரணகும்பம் கொண்டு வரவேற்பு. பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான். கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!கண்ணன் கேட்கிறான், "பச்சை வர்ணம் பூசப்
பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே, அது யாருடைய வீடு?”
“அச்சுதா அது என்னுடைய வீடு" என்கிறார் துரோணர்.
கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"
கிருபர்: ''மாதவா! அது என்னுடைய வீடு.''
கண்ணன்: "மஞ்சள்
வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா அது என்னுடைய வீடு''
கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப்
#MahaPeriyava
Narratator: Sashikala
Maha Periyava Darshana Anubavangal
“I heard the name of Sri Chandrashekharendra Saraswathi Swami belonging to Kanchi for the first time in 1961. My grandfather late Dr.Harihar Gangadhar Moghe’s disciple late Keshavaram, wrote him informing
that he needs Shri Sankaracharyal Swamiji’s and Shri Dakshinamoorthy’s hand-drawn pictures. “Shashi is studying in Art school. Would she draw the pictures?” he had enquired. Along with the letter he had sent the photos of Swami and Dakshinamurthy. My grandfather Dr. Moghe was
well versed in music. He had taught music to Prof Keshavaram and to me also. As per the desire of my grandfather and also the brother disciple, I drew the pictures and sent them to Shri Keshavaram. He put those pictures before the Mahaswami. Swami touched those pictures with his
மகாபெரியவர் தன்னை நேரில் வந்து தரிசித்து வேண்டுவோருக்கு மட்டுமல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தன்னை நினைத்துப் பிரார்த்திப்பவர்களுக்கும் அனுகிரஹம் செய்யத் தவறுவதில்லை. பல காலத்துக்கு முன் சிதம்பரத்தில் பிரபலமான
ஆடிட்டராக இருந்தார் பாலசுப்ரமணியம் என்பவர். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் பரம்பரையில் வந்தவர். அவருக்கு காஞ்சி மகாபெரியவர் மீது, இயல்பாகவே மிகுந்த பக்தி இருந்தது.
அடிக்கடி காஞ்சிபுரத்துக்குச் சென்று மகானை தரிசிக்க அவருக்கு நேரம் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம்
காஞ்சி சென்று மகானை தரிசித்து விடுவார் அவர். ஒவ்வொரு நாளின் விடியலும் மகாபெரியவா படத்தின் முன் நின்று சிறிதுநேரம் 'சந்திரசேகரா ஈசா' என்று காஞ்சி மகானின் திருப் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பதில் தான் தொடங்கும். அதுபோலவே தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பும் மகாபெரியவா திருநாமத்தைச்
#FoodForThought There was a woman named Subhadra who lived with her hunter husband in the forest. They did not have children for many years. They offered a lot of prayers and did austere penance and finally they were blessed with a son. They brought him up with so much love and
care. Unfortunately one day a snake stung their son and he was struggling for his life. The wife was distraught and called to her husband. The husband searched for the snake which stung his child, brought it and told his wife that he would slay its head immediately. The wife said
That is not going to bring back our son’s life. But the hunter said, by killing this I can prevent it from stinging others and killing them. The wife said but there are so many other snakes in the forest, what are you going to do about them. As they were arguing the snake said