சென்னையில் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதிய நேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மணக்க மணக்க இருந்தது.
கடைக்காரரிடம் சாம்பார் சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிது நேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலை செய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார்.
சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என கேட்டார்".
கடைக்காரர் சிரித்துக் கொண்டே சொன்னார் "இன்னைக்கு நல்ல சாப்பாடு சாப்பிட்டாலே பல வியாதி வருது இதுல பிளாஸ்டிக் கவர்ல சாப்பாட்டை சூடா வச்சு சாப்பிட்டால் என்ன வியாதி வரும் தெரியுங்களா கேன்சர் கூட வரலான்னு சொன்னார்,
நான் படிக்காதவன் சார் என்ன வியாதி வரும் வராதுன்னு தெரியாது, பிளாஸ்டிக்ல சாப்பாடை சூடா வச்சி சாப்பிடுவது உடம்புக்கு கெடுதின்னு தெரியும் , வாழை இலையில் சாப்பிட்டால் நல்லதுன்னு தெரியும், என் கடையில் பெரிய பணக்காரன் சாப்பிட போவதுமில்லை
வியாதிவந்தா நல்ல ட்ரீட்மெண்ட் எடுத்த்துக்கறதுக்கு, சாதாரண ஆளுங்கதான் சாப்பிடவருவாங்க அவங்களுக்கு பெரியவியாதிவந்தா சமாளிக்க முடியாதுங்க,
ஒரு ஆளுக்கு வாழையிலை 2 ரூபா செலவாகும், வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் சீட் யூஸ் பன்னா மாசம் 200 லிருந்து 300 ரூபாய் மிச்சமாகும் இந்த பணத்தை வைத்து கோடீஸ்வரன் ஆக முடியாது,
சமையல் கூட முடிஞ்ச அளவுக்கு நல்ல பொருளை வச்சுத்தான் செய்யுறேன், வாழை இலை யூஸ் பன்றதாலே நான் போடுற குப்பைக்கூட மத்த ஜீவராசிக்கு சாப்பாடு தாங்க, மாடு வந்து வாழையிலையை சாப்பிடும் இடமும் க்ளீனாயிடும்,
இதுக்கு மேல என் கடைல பெரும்பாலும் பேச்சுலர் பசங்க சாப்பிடுவாங்க, இவங்க பெரும்பாலும் சாப்பாடு வெளியே தான் சாப்பிடுவாங்க நம்ம கடைல சாப்பிடும் போதாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டும்னு பிளாஸ்டிக் யூஸ் பண்றதில்லை.
என்னால சாப்பாட்ல விஷத்தை(பிளாஸ்டிக்) கலக்க மனசுவரலங்கன்னு சொல்லிட்டு கடைசியில் வாழையிலையில் வச்சுதான் சாப்பாடு கொடுத்தார்.அவர் கடைல பார்சல் சாப்பாடு கூட வாழை இலைலதான் குடுக்குறாரு.
இன்னைக்கு உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் கூட சாப்பாடு கெடாமல் இருப்பதற்கு என்ன வழின்னு யோசிக்கிறாங்களே தவிர, சாப்பிடறவங்க நலனை கண்டுக்கறதில்ல.
ஆனா சாதாரண படிக்காத ஒருத்தர் இவ்வளவு யோசிப்பாருன்னு நெனச்சுக்கூட பாக்கல .காசு சம்பாதிக்க என்ன வேணுன்னாலும் செய்யலாம்னு மனசாட்சி இல்லாம சாப்பாட்டு பொருள்ல கலப்படம் செய்யுற இந்த காலத்துல, இப்படியும் ஒருத்தர்னு ஆச்சரியமா இருந்தது..
திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.
1
சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள்.
2
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள்.
ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???
கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????
மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????
🤔
உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.
அருள்மிகு ரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் (வெங்கடேசப்பெருமாள்) திருக்கோவில்...
காரமடை,கோயம்புத்தூர்.
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தனது ஆட்சிக் காலத்தில் இத்திருத்தலத்திற்கு வந்து மூலவர்-தாயார் சன்னதிகளையும் மதில், தேர் திருப்பணியும், செய்ததாக வரலாறு கூறுகிறது.
1
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார்.
2
காரமடையில் முன்பு காரை செடிகளும், தண்ணீர் மடைகளும் ஆங்காங்கே இருந்ததால் காரைமடை என்று பெயர் பெற்று, பிறகு மருவி காரமடை என ஆனது.
எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார்.
முனிவர் சொன்னார். "ரொம்ப சுலபம். 'நாரம்' என்றால் 'தண்ணீர்'. 'அயனன்' என்றால் 'சயனித்திருப்பவன்'. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.
நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நாராயணனிடமே ஓடினார்.
ஐயனே! உம்மை நான் நாராயணா...நாராயணா... என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!''
குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும் குறும்பாகவே பதிலளித்தான்.
அடடா...எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக் கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்''.